Pages
- விஜய்
- தீபன்
- யோகி
- கண்ணம்மா
- ஜெய கீதா
- மாலினி
- சராசரி இந்தியன்
- இன்பா
- சித்ரா
- சிந்துஜா
- ரமேஷ்குமார் பாலன்
- பிரியங்கா
- தோழர் யுவராஜ்
- தீபக் விமல்
- Kalyan
- அமுத இளவரசி
- வினோதன்
- சின்னப்பையன்
- கோழி
- முருகன்
- பாவ நகரம்
- குறள் மழை
- இந்திய வரலாறு
- லட்சங்களில் ஒருவன்
- புத்தக மதிப்புரை
- திரைப் பார்வை
- கலாச்சாரக் கேள்விகள்
- என்ன வேணுனாலும் பேசலாம்
- காதல் காலங்கள் - தொடர் கதை
- துளித் துளியாய்
- சிமிட்டல்கள்
- மதிவதனி
- புகைப்படங்கள்
- சௌமி
- அபிலேஷ்
- சாகுல்
- அடைமழை
Thursday, 24 October 2013
Monday, 21 October 2013
Sunday, 20 October 2013
Saturday, 19 October 2013
Friday, 18 October 2013
THE BLUE UMBRELLA - புத்தக மதிப்புரை
சமீபத்தில் THE BLUE UMBRELLA என்ற புத்தகம் வாசித்தேன். இது குழந்தைகளுக்கான நன்னெறி கதையினை சார்ந்தது. RUSKIN BOND
என்ற எழுத்தாளர் இந்த புத்தகத்தினை எழுதியுள்ளார்… RUSKIN இந்தியாவின் மிகச் சிறந்த
ஆங்கில நாவலாசிரியர். இவரின் படைப்புகள் பெரும் வரவேற்பினை பெற்று வருகிறது. பத்மஸ்ரீ,
சாகித்ய அகடமி போன்ற உயரிய விருதுகள் பெற்றுள்ளார்.
BLUE UMBRELLA
கதைக்குள் போவோம்..
இந்த கதை ஹிமாலயா மலைப்பிரதேசத்தின் GARHWAL என்னும் கிராமத்தில்
நடக்கிறது. பின்யா அப்பகுதியில் மாடுகள் மேய்க்கும் சிறுமி. ஒருமுறை மாடுகளை மேய்த்துக்
கொண்டிருக்கும் போது அங்கு பிக்னிக் வந்த ஒரு தம்பதியினரை தொலைவில் இருந்து பார்க்கிறாள்.
அவர்களின் கையில் ஒரு அழகான நீல நிறக் குடை ஒன்று இருப்பதை பின்யா பார்க்கிறாள். மெல்ல
அருகில் சென்று அந்த நீலக் குடையை பார்த்துக்கொண்டே நிற்கிறாள். அவர்கள் அவளுக்கு உணவு
வேண்டுமா என்று கேட்கிறார்கள் வேண்டாம் என்கிறாள். ரூபாய் தருகிறார்கள் வேண்டாம் என்கிறாள்.
பின் புலியின் நகம் கொண்ட அதிர்ஷ்ட சங்கிலி பின்யாவின் கழுத்தில் இருப்பதை பார்கிறார்கள்.
அழகாய் இருக்கிறதே எங்களுக்கு தருகிறாயா நாங்கள் பணம் தருகிறோம் என்க பின்யாவோ குடையை
பார்த்தவாரு இருக்கிறாள். கடைசியாக பின்யா இந்த புலி நகம் கொண்ட செயினை உங்களுக்கு
தருகிறேன் பதிலுக்கு அந்த நீல நிறக்குடையினை எனக்கு தருவீர்களா என்று கடைசியாக பேசுகிறாள்..
சிறிது யோசித்த தம்பதியினர் பிறகு குடையினை பின்யாவிக்கு கொடுத்துவிட்டு செயினை வாங்கிக்கொள்கிறார்கள்.
