அன்றைய தினத்தின்
நாயகி அவளே!
சிரிப்பொலிகளும்
சின்னஞ்சிறு கேலி,கிண்டல்களும்
அவள் செவிகளை நிரப்ப
பதிலாய்
ஒரு அங்குலப்
புன்னகை மட்டும்
அழகாய்ச் செலுத்தி
அவளின் கண்களும்,இதயமும்
தனித்தொரு தீவினுள்
ஏனோ உலாவல் செய்கின்றன
அவள் மன நடுக்கமதின்
காரணம் தான் என்னவோ?
புதியதொரு உலகினில்
பூத்தெழும் படபடப்பா?
உற்றாரையும்,சுற்றாரையும்
பிரிந்து செல்லும் துடி துடிப்பா?
அம்மம்மா,
புன்னகையும்,பூகம்பத்தையும்
பெண்ணவளைத் தவிர
வேறு எவரால்
ஒரு சேரத் தாங்க முடியும்?
அன்று,
அவள் இதயத்திலேயே
இறுகிவிட்ட
வார்த்தைகளின் எண்ணிக்கை
ஏராளம் உண்டு
மனத்தோடு மறிக்கப்பட்ட
இரகசியங்கள்
தாராளம் உண்டு
விட்டு விட்டுத் துடிக்கும்
இதயத்தின் இடையினில்
இடறித் தவிக்கும்
நினைவுகளின் சுமையினை
யாரிடம் தான்
இறக்கி வைக்க அவள்?
மணப் பந்தலினில்,
மங்கையவள் சிந்தும்
ஒவ்வொரு கண்ணீர்த் துளிகளும்
ஓராயிரம்
உண்மைக் கதைகள் கூறும்
வாழ் நாளெல்லாம்
வழி நடத்தும்
புன்னகைப் பூச்சுகளுக்கும்
கண்களில் உரைந்த
கண்ணீர்த் துளிகளின்
காயச்சல்களுக்கும்
ஒரு நாள்
ஒத்திகை பார்த்து விட்டாள் இன்று
அவள் தான்,
மணப்பெண்.!
அன்று,
ReplyDeleteஅவள் இதயத்திலேயே
இறுகிவிட்ட
வார்த்தைகளின் எண்ணிக்கை
ஏராளம் உண்டு
Naan Rasitha Varikal.....
nandri vijai
Deleteஅருமையான கவிதை... முடிந்தால் எழுத்தாளர் அம்பையின் “சிறகொடிந்த பறவை, அம்மா ஒரு கொலை செய்தாள்” என்ற இரு சிறுகதைகளை படியுங்கள்..
ReplyDeletenichayam vasikka muyarchikkindren
Deletenichayam vasikka muyarchikkindren
Delete