Sunday, 7 April 2013

பாவ நகரம் - VII























ஹோலி அன்று போலீஸார் சிலர் மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டி ஒரு பெண்ணின் மீது மோதி உயிரிழப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
                                                                                                                                                                                                -செய்தி
__________________________________________________________________________________________________

பாவ நகரம் - 7

பாவ நகர காவல்துறை கமிஷனர் அலுவலகம் எதிரே உள்ள ஒரு டீக்கடை:

                கமிஷனர் அலுவலகம் பரபரப்பை பூண்டிருந்தது. ஆனால் அதன் எதிரே இருந்த டீக்கடையில் ஒருவன் மிகவும் சாவகாசமாக சிகிரெட் புகைத்துக் கொண்டிருந்தான். அவன் புகைத்து முடிக்கவும் ஒரு ஆட்டோ அங்கு வந்து நிற்கவும் சரியாக இருந்தது. அதிலிருந்து கீதா இறங்கி சுற்றும் முற்றும் பார்த்தாள். பின் அவனைப் பார்த்து சிரிக்க ஆரம்பித்தாள்.

காவல்துறை கமிஷனர் அலுவலகம்

                கமிஷனரின் அறையில் ACP தரண் அவருடன் பேசிக் கொண்டிருந்தான்.
               
“தரண் இது ரொம்ப முக்கியமான கேஸ்" கமிஷனர் பேசுவதை தரண் பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்தான். “போலிஸ் ஸ்டஷன்லேயே பாம் வச்சிருக்காங்க. எவ்வளவு சீக்கிரம் இந்த கேஸ முடிக்க முடியுமோ முடிச்சிருங்க.”
     
இடையில் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது. ஒரு அதிகாரி வந்து பத்திரிக்கையாளர் சந்திப்புக்கு அனைத்து பத்திரிக்கையாளர்களும் வந்து விட்டதாகத் தெரிவித்தார். இன்னும் பத்து நிமிடத்தில் வந்து விடுவதாக அவரிடம் தெரிவித்தார் கமிஷனர். அதிகாரி விடைபெற்று வெளியேறினார்.

“தரண், கண்ணன் இந்த கேஸ்லயும் உனக்கு  உதவியாயிருப்பார்.”

தரண் அவரையே கவனித்துக் கொண்டிருந்தார்.

“24 போலீஸ் காரங்க செத்து போயிருக்காங்க. ஒரு செக்யூரிட்டிய கொன்னிருகாங்க. எவ்வளவு சீக்கிரம் இந்த கேஸ முடிக்க முடியுமோ முடிச்சிருங்க. அவங்க பேங்க கொள்ளை அடிக்க மட்டும் இத செஞ்சதா தெரியல”

“எப்படி சார் சொல்றீங்க”

“அவங்க கொன்ன செக்யூரிட்டி ஒரு ரிடையர்ட் போலீஸ்”

“இது ஏதேச்சையா கூட நடந்திருக்கலாம்”

“ஆமா! ஆனா செத்து போன 24 பேர்ல 2 பேர் அவர்கூட வேல பாத்தவங்க”

தரண் நிதானமாக அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்தான். அப்பொழுது கண்ணன் அங்கு வந்தான். கமிஷனரைப் பார்த்து ஒரு சல்யூட் வைத்தான்.

“வாங்க கண்ணன்” என்ற கமிஷனர் தொடர்ந்தார். “இன்னிக்கு நடந்த விஷயங்கள் நம்ம டிபார்ட்மெண்டுக்கு ஏற்கனவே இருக்க கெட்ட பேர அதிகப் படுத்தியிருக்கு. நீங்க தரண் கூட சேர்ந்து இதுக்கு காரணமானவங்கள சீக்கிரமா கண்டுபிடிக்கனும்.”

“கண்டிப்பா சார், I will try my best” என்றான் கண்ணன்.

மீண்டும் அந்த அதிகாரி வந்து பத்திரிக்கையாளர் சந்திப்பை நினைவு படுத்தினார்.

“நீங்க வர்றீங்களா தரண்”

“இல்ல சார், நான் அந்த பேங்குக்கு போகனும். கண்ணன் வாங்க”

தரணும் கமிஷனரும் ஒன்றாக அந்த அறையில் இருந்து வெளியேறி வெவ்வேறு திசையில் சென்றனர்.

