Saturday, 15 March 2014

என்னது சொல்ல...
















என்னது சொல்ல
அன்பே
என்னது சொல்ல
எண்ணிய யாவும் உன்
கண்ணது சொல்ல
என்னது சொல்ல
அன்பே
என்னது சொல்ல

எண்ணியதில்லை என்றும்
எண்ணியதில்லை
புண்ணியமெதுவும் என்னுயிர்
பண்ணியதில்லை
அழகாய் நீ
மிளகாய் நான்
என்னது சொல்ல
அன்பே
என்னது சொல்ல

சிந்திக்கும் நேரங்கள் தீர  
உனை
சந்திக்கும் யோகங்கள் ஓய
இன்மையில் நீ
அன்மையில் நான்
உண்மையில் இங்கே
என்னது செய்ய அன்பே
என்னது செய்ய

வரமெதுவும் வேண்டாம் 
உன் 
நினைவிருக்கயில்
கரமெதுவும் வேண்டாம்
உன் 
நிழலிருக்கயில்

சுகமெதுவும் வேண்டாம்
நீ 
உடனிருக்கயில்
உறவெதுவும் வேண்டாமடி
நீ 
துணையிருக்கயில்

இவ்விடம் நான்
அவ்விடம் நீ
ஒற்றை
அறையில்
சுற்றிடும்
இருளில் 
என்னது செய்ய
அன்பே
என்னது செய்ய….

3 comments:

  1. அருமை அருமை என்பதை விட
    என்னது சொல்ல நான் என்னது சொல்ல!!!

    ReplyDelete
    Replies
    1. நன்றிகள் கோடி அமுதா

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete