Tuesday 21 May 2013

பாவ நகரம் - IX


ஸ்ரீதரை ஏற்றிக் கொண்டு அந்த போலீஸ் ஜீப் மெதுவாக டிராப்பிக்கில் ஊர்ந்துக் கொண்டிருந்தது. அதனுள் ஸ்ரீதர் கண்ணை மூடிக் கொண்டு அமர்ந்திருந்தான். அவனுடன் பின்னால் ஒரு கான்ஸ்டேபிளும் முன்னால் ஒரு இன்ஸ்பெக்டரும் இருந்தனர். அப்போது அவனருகில் அமர்ந்திருந்த கான்ஸ்டேபிள் தூங்குகிறான் என நினைத்து அவனைப் பிடித்து உலுக்கினார். அவன் கண்ணைத் திறந்தவுடன், “என்ன கனவா?” எனக் கேட்டார்.
நீங்கள் chaos theory-யைப் பற்றிக் கேள்விப் பட்டிருக்கீங்களா?”
அப்படின்னா?”
இன்னிக்கி எங்கூட வர வேண்டிய கான்ஸ்டேபிள் நீங்க இல்ல தான?
ஆமா”
என்னாச்சி அவருக்கு?”
அவருக்கு ஒன்னும் இல்ல, அவரோட வீட்ல காலைல மார்க்கெட் போயிருக்காங்க, ஒரு ஆட்டோ டிரைவர் போதைல வந்து இடிச்சுட்டான்”
அவ்ளோ காலைல சரக்கா?”
அவனை முறைத்த கான்ஸ்டேபிள் “நைட்டே வாங்கி வெச்சிருப்பான்?” என முறைத்தார்.
பாத்தீங்களா யாரோ ஒருத்தன் குடிச்சதால நீங்க இன்னிக்கு என்கூட கோர்ட் வரைக்கும் வரீங்க. இததான் நாங்க chaos theory-னு சொல்லுவோம்”
அத நாங்க விதினு சொல்லுவோம்”
ஏதோ ஒன்னு அதனாலதான் நீங்க இப்ப சஸ்பெண்ட் ஆகப் போறீங்க”
என்னடா சொல்ற” எனக் கேட்டுக் கொண்டே சுதாரிக்க முயன்ற கான்ஸ்டேபிளின் மூக்கில் ஒரு குத்து விழுந்தது. முன்னால் அமர்ந்திருந்த இன்ஸ்பெக்டர் திரும்பி பார்ப்பதற்குள், ஸ்ரீதர் பின்னால் எகிறி குதித்து ஓட ஆரம்பித்திருந்தான்.
உடனே கீழே குதித்து இறங்கிய இன்ஸ்பெக்டர் அவனை துரத்த ஆரம்பித்தார். ஆனால் ஸ்ரீதர் அந்த மனித சமுத்திரத்தில் கலந்து கரைந்து விட்டிருந்தான்.
ஜீப்பிற்கு திரும்பிய இன்ஸ்பெக்டர் அந்த கான்ஸ்டேபிளைப் பார்த்து அமைதியாக சொன்னார். “You are suspended.”

Saturday 18 May 2013

20-20


உனக்கு 20
எனக்கு 20 என
நீங்கள்
அழகாய் பிரித்துக்
கொண்டீர்கள்...
நாங்கள் தான் பாவம்
நாற்பது நாட்களை
இழந்துவிட்டோம்....

மணப்பெண்





அன்றைய தினத்தின்
நாயகி அவளே!
சிரிப்பொலிகளும்
சின்னஞ்சிறு கேலி,கிண்டல்களும்
அவள் செவிகளை நிரப்ப
பதிலாய்
ஒரு அங்குலப்
புன்னகை மட்டும்
அழகாய்ச் செலுத்தி
அவளின் கண்களும்,இதயமும்
தனித்தொரு தீவினுள்
ஏனோ உலாவல் செய்கின்றன

அவள் மன நடுக்கமதின்
காரணம் தான் என்னவோ?
புதியதொரு உலகினில்
பூத்தெழும் படபடப்பா?
உற்றாரையும்,சுற்றாரையும்
பிரிந்து செல்லும் துடி துடிப்பா?
அம்மம்மா,
புன்னகையும்,பூகம்பத்தையும்
பெண்ணவளைத் தவிர
வேறு எவரால்
ஒரு சேரத் தாங்க முடியும்?