இப்போது நீல நிற
அழகுக் குடை பின்யாவின் வசம் வந்தது. அதை எப்போதும் தன் கையில் வைத்துக்கொண்டேதான்
மாடுகளை மேய்ப்பாள். தன் அண்ணன் பிஜ்ஜுவிடம் அதை காண்பித்து மகிழ்கிறாள். அந்த கிராமத்தில்
உள்ள எல்லோரும் பின்யாவின் குடையை அதிசயமாக பார்க்கிறார்கள்.. சிலர் எப்படியாவது அந்த
அழகு குடையை இவளிடமிருந்து பறித்துவிட முற்படுகிறார்கள்…
அங்கே டீ கடை நடத்தி
வருபவர் திரு ராம் பரோஷா. அவர் அந்த கிராமத்தின் பெரிய மனிதர் பணக்காரர் கூட. அந்த
குடை அவரின் கண்களில் படுகிறது. டீ வாங்க பின்யா குடையுடன் வருகிறாள். ராம் பரோஷா அவளிடம்
இந்த குடையை எனக்கு விலைக்கு தருவாயா என்று கேட்க பின்யா முடியாது என்கிறாள். இந்த
அழகிய விலை மதிப்புடைய குடை இவளின் கையில் இருப்பதா என்று பொறாமைப்படுகின்றனர் அங்குள்ள
சிலர்.
பின்யா அந்த அழகிய
குடையினை தினமும் எல்லோர் கண்களிலும் படுமாறு எப்போதும் விரித்தே செல்கிறாள். ஒரு நாள்
குடை காற்றில் அடித்துச் சென்றுவிடுகிறது.. மலைகளில் அது பறந்தோடுகிறது. மிகுந்த சிரமத்திற்க்கு
பிறகு குடை மீண்டும் கிடைக்கிறது. பின்யா எதிர்பார்த்த மழைக் காலம் வருகிறது.. மழையில்
குடையினை பிடித்துக்கொண்டே செல்கிறாள். மற்றவர்கள் மழைக்கு பயந்து ஓடுகிறார்கள். பின்யாவோ
குடையை பிடித்தவாறூ ஓடாமல் மிக மெதுவாக சிரித்து கொண்டே நடக்கிறாள்.
பிஜ்ஜுக்கு பள்ளி
விடுமுறை வருகிறது. டீக்கடை பரோஷா அவனை வேலைக்கு அமர்த்தி எப்படியாவது அந்த குடையை
பின்யாவிடம் வாங்க திட்டமிடுகிறார். ஆனால் பிஜ்ஜுக்கு வீட்டு வேலைகளே போதுமானதாக இருக்கிறது
என்று அவனின் அம்மா சொல்லிவிடுகிறாள். முடிவாக பக்கத்து கிராமத்திலிருந்து பிஜ்ஜுவுடன்
படித்த ராஜாராம் என்ற சிறுவனை வேலைக்கு அமர்த்துகிறார்.
சில வாரங்கள் கழித்து
பின்யா அந்த பக்கம் குடையுடன் வருவதை பார்த்த பரோஷா கோபப்படுகிறார். இதை அறிந்த ராஜாராம்
முதலாளிக்கு அந்த குடையின் மேல் கண் இருப்பதை உணர்கிறான். பிறகு ராஜாராம் முதலாளியிடம்
அந்த குடையினை அவளிடமிருந்து நான் பறித்து தருகிறேன் பதிலுக்கு என்னுடய சம்பள்த்தை
உயர்த்துவீர்களா என்கிறான். பரோஷா சரி என்கிறார். சரியான நேரம் பார்த்து பின்யாவிடமிருந்து
குடையினை பறித்து ஓடுகிறான் ராஜாராம். அழுதுகொண்டே பின்னால் துரத்துகிறாள் பின்யா..
பிறகு அந்த பக்கம் வந்த பிஜ்ஜு தங்கையின் அழுகுரல் கேட்டு அங்கே வருகிறான். நடந்ததை
அழுது கொண்டே சொல்கிறாள் பின்யா. பின் பிஜ்ஜு வேகமாக ஓடி ராஜாராமிடம் சண்டையிட்டு குடையினை
மீட்கிறான். சண்டையின் முடிவில் பரோஷாதான் இப்படி செய்யச் சொன்னார் என்று ராஜாராம்
உண்மையை உளறிவிடுகிறான். இந்த நிகழ்வுக்கு பிறகு அவருடைய கடையில் அந்த கிராமத்தில்
உள்ள மக்கள் யாரும் பொருட்கள் வாங்குவதில்லை. பின்யா அந்த கடைப் பக்கம் குடையினை பிடித்து
செல்லும் போது குடையை மடக்கி வைத்துக் கொண்டு ஓடிவிடுவாள். இதை பார்த்த பரோஷா தன்னுடய
செயலுக்கு வருத்தப்படுகிறார். அவரின் வியாபாரம் குறைந்து கடும் நஷ்டப்படுகிறார்.