தரண் வெளியே செல்லும் போது அங்கிருந்த கான்ஸ்டேபிளைப் பார்த்து “என்னய்யா, எல்லாரையும் செக் பண்ணிதான விடறீங்க?” எனக் கேட்டான்.

“ஆமா சார்”

“பத்திரிக்கை காரங்கள?”

“சார், அவங்கள எப்படி?” என நெளிந்தார் அந்த கான்ஸ்டேபிள்.

“சரி, சரி” என்று கண்ணனை அழைத்துக் கொண்டு தனது ஜீப்பை நோக்கி போனான் தரண். அப்பொழது பாவ நகர தொலைக்காட்சியை சேர்ந்த கேமராமேனும், நிருபரும் ஒரு வெள்ளை நிற மாருதி வேனிலிருந்துவேக வேகமாக உள்ளே செல்வதைப் பார்த்தான்.

“கவர்மென்ட் டி.வி.  லேட்டா வரங்க பாரு” என சலித்துக் கொண்டே கண்ணன் அந்த ஜீப்பை ஓட்ட ஆரம்பித்தான்.

காவல்துறை கமிஷனர் அலுவலகம் பத்திரிக்கையாளர் சந்திப்பு அறை

      கமிஷனர் அறைக்குள் வந்ததும் அறையை பரபரப்பு தொற்றிக் கொண்டது. அனனவரும் கேள்விகளைக் கேட்க தயாராகினர். கமிஷனர் மைக்குகள் முன் தன்னை அமர்த்திக் கொண்டதும் கேள்விகள் கிளம்பின. அனைத்து தொலைக்காட்சிகளிலும் இந்த சந்திப்பு நேரடியாக ஒளிப்பரப்பாகிக் கொண்டிருந்தது.

      “சார், யார் செஞ்சாங்கனு தெரிங்சுதா?

      “இன்னும் இல்லை”

“தீவிரவாதிகளோட வேலையா?’

“இப்ப தான் விசாரணைய ஆரம்பிச்சிருக்கோம். இப்போ எதுவும் சொல்ல முடியாது.”

“யார் விசாரணை பண்றாங்க?”

“தரண்”

“அவர் இந்த பிரஸ் மீட்டுக்கு வரலயா?”

“எங்க ஸ்ட்அவர்?”

“விசாரணைய ஆரம்பிக்க போய்கிட்டிருக்கார்.”

கமிஷனர் அலுவலகம் அருகே உள்ள சிக்னல்

      தரணின் ஜீப் சிக்னலுக்காக காத்துக் கொண்டிருந்தது. கண்ணன் மெல்ல பேச்சை ஆரம்பித்தான். சிக்னல் டைமர் இன்னும் மூன்று நிமிடங்கள் காத்திருக்க வேண்டும் என்றது.

      “என்ன தைரியம் சார் அவங்களுக்கு நாலு ஸ்டசன்ல பாம் வெச்சிருக்காங்க”

      தரண் சிரித்துக் கொண்டே சொன்னான், “சாதாரணமான ஒரு கான்ஸ்டேபிள அடிச்சா என்ன பண்ணுவீங்க”
     
      “என்ன பண்ணுவோமா? ஒரு ரெண்டு நாள் ஸ்டசன்லயே வெச்சு அடிப்போம்”

      “அப்படி இருக்கும் போது, ஒருத்தன் நாலு ஸ்டசன்லன்யும் பாம் வெக்கிறானா?”

      “பாம் வெக்கிறானா?”

      “இங்க பாத்தியா,  கார் கண்ணாடி கவர், பட்ஸ் விக்கறவங்க எத்தன பேர். வாழ எல்லோருக்கும் ஒரு வழி இருக்கு. ஆனா இதையெல்லாம் விட்டுட்டு ஒருத்தன் இந்த மாதிரி பண்றானா?”

      “நீங்க அவன் செஞ்சது சரினு சொல்றீங்களா?” என கண்ணன் கேட்டுக் கொண்டிருக்கும் போதே அவர்களுக்கு எதிப் புறம் கடந்து சென்ற ஒரு தனியார் தொலைக்காட்சி வேன் தரணின் கண்ணில் பட்டது.