அன்று,
அவள் இதயத்திலேயே
இறுகிவிட்ட
வார்த்தைகளின் எண்ணிக்கை
ஏராளம் உண்டு
மனத்தோடு மறிக்கப்பட்ட
இரகசியங்கள்
தாராளம் உண்டு

விட்டு விட்டுத் துடிக்கும்
இதயத்தின் இடையினில்
இடறித் தவிக்கும்
நினைவுகளின் சுமையினை
யாரிடம் தான்
இறக்கி வைக்க அவள்?

மணப் பந்தலினில்,
மங்கையவள் சிந்தும்
ஒவ்வொரு கண்ணீர்த் துளிகளும்
ஓராயிரம்
உண்மைக் கதைகள் கூறும்

வாழ் நாளெல்லாம் 
வழி நடத்தும்  
புன்னகைப் பூச்சுகளுக்கும்
கண்களில் உரைந்த
கண்ணீர்த் துளிகளின்
காயச்சல்களுக்கும்
ஒரு நாள்
ஒத்திகை பார்த்து விட்டாள் இன்று
அவள் தான்,
மணப்பெண்.!

ஆடுகளம்





வன்மை வெல்வதும்
மென்மை மறைவதும்
பகைமை பகிர்வதும்
உயிரணுக்கள் உரைவதும்
இங்கே  தான் 

மெல்லிதயம் கொண்டார்க்கும்
கண்ணீரில் கரைவார்க்கும்
காரியம் மறந்தார்க்கும்
தன்னிலை உணரார்க்கும்
தாகம் தனிந்தார்க்கும்
இங்கே இடமில்லை 

தற்பெருமை பேசுவாரிடையே 
தன்னம்பிக்கையும்
இலட்சங்களைப் போற்றுவாரிடையே
இலட்சியங்களும்
கொழுத்தாடும் பொய்களிடையே
மெய்களும்
மறைந்து,மறித்த கதைகள்
ஏராளம் இங்குண்டு 

ஆடுகளமதில் ,
அழகாய்க் காய் நகர்த்தி
அறியாரைப் பேதையாக்கி
அண்டம் ஆள்கின்ற கூட்டம்
அன்றாடம் அதிகரிக்கின்றது

இங்கே,
மனம் தளராதவனும்
தலைக்கனம்  கொள்ளாதவனும்
தனிப்பாதை வகுத்தவனும்
தனித்து நின்றவனுமே
வான் புகழ் அடைகின்றான் 

சகுனிகள் பலருண்டு
சாணக்கியனும் அதிலுண்டு
இவர்களின் இன்னல்களை
கொன்று கொண்டு வருவார்க்கே
வெற்றிக் கனி கிடைப்பதுண்டு 

வாழ்வும்,வீழ்வும்
தரும் ஆடுகளம்
வழி காட்டி
நடத்திச் செல்லும்
ஆடுகளம்
விடியலை
நமதாக்கும் ஆடுகளம்
விண்ணையும்,
வளைத்துக் காட்டும் ஆடுகளம்

இது ,
உணர்வையும்,உயிரையும்
பணயம் வைத்து
ஆடும் களம்

துளித் துளியாய் - 9



Friday 17 May 2013

புகைப்படங்கள்


எனது கைபேசியில் இருந்து அழகான கூவம் நதிக்கரை காசி திரை அரங்கம் அருகில்...........


பொம்மையைத் தேடி....



இன்னொரு இரவு...



வரலாறு முக்கியம் அமைச்சரே - 6



பௌத்தத்தைப் பற்றி சென்ற பகுதியில் கண்டோம். இப்போது சமணத்தைப்(Jainism) பற்றிக் காண்போம். சமணம் என்றால் முதலில் நம் நினைவுக்கு வருபவர், மகாவீரர். ஆனால் சமணத்தைத் தோற்றுவித்தவர் அவர் அல்லர். சமணம், ரிஷபநாதர் என்ற க்ஷத்ரிய குருவால் உருவம் தரப்பட்டது. இவர், சமணத்தை வளர்த்த இருபத்து நான்கு தீர்த்தங்காரர்கள் (24 Tritankaras)  என்று அழைக்கப்பட்ட க்ஷத்ரிய குருமார்களில் முதன்மையானவர். (அவரது சின்னம்: காளை). அவரை அடுத்த குருமார்களுள் கடைசி இருவர் மட்டுமே வரலாற்றுப் பிரசித்திப் பெற்றவர்கள்.

இருபத்து மூன்றாவது குரு, பர்ஷ்வநாதர் (சின்னம்: பாம்பு). அவரின் தந்தை, பனாரஸ் பகுதியை ஆண்ட அஷ்வசேனர். இந்த குரு, கீழ்க்கண்டவற்றை எதிர்த்தார். அவையாவன:

* பிற உயிர்களைத் துன்புறுத்துதல்.
* பொய்க் கூறுதல்.
* திருடுதல்.
* தனக்கென எதையும் வைத்துக்கொள்ளுதல்.

அவரை அடுத்த கடைசி குரு தான், வர்தமான் மகாவீரர். (சின்னம்: சிங்கம்). மேற்கூறியப் பட்டியலில் இவர், திருமணத்தையும் சேர்த்து எதிர்த்தார்.


மகாவீரர்:


பிறப்பு
599 BCE
பிறப்பிடம்
 பீகார் மாநிலத்தின்முஜாஃபர்பூர் மாவட்டத்தின்குண்டலகிராமம்.
தந்தை
நாட்ரிகா குல மக்களின்தலைவர்சித்தார்த்தர்.
தாய்
வைசாலியின் லிச்சாவிஇளவரசர் சேதக்கின்சகோதரிதிரிசாலா.

மகாவீரர், ஹரியன்யாகா வம்ச வழி வந்த பிம்பிசாராவுக்கு ஒரு வகையில் உறவினர் என்று சொல்லப்படுகின்றது. அவர்,  யசோதை என்றப் பெண்ணை மணம் முடித்து, ப்ரியதர்ஷனா என்ற மகளையும் கொண்டிருந்தார். தன் மருமகனான ஜமாலியே அவரது முதல் சீடர். மகாவீரரின் முப்பதாவது அகவையில் அவரது பெற்றோரை இழந்த அவர், அதன் பின் ஒரு நாடோடி வாழ்க்கையை வாழத் துவங்கினார்.
நாடோடியாகிய பதின்மூன்றாவது வருடத்தில், ஜ்ரிம்பிகா கிராமம் என்ற பகுதியில் அவர் முக்தியடைந்தார். அது முதல், அவர், "ஜினா" (அ) " ஜிதேந்த்ரியர்" மற்றும் மகாவீரர் என்று அழைக்கப்பட்டார். (ஜிதேந்த்ரியர் என்பதற்கு வென்றவர் என்று பொருள்). அவரைப் பின்பற்றியவர்கள், ஜைனர்கள் (சமணர்கள்) ஆனார்கள். இதோடு அரிஹந்த் என்றப் பட்டத்தையும் அவர் பெற்றார்.

மகாவீரர் தனது எழுபத்திரண்டாவது வயதில் (527 BCஏ) பாட்னா அருகே பாவபுரி என்ற இடத்தில் உயிர் நீத்தார். அப்போது பீகார் பகுதியை ஆண்டுவந்த சந்திரகுப்த மௌரியரின் ஆட்சியில் கடும் வெள்ளம் நிலவியது. அங்கிருந்த சமண துறவியர்கள் கங்கா பள்ளத்தாக்கிலிருந்து தெற்கு நோக்கி தெக்கான் பீடபூமிக்கு இடம் பெயர்ந்தனர். அங்கே அவர்கள் பல்வேறு ஜைன மையங்களை எழுப்பினார்கள். இந்த இடப்பெயர்ச்சி, சமணத்தில் ஒரு பெரும் பிளவையே ஏற்படுத்தியது.