சில வாரங்கள் கழித்து
பின்யா அந்த கடையில் பொருட்கள் வாங்க வருகிறாள். பரோஷாவிடம் தேநீர் கொடுங்கள் என்று
கேட்கிறாள். குடையுடன் வந்த பின்யா குடையை கடையிலேயே விட்டுச் செல்கிறாள். குடையைப்
பார்த்த பெரியவர் ஓட்டமாய் ஓடிப்போய் உன் குடையை மறந்து விட்டுவிட்டாய் என்று பின்யாவிடம்
கொடுக்கிறார். இல்லை நான் வேண்டுமென்றே தான் விட்டு விட்டு வந்தேன் என்கிறாள். இதை
நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு ஓடுகிறாள் பின்யா.. பெரியவர் பின்யாவின்
செய்கையை கண்டு வியக்கிறார். பின் தன்னிடம் உள்ள விலை உயர்ந்த கரடியின் நகம் பதித்த
செயினை பின்யாவிற்க்கு பரிசாக அளிக்கிறார்.. இத்துடன் கதையும் முடிகிறது..
கதை ஆங்கிலத்தில்
இருந்தாலும் கதை முடியும் போது ஒருவித மன நிறைவு ஏற்பட்டது ஆகவே இதை உங்களுடன் பகிர்வதில்
மகிழ்ச்சி கொள்கிறேன்…
Thursday, 17 October 2013
மன்னிப்பாயா?
மன்னிப்பாயா?
வரமாட்டேன் என்று தெரிந்தும்
கோவில் நடை சாத்தும் வரை
என்னை எதிர்பார்த்திருப்பாய்
எப்போதோ என் கூந்தலில்
இருந்து உதிர்ந்த ஒன்ரிரண்டு பூக்களை
இன்றும் பொக்கிசமாய் வைத்திருப்பாய்
என் பெயரினைத்
தெரிந்துகொள்ள எத்தனையோ
வழிகளில் முயன்று தோற்றிருப்பாய்
என் பெயர் தெரிந்த மறுகணம்
என்னை நொடிக்கு ஒருமுறை
உனக்குளே அழைத்து ரசித்திருப்பாய்
என்னைப்பற்றி யாரேனும் கேட்டிருந்தால்
என்னைப்பற்றி எனக்கே தெரியாத
நிறைய விசயங்களை அளந்திருப்பாய்
என்னைக் காண முடியாத விடுமுறை
நாட்களில் உன்னில் உள்ள என்னை
கவிதையாய் தொடுத்து எழுதியிருப்பாய்
தேடவே முடிதாத கூட்டத்தில்
என்னைத் தொலைத்து விட்டு
பின் தேடித் தேடி ஓய்ந்திருப்பாய்
என்னிடம் பேசிச் சிரித்து
சண்டைகள் போட ஆயிரம்
காரணங்களை வைத்திருப்பாய்
அவ்வப்போது மாற்றிய என்
வீட்டின் முகவரிகளை கண்டுகொள்ள
அயராது மெனக்கெட்டிருப்பாய்..
நீ என்னை பார்த்த நாட்களை
நாட்குறிப்பிலும், நான் உன்னைப் பார்த்த
நாட்களை நெஞ்சிலும் பதித்திருப்பாய்..
நான் கோபமாய் பார்த்திடும்
தருணம் நீ வேகமாய் நடையிட்டு
சோகமாய் கிடந்திருப்பாய்…
தோழிகளுடன் உன்னைப்பற்றி
முனுமுனுத்ததை ஊகித்துக்கொண்டு
அங்கும் இங்கும் குதித்திருப்பாய்..