கமிஷனர் அலுவலகம்

                கமிஷனர் அலுவலகத்தின் வெளியே பாதுகாப்புக்கு நின்றிருந்த கான்ஸ்டேபிளை நோக்கி  டீக்கடையில் சிகிரெட் பிடித்துக் கொண்டிருந்தவன் ஓடி வந்தான்.

                “சார், சார்"

                “என்னயா?”

                “இந்த போன கமிஷனர் கிட்ட குடுக்கனுமா சார். இல்லேனா பாம் வெடிக்குமா சார்"

                “யார்யா குடுத்தா?”

                “ஒரு பொண்ணு சார் அழகா இருந்துச்சு"

கமிஷனர் அலுவலகம் அருகே உள்ள சிக்னல்

                தரணுக்கு அந்த வேனைப் பார்த்ததும் ஏதோ உறைத்தது. அனைத்து டி வி வேன்களிலும் அந்த சேனலின் பெயர் எழுதப் பட்டிருக்கும். ஆனால் பாவ நகர தொலைக்காட்சி ஆட்கள் வந்தது பெயர் எழுதப்படாத வெள்ளை வேன். தரண் தனது செல்போனில் கமிஷனரின் எண்ணை டயல் செய்து கொண்டே இறங்கி  கமிஷனர் அலுவலகம் நோக்கி ஓட ஆரம்பித்தான்.

கமிஷனர் அலுவலகம்
               
                கமிஷனர் அந்த செல்போனை வாங்கி காதில் வைத்தார்.
           
“கமிஷனர் போன loudspeakerல போட்டு மைக் கிட்ட வைங்க" கமிஷனர் சற்று தயங்க "யோசிக்கிற ஒவ்வொரு நிமிஷமும் ஆபத்துதான்" என்றது அந்த குரல்.

கமிஷனர் loudspeakerல் அந்த போனை மைக்குகள் அருகில் வைத்தார். அதிலிருந்து ஒரு குரல் தெளிவாக ஒளித்தது.

“இன்னிக்கு ஆரம்பிச்சிருக்கிறது, நீங்க எல்லாரும் இந்த ஊரொட மக்கள் எல்லாரும் செஞ்ச பாவத்தோட பலன்தான். அதனால வர போற முடிவ எல்லாரும் சந்தோஷமா ஏத்துக்கோங்க"
               
                தரண் அதற்குள் கமிஷனர் அலுவலகம் அருகே வந்துவிட்டான். கமிஷனரின் போனை வேறொரு அதிகாரி எடுத்தார்.
               
                “பாவ நகர டி வி கேமராமேன், ரிப்போடர் இருக்காங்களா அங்க"

                “அவங்க இப்போதான் போனாங்க சார்"

                “பாம் இருக்கு அங்க" என தரண் சொல்வதற்கும், மைக் முன் வைக்கப் பட்டிருந்த அந்த போன் இணைப்பு துண்டிக்கப்படுவதற்கும், கமிஷனர் அலுவலகத்தில் குண்டு வெடிப்பதற்கும் சரியாக இருந்தது.

                                                                                                                                -பாவங்கள் தொடரும்.
               

     

               
               
               

Tuesday, 2 April 2013

பணக்கார கூலி




தட்டச்சு வாழ்க்கை ஆனது

எலியும் மெளசாய் போனது 
 
விரட்டி பிடிக்கும் பூனையாய்

தினம் தினம் துரத்தும் மானுடன்


சிகரம் தொடவே துடிக்கிறான்

அலுவலக பணியில் களிக்கிறான்

இரவும் பகலும் அறியாமல்

விரல்கள் தேய உழைக்கிறான்


கூண்டில் அடைத்த கிளியாய்

உலகை என்றும் காண்கிறான்

சிற்றுண்டி,உணவாய் இருந்தாலும்

கைகளை ஏனோ மறக்கிறான்

கெளரவம் கொண்டு

spoonஜ எடுக்கிறான்


வணக்கம் என்பதை மறந்து

Hai....hello...., மோகம் கொள்கிறான்

தாய்மொழி அதை துறந்து

அந்நிய மொழி ஆனாலும்

ஆங்கிலம் அதை தான் உரைக்கிறான்


இனியாவது ஒரு விதி செய்வோம்

நம் தாய்மொழி காக்க

தமிழில் பேசி

தமிழனாய் வாழ்ந்து பழகுவோம்.....!



Monday, 1 April 2013

என்னவேணும்னாலும் பேசலாம்...




