Saturday, 27 April 2013

காதல் காலங்கள் - முகவுரை



காதல் காலங்கள்..


எங்கு நோக்கினும் ஒரே வாகன இரைச்சல்,எதிர் வரும் மனித முகங்களைக் கூட , ஒரு கணம் காண நேரமில்லாது , மக்கள் அலுவலகங்களுக்கோ , அன்றாட அலுவல்களுக்கோ அறக்கப் பறக்க சிதறி ஓடிக் கொண்டிருக்கும் காட்சியினை , ஏதோ வேற்று கிரகத்திலிருந்து வருகை தந்தவனைப் போல் முகம்  சுளித்துக் கொண்டு பார்த்துக் கொண்டிருந்தான் கௌதம் .

             "
என்னடா?" என்ற நண்பனின் குரல் அவனை, மீண்டும் இவ்வுலகிற்கு கொண்டு சேர்த்தது. சலித்துக் கொண்டே "பஸ் இன்னும் வரலையே டா , முதல் நாளே காலேஜ் கு லேட் தா போக போறோம்"  என்றவன் மீண்டும் வெற்று சாலையினையே உற்று நோக்கினான் . அவன் நண்பனோ சற்றும் அசரதவனாய் , "உன்னோட அவசரத்துக்கு பஸ் வந்துருமா கொஞ்சம் வெயிட் பண்ணுடா " என்றவன் வாக்கியத்தை முடிக்கும் முன்னரே பேருந்து ஒன்று பக்கம் வந்து பட்டென்று நின்றது . கௌதமின் இறுகிய முகத்தை பேருந்தின் தரிசனம் புன்னகயினால் அலங்கரித்து விட்டது .

                 
சக பயணிகளுடன் ஏதோ மல்லுக்கட்டிக் கொள்வதைப் போன்று முட்டி மோதி பேருந்தின் ஓரமாய் ஒரு இடத்தைப் பிடித்து , மூச்சு வாங்கிய படியே நண்பனைக் கண்டு கௌதம் ஒரு குறும் புன்னகை பூத்தான் . தட தட வென சக்கரங்களைச் சுழற்றி ஓட ஆரம்பித்த பேருந்து , ஓரிரு அடிக்குள் மீண்டும் நின்றது . "இப்ப என்னடா?" என்று நண்பனை வினவிய படியே பேருந்தின் வெளியே எட்டிப் பார்த்த போது , " நந்தினி சீக்கரமா வா, பஸ் கெளம்பப்  போகுது ..!" என்று தோழி ஒருத்தி கூச்சலிட , ஓட்டமும் நடையுமாய் ஒருத்தி ஓடி வந்து பேருந்துப் படிகளில் கால் வைத்தவுடன் பேருந்து மீண்டும் சக்கரங்களைச் சுழற்றி பயணத்தை ஆரம்பித்தது .

             
அவசர அவசரமாய் பேருந்தினுள் ஏறி , கம்பி ஒன்றைப் பிடிக்க கைகளை நீட்டும் வேகத்தில் யாரோ ஒருவர் பயணச் சீட்டிற்காக கைகளில் வைத்திருந்த சில்லரையினை கீழே தட்டினாள் நந்தினி . "I am extremely sorry" என்று அவள் கூறி தலை திருப்பும் வேலையில் அவள் விழிகள் கௌதம் அவளை முறைத்துக் கொண்டிருப்பதைக் கண்டன. மீண்டும் அவள் "I am sorry " என்று கூற கோபத்தினை அடக்கிக் கொண்டு , பெயரளவில் மட்டும் "Its ok" என்று கூறி முடிக்கும் தருணத்தில் , நந்தினி தடுமாறி பேருந்தின் வெளிய தவறி விழப் பார்த்தாள் , அருகிலிருந்த கௌதம் பட்டென்று அவள் கைகளைப் பிடித்து உள்ளே இழுத்தான் . பதற்றத்திலிருந்து மீளாத நந்தினி ,"" என்று வெறித்த கண்களுடன் கூறினாள் . கௌதம் ,"உள்ள போய் பத்தரமா நில்லுங்க " என்று கூறி விட்டு தன் நிறுத்தம் வந்தவுடன் , நண்பனுடன் இறங்கிக் கல்லூரி வளாகத்தினுள் நடக்க ஆரம்பித்தான் .

               
நண்பன் "டேய் கௌதம்" என்று ஆரம்பித்த உடனே , " கொஞ்சம் அமைதியா வரயா கீழ விழும் போது பாத்துட்டு சும்மாவா இருக்க முடியும் " என்று வாயை அடைக்க , பதிலுக்கு அவன்  " ம் .. ம் .." என்று சிரித்துக் கொண்டு கௌதமின் தோள்  மீது கைகளை போட்ட படி நடந்து சென்றான் . தூரத்தில் பேருந்து புறப்படும் ஓசை கேட்டவுடன் , கௌதம் பேருந்தினை நோக்கி அக்கரைப் பார்வை ஒன்று வீசினான் .

       "
அவ உன்ன தாண்டி பாக்கறா " என்று பக்கம் இருந்த தோழி நந்தினியின் தோள்களைத் தட்ட , அவள் கோபமாய் "அடிதா வாங்கப் போற " என்றாள் . முறைத்துக் கொண்டே , "சரி சரி இப்பவாவது பாத்து நில்லு " என்ற தோழியின் பேச்சைக் கண்டு கொள்ளாதவளாய் , நண்பனுடன் நடந்து சென்ற கௌதமை அவள் விழிகள் உற்று நோக்கின . பார்வைப் பகிர்வின் பகைவனாய் பேருந்து புறப்பட்டது ..

                                                                                 
காட்சிகள் தொடரும் ..

1 comment:

  1. ஒரு பார்வையே போதுமே காதல் வரதுக்கு.....

    ReplyDelete