எனக்கு கஷ்டமே வைக்காமல்
உன் பெயரை உன் நண்பனைக்
கொண்டே சத்தமாய் கூப்பிடச்சொல்லியிருப்பாய்
வீட்டிலிருந்து அலுவலகம், பின்
அலுவலகமிருந்து வீடு வரை என்னை
அக்கறையாய் பாதுகாத்திருப்பாய்…
என் பெயர் கொண்ட உன் தோழியை
அடிக்கடி சம்பந்தமே இல்லாமல்
சண்டைக்கு இழுத்திருப்பாய்
பேசக் கிடைத்த நல்ல சந்தர்ப்பங்களை
வேண்டுமென்றே நழுவவிட்டு அன்றிரவு
தூக்கத்தில் மொத்தமாய் உளறியிருப்பாய்
எங்கோ திசையில் இருக்கும்
எனக்காக நான் வேண்டிடும்
கடவுளிடம் பல முறை வேண்டியிருப்பாய்
இப்படி நம் காலத்தில்
உன் எல்லா துன்பத்திற்கும்
காரணம் நானாக இருத்திருக்க
வாய்ப்புகள் அதிகம் என்பதால்
என்னை தண்டித்து
மன்னிப்பாயா?
உன்னாலே தன்னாலே மாறினேன்.!
உன்னைக் கண்ட நொடிப் பொழுதினில்
உருண்டோட ஆரம்பித்தது
எனது மாறுதல் சக்கரம்
என்னவென்று உரைப்பேன்
எனக்கான மாற்றங்களை ..!
இரவுகளைப் பகலாக்கினேன்
பகல்ப் பொழுதினில்
உன் நினைவை ஊற்றினேன்
நீல வானின் மேகங்களாய்
உன் நினைவுகள்
உள்ளங்கையின் ரேகைகளாய்
உன் உறவுகள்
கடிகாரச் சத்தத்திலோ
சட்டென்று உன் இதயத்தினோசை
காதோரத்தில் வீசிடும் காற்றதுவோ
உன் காதலையே கீச்சிடுகின்றது
வாசமில்லா மூங்கிலாய்
புதைக்கப்பட்ட உணர்ச்சிகளோ
உன் எதிரில் மட்டும்
ஒரு தலை உரையாடல் செய்கின்றன
கூரிய பார்வை கொண்ட
எனது கண்கள் ஏனோ
உன் கண்களைக் கண்ட வேளைகளில்
உருட்டிவிட்ட சோழியாய்
உருண்டோடிய படியே இருக்கின்றன
நீயும்,உன் காதலும்
உடனிருப்பதால் தானோ என்னவோ
தனிமையினை உணர்ந்ததில்லை நான்
என்ன விந்தையிது
உன்னுடன் இருக்கும்
ஒவ்வொரு நொடிக்கும்
என் காதலும்,கவிதைகளும்
புதுப்பித்துக் கொண்டே இருக்கின்றன
நாள்தோறும்,
நான் படித்து வரும்
மந்திரம் ஒன்று உரைக்கவா?
மாற்றம் உனக்கானதென்றால்
மாறியபடி இருப்பேன்
என் மரணம் வரை.!
பெண்ணியம்
"பெண்ணியம்",
அரிதாரத்தால் அலங்கரித்து
பொய்மையினால்
முலாம் பூசப்பட்ட
அழகுச் சொல்
குறிப்பிடப்பட்டது
பெண்ணாயினும்
குறிப்பிட்டவன் ,
ஆணென்பதால் தான்
உட்குறிப்புகளையும்
உடன் சேர்த்து விட்டானோ?
நாளுக்கொரு
நவநாகரீகப் போராட்டம் அவளுக்கு,
அவள் எதிர்கொள்வது
தனிப்பட்ட ஆணையல்ல
ஆயிரம் ஆண்டுகளாய்
அசையாதிருக்கும்
ஆணாதிக்க சமூகத்தை
அழுகைகளும், ஆதங்கங்களும்
நிரம்பிய விழிகளுக்குள்ளிருக்கும்
வேள்வித் தீயே
அவளது,
ஒவ்வொரு விடியலையும்
உண்டாக்கித் தருகிறது
பெயரளவிலாவது
பெண்ணியம் காத்திருக்கப்படின்
பல ,
பெயரறியா சகோதரிகள்
பிரியா விடை பூண்டிருப்பரோ?