இறுதிப் போர் நடைபெற்ற காலத்திலிருந்தே உள்ளே கொதித்துக் கொண்டிருந்த உணர்வை, அரசியல் நாடகங்களின் காரணமாக வெளிக்கொணர முடியாமல் தவித்தத் தமிழக இளைஞர்களின் மனநிலையை கொழுந்துவிட்டு எரிய செய்தது திலீபன், ஜோ.பிரிட்டோ, ஷாஜிபாய் ஆண்டனி, மணிகண்டன், சண்முகபிரியன், ரமேஷ், லியோ ஸ்டாலின், பால் கென்னட் ஆகிய எட்டு மாணவர்களின் அறப்போராட்டம். இந்த போராட்டத்திலும் அரசியல் சாயம் கலக்க ஒவ்வொரு கட்சியும் முனைவது தான் வேடிக்கைக் கலந்த வேதனையையளிக்கிறது.
ஆட்சியில் இருக்கும்போது அமைதி, ஆட்சியை இழந்துவிட்டால் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் வரை இனப்போராட்டம் என்ற தனது வெற்றி சூத்திரத்தையே, டெசோ அமைப்பின் மூலமாக மீண்டும் தேர்ந்தெடுத்த தமிழின தலைவர் அவர்களுக்கு இம்முறை எதிர்மறை வினையே பரிசாய்க் கிடைத்தது. டெசோ அமைப்பின் மூலமாக உண்ணாவிரதத்திற்கு அழைப்புவிடுத்தார். அந்த நேரத்தில் மாணவர்களின் போராட்டம் வெடிக்க ஆரம்பிக்க, அதை தனக்கு சாதகமாக்கிக் கொள்ள நினைத்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவையும் தி.மு.கவின் அமைப்பு செயளாலர்கள் இருவரையும் போராட்டக் களத்திற்கு அனுப்பிவிட்டு, தி.மு.கவுடன் இணைந்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவர் என்று திட்டமிட்டே ஊடகங்களில் செய்தியை பரப்பினர். ஆனால் அறவழிப் போராட்டத்தில் அரசியல் கலக்கவிடாமல் விரட்டியடித்தனர் மாணவர்கள். அதுவரை இந்த விவகாரத்தில் அமைதிக்காத்த தமிழக அரசு, எங்கே மாணவர்கள் தி.மு.கவுடன் இணைந்துவிடுவார்களோ என்ற பயத்தில் மாணவர்களை கைது செய்தது, கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறையை அறிவித்தது. ஆனால் இவை எவையும் போராட்டத்தை சிறிதளவும் குறைக்கவில்லை, மாறாக போராட்டம் தீவிரமடையத் தொடங்கியது. தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் தங்கபாலுவின் மீது செருப்பை வீசிய செயல் மாணவர்களின் போராட்டத்தில் ஒரு கரும்புள்ளி.

ஈழத்தமிழர்கள் விவகாரத்தை மிகச்சரியான நேரத்தில் தன் கையில் எடுத்துக்கொண்டது அ.தி.மு.க. அரசு. மத்திய அரசின் கூட்டணியிலிருந்து தி.மு.க வெளியேறியதை கிண்டலடித்து, கொலைசெய்யப்படுவதற்கு முன்பு எடுக்கப்பட்ட பாலச்சந்திரனின் புகைப்படத்துடன், “தாத்தா இத நீ அப்பவே செஞ்சுயிருந்தா என் உயிர் போயிருக்காது இல்ல” என்ற அ.தி.மு.கவினரின் கட்-அவுட்டுகள் தேர்தல் நேர அரசியல் பேச ஆரம்பித்துவிட்டன. இலங்கை வீரர்கள் சென்னையில் விளையாட அனுமதி மறுப்பு, பொது வாக்கெடுப்பு வேண்டுமென்று சட்டசபையில் தீர்மானம், இலங்கையில் நடைபெறவிருக்கும் காமன்வெல்த் நாடுகளின் மாநாட்டை வேறு இடத்தில் நடத்தவேண்டும் இல்லையேல் இந்திய பிரதமர் மாநாட்டை புறக்கணிக்க வேண்டுமென பிரதமருக்கு கோரிக்கை என அதிரடிக்கும் தமிழக முதல்வரின் செயல்கள் அனைத்தும் தேர்தல் நேர அரசியலோ என்ற ஐயமே மேலோங்கி நிற்கிறது.  மின்வெட்டு, விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்குலைவு என அ.தி.மு.கவின் மீது வெறுப்பில் இருந்த மக்கள் ஈழத்தமிழர்களின் விவகாரத்தில் முதல்வரின் செயல்பாட்டைக் கண்டு வரவேற்பளிக்கத் தொடங்கிவிட்டனர். அப்படியாயின் தி.மு.க கையிலெடுத்த அஸ்திரத்தை வைத்தே தி.மு.கவை வீழ்த்திவிட்டார் ஜெ. என்பதுவே உண்மை.