பத்ரபாஹூ என்ற துறவி, மகாவீரரைப் போல, ஆடை அணியாமல் இருப்பதை ஆமோதித்தார். இவர் தான் தெக்கான பகுதி சமணர்களை வழி நடத்தி வந்தவர். இப்படி இடம் பெயர்ந்தவர்கள், நிர்வானத்தைக் கடைப்பிடிக்க, மறுபுறம், இடம் பெயராத சமணர்களுக்குத் தலைமை வகுத்த, ஸ்தூலபத்ரர் என்னும் துறவி சமணர்களை வெள்ளை ஆடை அணிய அனுமதித்தார். இப்படியாய் தலைமைகளின் மாறுதல்களும் இடப்பெயர்ச்சியும் இந்த சமணத்தை இரு பிரிவாய்ப் பிரித்தன. அவையாவன:

1. திகம்பரர்கள் என்று அழைக்கப்பட்ட நிர்வானத்தைப் பேணியர்வர்கள் (Sky clad).
2. ஸ்வேதம்பரர்கள் என்று அழைக்கப்பட்ட வெள்ளை ஆடை அணிந்தவர்கள் (White-Clad).

மகாவீரரின் அறிவுரைகள்:

இவரும் புத்தரைப் போலவே வேதங்களில் கூறப்பட்ட பலி கொடுக்கும் முறைகளை எதிர்த்தார். அவர் நம்பிக்கைகளுள் முக்கியமானது, "அகிம்சை". ஒரு அணுவுக்குக் கூட உயிர் உண்டு; அதைத் துன்புறுத்தக் கூடாது என்று தெளிவாக இருந்தார்.
அதே சமயம், உலக உயிர்களுகெல்லாம் மேல் ஒரு பெரும் சக்தி நம்மை ஆண்டுக்கொண்டிருக்கிறது என்பதை அவர் எதிர்த்தார். மாறாக அனைத்திற்கும் ஒரு பொது நியதி உள்ளதென்பதை அவர் நம்பினார். கடவுள் இல்லை என வெளிப்படையாக அவர் கூறவில்லை எனினும், கடவுளுக்கு அவர் முக்கியத்துவம் கொடுத்ததில்லை. கடவுள், ஜைனர்களை விட ஒரு படி கீழாகவே கருதப்பட்டார்.

மொற்றொரு முக்கியமான அம்சம் என்னவென்றால், ஏற்றத்தாழ்வு இல்லாத, வகுப்புகளற்ற ஒரு முறையை அவர் காத்தார்.
ஜைனர்களின் அடிப்படைக் கோட்பாடு, "அனேகந்தவாடா". இது பல் வகைப்பாட்டுத் தன்மையைக் குறிக்கின்றது. அதாவது, உண்மையை வெவ்வேறு கோணங்களில் பார்க்க வேண்டும். ஒரு கோணத்தில் மட்டுமே கண்டால் அது முழுமையான உண்மை ஆகாது என்கிறார்.

அவர், மோட்சத்தை அடைய, "Triratnas" என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் கீழ்க்கண்ட மூன்றினை வலியுறுத்துகின்றார்.
1. சரியான நம்பிக்கை (Right Faith)
2. சரியான அறிவு (Right Knowledge)
3. சரியான நடத்தை (Right Conduct)

ஜைன குழுக்கள்:


வருடம்இடம்தலைமை வகித்தவர்முடிவு
மூன்றாம் நூற்றண்டு  BCEபாடலிபுத்ராஸ்தூலபத்ரர்சமண இலக்கியங்களான பன்னிரண்டு அங்கங்களின் படைப்பு
ஐந்தாம் நூற்றண்டு BCEவல்லபி தேவாரிதிகானிபன்னிரண்டு அங்கங்களின் இறுதி மற்றும் பன்னிரண்டு உப அங்கங்களின் படைப்பு
    



சமண தாக்கம்:


சமணம் பல மாறுதல்களை ஏற்படுத்தியுள்ளது. சந்திர மௌரியரின் காலத்தில், புகழின் உச்சியில் இருந்த சமணம், கிருத்துவர் பிறந்த முதல் நூற்றண்டில், கலிங்க நாட்டு அரசரான கரவேலராலும் மதிக்கப்பட்டது.  சமணம் பல பிராந்திய மொழிகளை உருவாக்கியது. சௌரசேனா என்ற மொழியிலிருந்து மராத்தி, குஜராதி, ராஜஸ்தானி மற்றும் கன்னடம் போன்ற மொழிகள் உருவாகின. ஆனால் சமண இலக்கியங்கள் என்னவோ அர்த்-மகதி மற்றும் பிரக்ரித் மொழிகளில் தான் இருந்தன.

முடிவு:

சமண முடிவுக்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும் முக்கியமாகக் கருதப்படுவது இது தான். அவர்கள், உடல்நலக் குறைபாடு சமயத்திலும் மருந்துகளைத் துறந்தனர். நோய்க் கிருமிகளைக் கொல்லக் கூடாதக் காரணத்தினால் (அகிம்சையின் உச்சம்). மேலும் மரங்களும் உயிருள்ளவை என நம்பி, அதன் காய்க்கனிகளையும் பறிக்க மறுத்த சமண  மதம், பாமர மக்களின் வாழ்வில் சென்று ஒரு மூலையில் ஒளிந்துக்கொண்டதே தவிர, அவர்களை ஈர்க்கவில்லை. இறுதிக் காரணமாக, மௌரியர்களுக்கடுத்த மன்னர்கள் யாரும் இம்மதத்தைப் ஆதரிக்கவில்லை.

ஒரு வழியாக சமண மதம் முடிவைத் தழுவியது. சமண மதம் பகுதியில், பெரும்பான்மையாக நாம் மௌரியர்களைப் பற்றியேக் கண்டோம். அவர்கள் யார் என்பதை அடுத்தப் பகுதியில் காண்போம்.

என்னவாகிக் கொண்டிருக்கின்றேன்…



Thursday 16 May 2013

தேடிக் கொண்டிருக்கிறோம்


                     



அவள் வீட்டோரத் தெருக்களில்
தேடிக் கொண்டிருக்கிறேன்..
நான் தொலைத்த
என் வாழ்க்கையை…
அவளும் தேடிக் கொண்டிருக்கிறாள்….
மொட்டைமாடியில் நின்று கொண்டு
மேகத்துக்கு அடியில்
தொலைந்து போன நிலவைத்
அவளது
குழந்தையுடன்…..

உன் ஞாபகம் சுமந்தோம்:



எப்போதுமே உன்
ஞாபகம் சுமந்த ஒன்றை
விட்டுச் செல்வது
உன் வழக்கம்…
நடந்த காலடித்தடங்கள்
உதிர்ந்த ஒற்றை ரோஜா
ஒட்டியிருந்த ஸ்டிக்கர் பொட்டு
அறுந்த ஒற்றை செருப்பு
ஊதி உடைத்த பலூன்
உட்கார்ந்த நாற்காலி
முத்தம் கொடுத்த குழந்தை
கைபட்ட காசுகள்
கடத்திவிட்ட புத்தகங்கள்
வெளிவிட்ட சுவாசம்
காற்றிலே உன் வாசம்
பதுக்கிய உன் சிரிப்புகள்
திருடிய பார்வைகள்
ஆழமாய் சில ஆச்சரியங்கள்..
பெரியதாய் சில பெருமூச்சுகள்..
இப்படி ஏதேனும் ஒன்றை
அதை எனக்காகவே
விட்டுச் சென்றாய்
என எண்ணுவதே
என் வழக்கம்…
உன் ஞாபகங்களை சுமந்தது
என் தவறு
இன்று
நீ
என்னை
விட்டுச் செல்கிறாய்….
உன் ஞாபகம் சுமந்தோம்
தனித்து விடப்பட்டோம்…
என
என்னோடு
அழுது
புலம்பிக் கொண்டிருக்கின்றன
அவைகளும்…….


