Wednesday, 12 December 2012

புகைப்படங்கள்




 






















விஜய் Che



சித்திரம் பேசுதுங்க

கல்யான்



















என்ன வேணுனாலும் பேசலாம்


நிலம், நீர், நெருப்பு, ஆகாயம், காற்று என பஞ்ச பூதங்களை தெய்வமாக கொண்டாடிய மனிதன் ஏனோ ஆறாவதாய் மின்சாரத்தையும் அதில் சேர்க்க மறந்துவிட்டான். அந்த பூதம் பட்டணத்திற்கு மட்டுமல்ல பட்டிக்காட்டிற்கும், பழங்குடியினர்க்கும் கூட இன்று அத்தியாவசியமான தேவையாகிவிட்டது. மனிதன் வாழ்வதற்கு காற்றுக்கு இணையாக இன்று மின்சாரத்தின் தேவையும் உள்ளது. மின்சாரம் செயற்கை சக்தி ஆகையால் தான் அதற்கு அங்கு இடம் தரப்படவில்லை என்றும் வாதிடலாம், ஆனால் மின்சாரத்தின் மூலமே மின்னல் தான். மின்சாரத்தைப் பற்றி பேச வேண்டுமென்றால் மின்னலிலிருந்து தான் தொடங்க வேண்டும்.

ஏ.ஐ.ஒப்பாரின் உயிரினத் தோன்றல் கோட்பாடு அடிப்படை வேதியியல் கூட்டுப் பொருட்களுடன், மின்னல், புறஊதாக் கதிர்களின் தொடர் செயல்பாடுகளால் உலகில் முதல் உயிரி தோன்றியிருக்கலாம் என்பதாகும்.




ஸ்டான்லி மில்லர் & ஹெரால்ட் யுரே

ஒப்பாரின் கருத்தை ஆய்வுக்குட்படுத்திய மில்லர் மற்றும் யுரே, வளிமண்டலத்தில் நிறைந்திருக்கும் வாயு மூலக்கூறுகளான ஹைட்ரஜன், மீத்தேன், அம்மோனியா ஆகியவற்றுடன் நீரையும் சேர்த்து ஒரு குடுவையில் வைத்து குளிர்வூற்றினர், அதாவது செயற்கை முறையில் பனிப்பாறைகளை உருவாக்கினர். அதில் பல லட்சம் வோல்ட் மின்சாரத்தை ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர்ந்து செலுத்தி வந்தனர். அதாவது செயற்கை முறையிலான மின்னலை செலுத்தி வந்தனர். அவர்களின் ஆய்வு முடிவு ஒரு உயிரி தோன்றுவதற்கான அனைத்து மூலக்கூறுகளும் அதில் நிறைந்திருப்பதை உலகிற்கு அறிவித்தது. 
மிக மிக குறைந்த வெப்ப நிலையும், மிக மிக அதிக வெப்ப நிலையும் ஒரே நேரத்தில் வாயு மூலக்கூறுகளுடன் இணைந்தால் அமினோ அமிலங்கள் உருவாகும் என்பதே அந்த ஆய்வின் முடிவு. ரொம்ப சிம்பிளா சொல்லணும்னா மழை, மின்னல், ஹைட்ரஜன், மீத்தேன், அம்மோனியா இவையெல்லாம் இணைந்தால் அங்கே ஒரு உயிரி உருவாவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம்.


பெஞ்சமின் ஃப்ராங்க்ளின்

மின்னியலின் தந்தை என்றழைக்கப்படும் பெஞ்சமின் ஃப்ராங்க்ளின் தான் முதன்முதலில் மின்னலில் இருப்பது ஒரு விதமான மின்சக்தி என்பதையும், அதில் நேர்முனை(POSITIVE) மற்றும் எதிர்முனை(NEGATIVE) மையங்கள் இருக்கின்றன. அவை சக்தியை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு கடத்துகின்றன என்பதையும் தெரிவித்தார். இவரின் இந்த அடிப்படை கருத்தே தாமஸ் ஆல்வா எடிசன் என்னும் நவீன உலகின் சிற்பிக்கு அடிப்படை ஆதாரமாகியது.