காங்கிரசுடன் இனியும் கூட்டணியிலிருந்தால் தமிழகத்தில் தி.மு.க அழிந்தேவிடும் என்ற நிலையில் கூட்டணியிலிருந்து வெளியேறியிருக்கிறது தி.மு.க. அதில் அவர்களுக்கு சிறிதளவும் திருப்தி இல்லை என்பதை “தி.மு.க வெளியேறியதால் இலங்கை தமிழர்களுக்கு நீதி கிடைத்துவிட்டதா...? 2007-ல் தி.மு.க வெளியேறியிருந்தாலும் இதே நிலைமைதான் ஏற்பட்டிருக்கும்” என்ற அறிக்கையின் மூலமாக தெளிவாக நமக்குரைக்கிறார் நம் தமிழின தலைவர். இவ்வளவு நடந்த பிறகும் இன்னும் விடாத அந்த பதவி ஆசையை என்னவென்று சொல்வது.

புதிய தலைமுறை தொலைக்காட்சியின் “நேர்ப்பட பேசு” நிகழ்ச்சியில் பங்கேற்ற காங்கிரசின் முக்கிய தலைவர்களுள் ஒருவரான  ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்  அத்தொலைக்காட்சி நிறுவனத்திற்கும் விடுதலை புலிகளுக்கும் தொடர்பிருக்கிறதென்றும். அத்தொலைக்காட்சி நிறுவனமே மாணவர்கள் போராட்டத்தை தூண்டியது என்றும் குற்றம் சாட்டினார். காங்கிரஸ் கட்சியின் இன்னொரு தலைவரான பீட்டர் அல்போன்ஸ் வெளிநாட்டு விவகாரங்களில் இந்தியா தலையிடாதென கூற, ஐ.நா சபையில் ஈரானுக்கெதிராக மட்டும் இந்தியா செயல்பட்டது ஏன் என எதிர்கேள்வி எழ, ஈரான் எங்கேயோ இருக்குற நாடு அதனால் பிரச்சனை எதுவும் ஏற்ப்படபோவதில்லை ஆனால் இலங்கை அப்படியா...என்று கூறுகிறார். இப்படி கேடுக்கட்ட நிலையில் தான் இருக்கிறது தமிழகத்தில் காங்கிரஸ். கேரள மீனவர்கள் தாக்கப்பட்ட விவகாரத்தில் இத்தாலி வீரர்களை தண்டிக்க வீரியம் காட்டிய பிரதமர் காலங்காலமாக தாக்கப்படும் தமிழக மீனவர்களுக்கெதிராக ஒரு கண்டனக்குரல் கூட எழுப்பாததன் காரணம் என்ன? ஒரு நாட்டு மக்களைக் கொல்லும் மற்றொரு நாட்டிற்கு ராணுவப் பயிற்சியளிக்கும் ஒரே நாடு இந்தியாவாகத்தான் இருக்கும்.

1965-ல் இந்தி திணிப்புக்கெதிரான மாணவர்களின் போராட்டம் காங்கிரஸ் அரசை ஆட்சியிலிருந்து வீழ்த்தியது. இன்று நடைபெற்று வரும் மாணவர்களின் போராட்டம் அதற்கு சற்றும் சளைத்ததல்ல. காங்கிரசுடன் யார் கூட்டணி வைத்தாலும் தமிழகத்தில் மண்ணைக் கவ்வ வேண்டியநிலை ஏற்பட்டுவிடும் என்பதால் ஒவ்வொரு கட்சியும் மண்டையை பிய்த்துக்கொண்டிருக்கிறது. இனியாவதொரு விதி செய்வோம். அதை எந்நாளும் காப்போம்.


சின்னப்பையன்

சிமிட்டல்கள்
























பொய்க் கோபம்!