The way home:


உங்களுக்கு உங்கள் பாட்டியைப் பிடிக்குமா..? உங்களது பாட்டியின் பாசமழையில் நனைந்து, மீண்டும் ஒருமுறை மூச்சடைத்துப் போய் நிற்க விரும்புகிறீர்களா…? நீங்கள் உங்கள் பாட்டியுடன் இருந்த அந்த சந்தோசமான தருணங்களை மீண்டும் மீட்டெடுக்க விரும்புகிறீர்களா…? ஆம், என்றால் உங்களுக்கான படம்தான் “தி வே ஹோம்”.


ஒரு திரைப்படம் திடகாத்திரமான கதாநாயகன் இன்றி, கவர்ச்சியான அழகு ததும்பும் கதாநாயகி இன்றி, மனதை மயக்கும் பாடல்கள் இன்றி, அழுத்தமான கதையமைப்பு இன்றி, எதிர்பாராத திடுக் திருப்பங்கள் நிறைந்த திரைக்கதை இன்றி நம்முடைய மனதை கவர முடியுமா…? இந்த திரைப்படத்தை பார்த்து முடித்துவிட்டு சொல்வீர்கள் முடியும் என்று… இந்த திரைப்படத்தில் மேற்குறிப்பிடப்பட்ட எந்த சமாச்சாரமும் இல்லை.. தோல் சுருங்கிய ஒரு வயதான பாட்டியும், அழகான துடுக்குத்தனம் நிறைந்த, பல நேரங்களில் நம்மைக் கோபப்படுத்தும் தன்மை கொண்ட ஒரு சிறுவனும் மட்டுமே பெரும்பாலும் வருகிறார்கள்… ஆனாலும் படம் முடியும்போது அது நம் மனதை ஏதோ செய்கிறது. மொத்த திரைப்படத்திலும் அந்த பாட்டி ஒரு அன்பின் அடையாளமாக இருந்து கொண்டே இருக்கிறாள். அதனால் தான்  ஒவ்வொரு காட்சி பிம்பத்திலும் அந்த அன்பு நிறைந்து வழிந்து கொண்டே இருக்கிறது.

நாம் வீடு என்று எதைச் சொல்லுகிறோம்..? கல்லும் மண்ணும் சிமெண்டும் கலந்து கட்டிய ஒரு கட்டிடம் மட்டுமே வீடாகி விட முடியுமா…? அல்லது அதில் மனிதர்கள் குடியிருப்பதால் மட்டும் அது வீடாகி விட முடியுமா…? அந்த வீட்டில் உள்ள மனிதர்களுக்கு இடையில் அன்பு என்பது இல்லாமல் ஆகிவிட்டால் அது பலருக்கு சுடுகாடாகத்தானே காட்சி அளிக்கும். அப்படிப் பார்க்கையில் அன்போடு மனிதர்கள் குடியிருக்கும் இடம் மட்டுமே வீடு என்னும் முழுமையான வடிவம் பெறுகிறது. அதைத் தான் இந்த திரைப்படம் குறிப்பாக உணர்த்துகிறதோ என்று தோன்றுகிறது.

”தி வே ஹோம்…” ”வீட்டை நோக்கிச் செல்லும் பாதை” என்னும் அர்த்தம் பொதிந்த தலைப்பு. படத்தின் ஆரம்பக் காட்சியில் இருண்ட திரையின் மத்தியில் வாக்கியங்கள் விரிகின்றன.. 76 வயதான அம்மா வழிப்பாட்டி, 7 வயது சிறுவன், 32 வயதான தாய், கதை எப்போது நடக்கிறது, ஜீன் ஜீலை மாதத்துக்கு இடையே. காட்சிகள் விரியத் தொடங்க.. ஒரு சொகுசு பஸ்சில் அந்தச் சிறுவன் தன் கையில் ஒரு விமான பொம்மையை வைத்து விளையாடிக் கொண்டு இருக்கிறான். அவன் எழுப்பும் சத்தம் அருகில் இருக்கும் அவனது தாயை தொந்தரவு செய்ய.. அவள் இவனை முறைக்கிறாள். அவன் பாட்டியைப் பற்றி கேட்கத் தொடங்குகிறான். “அவள் ஊமையா… காதும் கேட்காதா..? பிறகு எப்படி அவள் என்னை கவனித்துக் கொள்வாள்…? என்னும் அடுக்கடுக்கான கேள்விகளுக்கு அவள் பதில் சொல்லாமல் இருக்கவே.. அவன் தாயைத் தோளில் இடிக்கிறான்..