தாமஸ் ஆல்வா எடிசன்

எடிசன் கண்டுப்பிடித்த மின்விளக்கு, உலகை மீண்டும் உருவாக்கியது. டங்ஸ்டன் மின்னிழையில் மின்சாரத்தை செலுத்தி ஒளிரச்செய்த எடிசனின் கண்டுப்பிடிப்புகள் அனைத்தும் மின்சாரத்தைச் சார்ந்தே இருந்தது. இங்கே தொடங்கப்பட்ட மின்சாரத்தின் பயணம், கம்பியில் கடத்தப்படும் மின்சாரத்தைப் போலவே வேகமாய் வளர்ந்தது.

மின்சாரத்தை எதிலிருந்து வேண்டுமானாலும் உருவாக்கலாம் என்றாலும், உற்பத்திக்காகும் செலவு முக்கியப் பிரச்சனையாக இருக்கிறது. மின்சாரத்தை எதிர்க்காலத்திற்காக சேமித்தும் வைக்கமுடியாது. மின்சாரத்தை பயனீட்டிற்குக் கொண்டு செல்லும்போது ஏற்படும் கம்பி வழி இழப்பும் அதிகம். மின்சாரத்தை வீணாக்காமல் சேமிப்பது கூட உற்பத்திக்கு சமம்.

அணுமின் சக்தியை விட, சோலார் மற்றும் காற்றாலை மின் உற்பத்தியே சிறந்தது. இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு குஜராத் மாநிலம். உலகிலேயே மிகப்பெரிய சோலார் மின்உற்பத்தி மையங்கள் அமைத்து மிகப்பெரிய வெற்றியை கண்டிருக்கிறது அம்மாநிலம். ஆறுகள், வாய்க்கால்கள், ஓடைகள் ஆகியவற்றின் மேற்பரப்பில் சோலார் தகடுகளால் மூடி மின்சாரத்தை உற்பத்தி செய்து பெரிய அளவில் சாதனைப் புரிந்துள்ளது. தமிழக அரசும் இப்போது இந்த சோலார் முறையை கட்டாயம் ஆக்கும் முயற்சியில் ஈடுப்பட்டுள்ளது.

காற்றாலை மின்சாரத்தை பெருக்காமல் நாம் கைவிட்டதும் இப்போது நிலவும் மின்பற்றாக்குறைக்கு ஒரு மிகப்பெரிய காரணியாகும். நீங்கள் என்னை கைவிட்டாலும் நான் உங்களை கைவிட மாட்டேன் என்று நம்மை முழு இருளில் சிக்காமல் காத்துவருவதும் இது தான். கடற்கரை ஓரப் பகுதிகள் முழுவதும் காற்றாலைகளை நிறுவி மின்உற்பத்தியில் என்றோ தன்னிறைவு அடைந்திருக்கலாம். ஏனோ தடுமாறி நிற்கிறது அரசு. தமிழக அரசு தற்போது, மழைநீர் சேகரிப்பு திட்டத்தை கட்டாயமாக்கியது போல சோலார் திட்டத்தையும் கட்டாயமாக்கவிருக்கிறது. இது வரவேற்கப்பட வேண்டிய ஒன்றுதான் என்றாலும், மழைநீர் சேகரிப்பு திட்டத்தை கண்டுக்கொள்ளாமல் விட்டதுபோல் இத்திட்டத்தையும் விட்டுவிடக்கூடாது என்பதை கருத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

          

     யோகி

சிமிட்டல்கள்



பாரி ஆனான்

எச்சில் சோற்றைக் கூட
தானம் தர மறுப்பவன்
பாரி ஆனான் அன்று
பிச்சைக்காரனுக்கு தானம் தந்து
இரயில் நிலையத்தில் சில்லரை கேட்டதால்………


தட்டச்சு….

