Monday 1 April 2013

என்ன வேணுனாலும் பேசலாம்



பாரதியின் தமிழ் பற்று:-


இதை உங்களில் சிலருக்கு முன்பே தெரிந்து இருக்க வாய்ப்பு இருக்கிறது.


விடுதலை போராட்டத்தின் போது ஒரு முறை காந்தி ஆங்கிலேயருக்கு எதிரான ஒரு போராட்டதில் கலந்து கொண்டார். அதில் அவர் பேசியதை பார்த்து வியந்து பாரதி அவருக்கு ஒரு பாராட்டு கடிதம்  எழுதினார். அதில் "தாங்கள் நடத்திய போராட்டத்தில் உங்களுடைய பேச்சு பிரமாதமாய் இருந்தது. நீங்கள் அந்த போராட்டத்தில் உங்கள் தாய் மொழியான குஜராத்தியிலோ அல்லது வேறு ஏதேனும் ஒரு மொழியிலோ பேசி இருக்கலாம். ஆனால், நாம் நம் நாட்டை விட்டு யாரை விரட்டி அடிக்க போராடிக்கொண்டு இருக்கிறோமோ அவர்கள் தாய் மொழியான ஆங்கிலத்தில் பேசியது தான் எனக்கு வருத்தத்தை தருகிறது" என்று எழுதி இருந்தார்.

காந்தி அதற்கு எழுதிய மறு கடிதத்தில் "உண்மை தான் பாரதி. நான் செய்தது தவறே. ஆனால்,

எனக்கு ஒரு சந்தேகம் நீங்கள் ஏன் எனக்கு எழுதிய கடிதத்தை ஆங்கிலத்தில் எழுதி இருந்தீர்கள்"

என்று கேட்டார்.


பாரதி எழுதிய மறு கடிதத்தில் "நான் யாருடைய மனதையாவது காய படுத்தும் படி நேர்ந்தால்

அதை ஏன் தாய் மொழி மூலமாக செய்ய விரும்ப மாட்டேன்" என்றார்.

பாரதி தமிழ் மீது வைத்து இருந்த பற்றுக்கு இது ஒரு சின்ன உதாரணம்.


மாலினி

3 comments:

  1. எவ்வளவு பெரிய நல்ல உள்ளம் நம் பாரதிக்கு....தகவலுக்கு நன்றி..

    ReplyDelete
  2. உன்னால் தலை நிமிர்ந்து நிற்கிறது தமிழ்..........இது போன்ற அறிய தகவல்கள் நிறைய இருந்தால் நாம் ஒவ்வொரு இதழிலும் வெளியிடலாம்...நன்றி தோழி

    ReplyDelete
  3. ”சூப்பர்ல...” படித்தவுடன் மனதில் இதான் தோன்றியது... ஆங்கிலத்தில் இருப்பதால் வஞ்சப்புகழ்ச்சி என்று எடுத்துக் கொள்ள வேண்டாம் தோழி...

    ReplyDelete