இருவரும் ஒரு நடுத்தர பஸ்சுக்கு மாற, அந்த பேருந்தின் உட்புறச் சூழ்நிலை அந்தச் சிறுவனை வெறுப்பாக்க.. அவன் தன் வீடியோ கேம் எடுத்து விளையாடத் தொடங்குகிறான். அவனது தாய் அருகில் தூங்கிக் கொண்டு இருக்கிறாள். மீண்டும் ஒரு பேருந்து மாறுகிறார்கள். அது புகையைக் கக்கிக் கொண்டு செல்கிறது. சாதாரண கிராமப்புற மக்களால் அந்த பஸ் நிரம்பி இருக்க.. அருகில் அமர்ந்திருக்கும் ஒரு வயதான பெண்மணி தன் தோள் மீது இடிப்பதால், அந்தச் சிறுவன் அவளது தோளைப் பிடித்து தள்ள… அவனது தாய் அவனை அடிக்கிறாள். பாட்டியின் கிராமத்தில் இருவரையும் இறக்கி விட்டுவிட்டு புகையை கக்கியவாறே பஸ் செல்லுகிறது. தாய் முன்னால் நடக்க.. சிறுவன் “இந்த இடம் நல்லாவே இல்ல.. எனக்கு பிடிக்கல.. நான் வரல… “ என்று சொல்ல.. அவனது தாய் அவனை அடிக்க.. அவன் தன் தாயை காலால் எத்த… அவள் வலுக்கட்டாயமாக அவனை இழுத்துக் கொண்டு செல்கிறாள். ஒரு நீண்ட பாதை தென்பட… அந்தப் பாதையை ஒட்டி படத்தின் டைட்டில் பிரசன்னமாகிறது. “தி வே ஹோம்”


இதற்கு முன் நாம் கடந்து வந்த எந்தக் காட்சியிலும் அன்பு என்பது துளி அளவும் இருக்காது. இயந்திர பொம்மைகளை விரும்பும் சிறுவனால் அருகில் இருக்கும் உயிருள்ள மனிதர்களையோ, கோழியையோ விரும்ப முடியாது, தாயை திருப்பி அடிக்கிறான்… தாயைப் பிரிந்து இருக்க வேண்டியதைப் பற்றி அவன் கவலை கொள்வதில்லை… தான் இருக்கப் போகும் இடம் நாகரீகம் அற்ற ஒரு இடமாக இருப்பதால் அங்கு அவனால் ஒன்ற முடிவதில்லை. அதனால் தான் நான் இங்கு இருக்கமாட்டேன்… என்று அடம் பிடிக்கிறான். சற்று யோசித்துப் பார்த்தால் இந்தச் சிறுவனின் கதாபாத்திரம் தற்காலத்து சிறுவர்களின் மனோஇயல்பை வெளிக்காட்டுகிறது. அவர்களுக்கு இயந்திரங்களின் மீது உள்ள அன்பு, ஈடுபாடு, காதல் கூட சக மனிதர்களிடம் இருப்பதில்லை.. மரியாதை என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் மனோபாவம் இயல்பாகிப் போய்விட்டது. அதையும் பெற்றோராகிய நாம் ரசிக்கத் தொடங்கிவிட்டது தான் காலத்தின் கொடுமை.. இது தலைமுறை இடைவெளிக்கான மாற்றம் தான். ஆனால் இந்த மாற்றம் நல்லவிதமான மாற்றம் இல்லை என்பதுதான் நெருடலாக இருக்கிறது.