அனுதினமும் நான் குட்டப் படுகின்றேன்
உன் கவிதைகள் அழகாய் ம் வர
வேதனையுடன் தட்டச்சு….

கோவிலுக்கு வெளியே கடவுள்

தினம் தினம் கடவுளை காண்கிறான்
கருவரைக்கு கூட செல்லாமல்
தனக்கு பிச்சை இட்டவர்களின் முகம் கொண்டு….

கண்ணாடி பிம்பம்

தினம் தினம் அவள் கண்ணாடி முன் நிற்கின்றாள்
ஏன் அவளுக்கு தெரியவில்லை
அவள் பிம்பமாய் நான் இருப்பது


ரமேஷ் குமார் பாலன்







நம்பிக்கை

தோல்வியால் துவண்ட மனிதனை பார்த்து சிரித்தது,
எத்தனை முறை கிளை உடைக்கப்பட்டாலும்
துளிர் விட்ட மரம்….!                                          

தீரா தாகம்

எத்தனை முறை வாங்கினாலும்,
தீரா தாகம்...
எதிர் வீட்டு குழந்தையின் எச்சில் முத்தம்!


                                                                                  பிரியங்கா

இருபதா? அறுபதா?


பாவ நகரம் - முகவுரை




ஒரு அமைதியான இரவு:

அந்த இரவின் அசாதாரண அமைதி அவனது வயிற்றில் ஏதோ ஒன்றை உருட்டிக் கொண்டிருந்தது. அந்த இருளின் அடர்த்தியான அமைதி மட்டுமே அவனுக்கு துணையாக இருக்கிறது. தெரு நாய்கள் அந்த அமைதியை குலைக்க முயன்று தோற்றுக் கொண்டிருந்தன. அவன் தன் காலடி சத்தத்தை வைத்து அமைதியை குலைக்க விரும்பவில்லை அதனால் அவன் மெதுவாகவே நடந்தான். அவன் கடிகாரம் அதிகாலை இரண்டு மணி என சிரித்தது. அவன் தன் பையை மீண்டும் தொட்டுப் பார்த்துக் கொண்டான்அவன் தன் மொபைல் போனை அனைத்த போது நீண்ட சாலையின் ஒரு திருப்பத்தை அடைந்திருந்தான்.

எப்போதும் பெரிய நகரங்களில், இரவு முழுவதும் போலீஸ் வாகனங்கள் அலைபாய்ந்து கொண்டிருக்கும். அத்திருப்பத்தில் அவனும் ஒரு போலீஸ்  வாகனத்தை எதிர்கொண்டான். அதனுள் ஒரு ஓட்டுநரும், ஒரு சப் இன்ஸ்பெக்டரும் இருந்தனர். இரவில் சந்தேகத்திற்கு உரிய முறையில் சுற்றுபவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து அவர்கள் முகவரியை சேகரித்து அனுப்புவார்கள். சில நேரங்களில் அவர்களை அதிகாலை வரை உட்கார வைத்து, பின்னர் அனுப்புவார்கள். இன்று டிரைவர் சேகரும்,  S.I. ரம்யாவும் அப்பணிக்கு அனுப்பபட்டனர்.

தனியாக நடந்து வரும் அவனை போலீஸ் ஜீப்பில் இருந்த இருவரும் கவனித்தனர். சேகர் அவனை கையசைத்து கூப்பிட்டான். அவன் அருகில் வந்ததும்யார் நீ? எங்கு செல்கிறாய்என கேட்டான். அவன் ஹிந்தியில் ஏதோ பேசினான். சேகர் மீண்டும் அதே கேள்விகளை ஆங்கிலத்தில் கேட்டான். ஆனால் அவன் ஹிந்தியில் மட்டுமே பேசினான். ரம்யா அவனை ஜீப்பில் ஏற்றுமாறு சைகை செய்தாள். சேகர் அவனை பின் இருக்கையில் ஏற்றிக் கொண்டு அந்த போலீஸ் ஜீப்பை பகுதி 1 போலீஸ் நிலையத்தை நோக்கி ஓட்டினான். அந்த ஜீப்பில் ஏற்கனவே அவனைப் போன்ற மூன்று பேர் அமர்ந்திருந்தனர்.