இப்போதெல்லாம் அதிகம் கோபம் கொள்ள
பழக்கிவிட்டாய்,
நீ சமாதானம் செய்வதை எதிர் பார்த்துப் பார்த்து…!
நண்பனிடமும் கோபம் கொண்டு என்ன செய்ய?



வாழ்கைப் பக்கங்கள்…

நீயே நிரம்பி வழிகிறாய்,
என் டைரியின் பக்கங்களிலும்,
நெஞ்சத்து நினைவுகளிலும்..!



உதிராப் பூ!

உன் பார்வை பூக்கள் எனக்காகவே பூத்தன,
நான் பறிக்காமல் போகலாம், ஆனால்..
வேறொருவர் மீது வீசி விடாதே!



கேள்வி

என் இரு கை சேர்த்து வினவி பார்க்கிறேன்,
ஏன் அது தர மறுக்கிறது?
நம் கை கோர்த்திருக்கும் போது ஏற்பட்ட மாற்றத்தினை!



பிடித்தது… எது?

பைத்தியம் பிடித்தது,
கவிதை எழுதினேன்..!
பைத்தியம் பிடித்ததால் அல்ல,
உன்னை பிடித்ததால்…!



கனவின் நினைவு..

கெஞ்சுவதும் கொஞ்சுவதும் நீயாகி இருந்தால்,
மிஞ்சுவதும் மிதப்பதும் நானாகி இருப்பேன்..
கவிதையும் பாடலும் உன் வசம் என்றால்,
வரிகளும் குரல் தேடி என் புகல் சேரும்..
பயணமும் பிரார்த்தனையும் உன் விருப்பமானால்,
என் விரலும் விரதமும் உனக்காய் இருக்கும்..
நினைவுகளும் கற்பனைகளுமே நீயாகி போனதால்,
கண் திறந்தே கண்ட கனவு காற்றோடு கலைந்தது!!!



நாம்!

என்னை வாசிக்க நீ,
உன்னை நேசிக்க நான்,
நமக்குள் நாம்!


பிரியங்கா

என்ன வேணுனாலும் பேசலாம்



பாரதியின் தமிழ் பற்று:-


இதை உங்களில் சிலருக்கு முன்பே தெரிந்து இருக்க வாய்ப்பு இருக்கிறது.


விடுதலை போராட்டத்தின் போது ஒரு முறை காந்தி ஆங்கிலேயருக்கு எதிரான ஒரு போராட்டதில் கலந்து கொண்டார். அதில் அவர் பேசியதை பார்த்து வியந்து பாரதி அவருக்கு ஒரு பாராட்டு கடிதம்  எழுதினார். அதில் "தாங்கள் நடத்திய போராட்டத்தில் உங்களுடைய பேச்சு பிரமாதமாய் இருந்தது. நீங்கள் அந்த போராட்டத்தில் உங்கள் தாய் மொழியான குஜராத்தியிலோ அல்லது வேறு ஏதேனும் ஒரு மொழியிலோ பேசி இருக்கலாம். ஆனால், நாம் நம் நாட்டை விட்டு யாரை விரட்டி அடிக்க போராடிக்கொண்டு இருக்கிறோமோ அவர்கள் தாய் மொழியான ஆங்கிலத்தில் பேசியது தான் எனக்கு வருத்தத்தை தருகிறது" என்று எழுதி இருந்தார்.

காந்தி அதற்கு எழுதிய மறு கடிதத்தில் "உண்மை தான் பாரதி. நான் செய்தது தவறே. ஆனால்,

எனக்கு ஒரு சந்தேகம் நீங்கள் ஏன் எனக்கு எழுதிய கடிதத்தை ஆங்கிலத்தில் எழுதி இருந்தீர்கள்"

என்று கேட்டார்.


பாரதி எழுதிய மறு கடிதத்தில் "நான் யாருடைய மனதையாவது காய படுத்தும் படி நேர்ந்தால்

அதை ஏன் தாய் மொழி மூலமாக செய்ய விரும்ப மாட்டேன்" என்றார்.

பாரதி தமிழ் மீது வைத்து இருந்த பற்றுக்கு இது ஒரு சின்ன உதாரணம்.