என் செய்ய,
உண்மைகள் மறைக்கப்படுவதும்
ஊமைகள் உருவாக்கப்படுவதும்
பாரத தேசத்திற்கு
புதிதல்லவே !
பெண்ணவளை,
போகப் பொருளாக்கும்
வஞ்சக நெஞ்சமே !
உம்மை ஈன்றவளும்
உடன் பிறப்பாய் உள்ளவளும்
பெண் தான் என்பதனை
என்று தான்
நீவீர் உணரீரோ ?
போலிப் பெண்ணியமதனை
மாற்றித் தாரீரா..
இல்லை,
புது விதிகளதை
நாங்களே,
புகுத்திக் கொள்ளவா?
தோழரே ! தோழியரே !
"பெண்ணியம்"
அது உண்மையாய் உருப்பெற
வேண்டும் கொஞ்சம்,
உங்கள் "கண்ணியம்"
Monday, 14 October 2013
சிமிட்டல்கள்
உரையாடல்களினிடையே,
ஒரு நொடி மௌனம்
காதல் உரைத்து விட
உனக்கு நானளிக்கும்
இடைவேளை..
நமக்கான இடைவெளியினை
அதிகம் செய்தது
காலமா?
அல்ல,
காலம் கடந்த
என் காதலா?
அலட்சியத்தால்
உன் கைகள் கோர்க்காமலேயே
அருகிலிருந்து வந்தேன்
அதிர்ந்து போனேன்
நம் பாதைகள்
மாறியதை அறிந்த பின்னர்
ஆம் !
உதடுகளை ஊமையாக்கியவள்
நான் தான்,
எப்படியேனும் நீ ,
உண்மை உதிர்த்துவிடுவாய்
என்ற உறுதியினால்
காதலில்லை என்று
இதயத்தை
இறுக்கிக் கொண்டவள்,
கனவுகளில் மட்டும்
கண்ணீருடன் கலங்குவதேனோ?
நீ இல்லாத நான்,
காற்றில்லாக் குழலென்றால்
மிகைதானோ ?
இல்லை
இனிப்பில்லா விருந்தென்றால்
குறைதானோ?
லஞ்சம்
தாயின் கருவில்
பிறக்கும் சிசுவில்
வளரும் குழந்தை
வளர்ந்த முதியோர்
அனைவரை கொல்லும்
பணத்தின் வண்ணம்
பிறந்திடும் லஞ்சம்
மருத்துவம் என்னும்
மறு உயிர் தந்திடும்
கடவுளின் தொழிலிலும்
தயக்கம் இன்றி
தலைவிர்த்து ஆடும்
இரத்தம் சுண்ட
உறிஞ்சிடும் லஞ்சம்
திருமணம் என்னும்
இரு உயிர் இணைந்திடும்
சொர்கத்து நிகழ்விலும்
பேராசை பொருட்டு
வரன் தட்சனை வேண்டி
இரு மனம் பிரிய
திருமண வைபோகமாய்
உதித்திடும் லஞ்சம்
நிரந்திர அலுவல்
போதிய ஊதியம்
கனவிலும் இன்பம்
அடங்கிய ஒருவன்
அரசாங்க சேவை
செய்திட வேண்டி
ஏழையின் உழைப்பில்
வளர்ந்திடும் லஞ்சம்
அலுவல் புரிய
அவசரம் காட்டி
தாயின் மடியில்
தூக்கம் மறந்து
உழைக்கும் பெண்ணிடம்
கலவியின் பெயரில்
கலந்திடும் லஞ்சம்
ஊரை கொன்று
உறவை கொன்று
உண்மையை கொன்று
உலகையும் கொன்று
வளர்ந்திடும் லஞ்சம்
ஒருநாள்
உன்னையும் கொல்லும்
மறவாதே.............!!!!
Labels:
கவிதை.,
ரமேஷ் குமார் பாலன்
Subscribe to:
Posts (Atom)