காவல் நிலையத்தில் நால்வரையும்வாங்கடா! போய் மூலைல உக்காருங்கஎன வரவேற்றார் வெங்கடேசன், தலைமை காவலர். நால்வரும் ஓரமாக நின்றனர். வெங்கடேசன் ஒரு அரசியல்வாதி போல் உடையணிந்த மனிதனிடம் ஏதோ முக்கியமான விஷயமாக பேசிக் கொண்டிருந்தார். சிறிது நேரம் கழித்து அரசியல்வாதி போலிருந்த மனிதர் தனது பாக்கெட்டில் பத்திரமாக பாதுகாத்து வைத்திருந்த கவரை ஒப்படைத்தார். அந்த மனிதன் சென்ற பின் வெங்கடேசன் ஒவ்வொருவராக அழைத்தார்.

ஒவ்வொருவரும் வெங்கடேசனிடம் சென்று தங்களது விவரங்களை கொடுத்தனர்அவர்களது பெயர் மற்றும் முகவரியை சேகரித்தப் பின்னர், வெங்கடேசன் அவர்களது சட்டைப் பைகளிலிருந்தப் பணத்தை வாங்கிக் கொண்டார். இறுதியாக இவன் முறை வந்தது. அவன் இந்தியில் பேசிய போது, வெங்கடேசன் முதலில் அவனை ஏற இறங்கப் பார்த்தார். பின்னர் தமிழ்  ஆங்கிலமாவது பேச தெரியுமா? என கேட்டார். அவன் இல்லையென தலையசைத்தான்வெங்கடேசன் அவரே ஒரு பெயர், முகவரியை எழுதிக் கொண்டு வழக்கம் போல் அவனது பாக்கெட்டில் கை வைத்தார். அதில் ஒரு பழைய 5 ரூபாய் நோட்டு இருந்தது. அவனை போகுமாறு வேகமாக சைகை செய்தார்.

அவன் சென்ற பின் வெங்கடேசன் ஒரு பையைப் பார்த்தார். அது அந்த 4 பேரில் ஒருவனின் பை என்பதை யூகித்தார். காலை வீட்டுக்கு செல்லும் போது அதை எடுத்து செல்லலாம் என மறைத்து வைத்து விட்டு அடுத்து வந்த சிலரின் முகவரியை வாங்க ஆரம்பித்தார்.

அவன் காவல் நிலையத்தில் இருந்து சிறிது தூரம் சென்ற பின் ஒரு சொகுசு கார் வந்து அவனை அழைத்துச் சென்றது. அவன் தான் அணைத்து வைத்திருந்த செல் போனை மீண்டும் உயிர்ப்பித்தான். உயிர்ப்பித்தவுடன் அது சில குறுந்தகவல்களை கக்கியது. அவனைப் போலவே அவர்களும் ஒவ்வொரு பையை வேறு காவல் நிலையங்களில் விட்டு விட்டு வந்திருந்தனர். அவன் ஒரு எண்ணுக்கு டயல் செய்து எதையோ பேசிவிட்டு, பின் மீண்டும் அந்த எண்களுக்கு ஒரு குறுந்தகவலை அனுப்பினான்.
      
      “From tomorrow this sin city will start paying for its sins”

அதைப் படித்தப் பின் அனைத்து செல் போன்களும் அணைக்கப்பட்டன. அமைதியான வழியில் வேகமாக பயணித்த அந்த சொகுசு காரைப் பார்த்து நாய்கள் குலைக்கத் தொடங்கின.



தொடரும்_ _ _ _ _

.சராசரி இந்தியன்