மாலினி

குறள் மழை - 5


திருவள்ளுவரின் அடுத்த அதிகாரம், இல்வாழ்க்கை. இது  இல்லறவியலில் அடங்குகிறது. இது திருக்குறளின் 5-வது அதிகாரமாகவும் இல்லறவியலின் முதல் அதிகாரமாகவும் திகழ்கிறது. இதனை இப்போது ருசிப்போமா? ஆயிரம் உறவுகள் கிடைப்பினும் ஒரு மனிதனின் வாழ்வு முழுமை பெறுவது அவன் இல்லறத்தில் தான். இல்வாழ்க்கையை சுபமாக அமைப்பதெப்படி? இதோ வள்ளுவனே கூறுகிறான் கேளுங்களேன்.

'
இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை.

மங்கையை மணந்தான்,
மாசிலா பெற்றோரையும்
மதிப்பில்லா பிள்ளையையும்
மறியாதைத் தவறா உறவுகளையும்
பேணிக் காப்பான்!



துறந்தார்க்கும் துவ்வாதவர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை

பெண்ணின் கரம் பிடித்து 
அவளின் மனம் பறித்தவன் என்பவன்....
துறவு கொள்ளும் துறவியர்
இறவு கொள்ளும் இல்லாதவர்
இறப்பின் மடியில் உறங்கிக்கொண்டிருக்கும் அனைவருக்கும்
உதவும் பொருட்டு
இப்பூவுலகில் பிறந்த நல்லவன்....



தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை.

கணவன் என்பவன் 
கீழ்வரும் ஐவரை ஓம்பி ஒழுக வேண்டும்!
அவர்கள்....
இறப்பைத் தழுவியோர்
மேல் உலகின் தேவர்
வாசல் தேடி வரும் விருந்தினர் 
நம் நலம் நாடும் சுற்றத்தார்
கணவன் ஆகிய தான்!!




பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல்.

பழி ஒன்றும் பட்டுவிடுமோ என 
பற்றற்று பொருள் சேர்த்து
பரந்த மனத்துடன் 
பலருக்கும் பகிர்ந்தளிப்பான் பரம்பரை
என்றும் அழியா!
அறிவோம் இதை அவன் வழியாய்!



அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.


பெற்றப் பிள்ளை மீது அன்பு
மற்ற உற்றார் இடத்து அறன்
இவ்விரண்டும் பேணி இல்லறம் நடத்தும்
இவன்
 வாழ்வின் பண்பும் பயனும் அதுவே!
காணலாம் இந்தப் படைப்பை பேருந்துகளில்
எனினும் இதுவும் ஒன்று நம் மனதில் புணைய வேண்டிய பெரிய உந்துகளில்




அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில்
போஒய்ப்
 பெறுவ எவன்.

பிழையாமல்
பிறரை பிழைக்காமல்
அற வழியில்
அன்போடு இல்லறம் நடுத்துபவன்

இல்வாழ்க்கையைத் தவிற பிற இன்பங்களைத் தேடுதல் அரிது!


இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்

முயல்வாருள் எல்லாம் தலை. 


இறைவனை நாடி 
அவனிடத்து சேரும் வழிகளுள் 
தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்க்கெல்லாம் முதலானவன்!
கணவன் என்னும் கொள்கை பிழைக்காமல் பிழைப்பவன்!!


ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை 

நோற்பாரின் நோன்மை உடைத்து. 


முற்றிலும் பற்றற்று 
எல்லாவற்றையும் துறந்த 
துறவப் பொறுமையின் தலைகனமும் குறைந்திற்று 
இல்லறம் புகுந்து 
நல்லறம் புணர்ந்து
சொல்லும் வண்ணம் வாழும் 
கணவன் இவன் தன் வாழ்க்கையைக் கண்டு


அறனென்ப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன்பழிப்ப தில்லாயின் நன்று.

இல்ல அறத்தில் இல்லை துறம் 
துறவும் பிழையுமானால் அதில் எங்கே அறம் !
எனவே தான் 
இல்லற அறம் துறவைக் காட்டிலும் ஓங்கி நிற்கிறது!



வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உநற்யும் 
தெய்வத்துள் வைக்கப் படும். 


கீழ் உலக இல்லத்தில் 
அறம் பூண்டு வாழும் இவன்
மேல் உலகின் 
தேவர்களுள் ஒன்ரெனக் கருதப்படுவான்!

ஜெய கீதா