பாட்டியின் வீட்டில் அவனது தாய், தான் சிறுவயதில் வீட்டை விட்டு ஓடிப் போனதற்காக, இதுநாள் வரை தன் தாயை பார்க்க வராமல் இருந்ததற்காக என பொது மன்னிப்புக் கேட்டுக் கொண்டு இருக்க… சிறுவன் வீட்டை நோட்டம் விடுகிறான். பல்பு இல்லாமல் தொங்கிக் கொண்டு இருக்கும் ஹோல்டர், ஓட்டடை படிந்த சுவர்கள், தரைப் பலகையின் இடுக்குகளுக்கு இடையே ஓடும் பூச்சிகள் என இவைகளைக் கண்டு அவன் அறுவெறுப்பு அடைகிறான்… “தன் மகன் தொந்தரவு எதுவும் கொடுக்க மாட்டான்…” என்று தாய் சொல்லிக் கொண்டு இருக்க.. அவன் பாட்டியின் செருப்பின் மீது சிறுநீர் கழிக்கிறான்.


சிறுவனின் தாய் ஊருக்கு சென்றுவிட, பாட்டியும் சிறுவனும் அந்த ரோட்டில் தனித்து விடப்படுகிறார்கள்.. குனிந்த நிலையில் தரையில் கம்பை ஊன்றி நடந்து வரும் பாட்டி தன் பேரனை நோக்கி பாசத்துடன் நெருங்க.. சிறுவன் அருவெறுப்புடன் பின்னால் செல்கிறான்… அவனைத் தொட முயலும் பாட்டியை திட்டிக் கொண்டே.. அடிக்க கை நீட்டுகிறான். தான் தொடுவது அவனுக்குப் பிடிக்கவில்லை என்பதை உணர்ந்த பாட்டி தன் நெஞ்சில் கையைத் தடவி, மன்னிப்பு கேட்பது போல் சைகை செய்துவிட்டு முன்னோக்கி நடக்க… பாட்டியை “லூசுக் கிழவி, செவிட்டு கிழவி” என்று வசை பாடிக் கொண்டே அவன் பின்னால் நடக்கிறான். அவன் வருகிறானா என்று பாட்டி பின்னால் திரும்பிப் பார்த்தால்.. நடப்பதை நிறுத்திக் கொண்டு இவனும் பின்னால் திரும்பிக் கொள்கிறான்…


வீட்டில் பாட்டி கொடுக்கும் உணவுப் பொருட்களைப் புறக்கணித்துவிட்டு தன் தாய் கொடுத்துச் சென்ற டின்னில் அடைக்கப்பட்ட உணவுகளை உண்ணுகிறான். மரத்தினால் செய்யப்பட்ட விளையாட்டு சாமான்களை பாட்டி கொடுக்க.. அதை அவன் கண்டு கொள்வதே இல்லை.. அவன் அங்கும் தனக்கு பொழுது போக்காக தன் வீடியோ கேம்மை கையில் எடுக்கிறான். பாட்டி ஊசியையும் நூலையும் கோர்த்துக் கொடுக்கும்படி அவனை நெருங்க வேண்டா வெறுப்பாக அதைச் செய்து கொடுக்கிறான்… காலைக் கடன்களை இரவு நேரத்தில் அவசரமாக கழிக்க வேண்டி இருக்கையில் மட்டும் பாட்டியின் உதவியை நாடுகிறான். அருகில் வசிக்கும் கிராமத்து சிறுவன் சியோல் இவனுடன் நட்பாக முயல, சியோலுடன் இவன் ஒரு வார்த்தைக் கூட பேசுவது இல்லை.. காலை நக்கிக் கொடுக்கும் நாய்குட்டியை எட்டி உதைக்கிறான்..


வீடியோகேமில் பேட்டரி தீர்ந்துவிட…பேட்டரி வாங்க பணம் கேட்கிறான். பாட்டியிடம் பணம் இருப்பதில்லை… கோபத்தில் பாட்டி கழுவி வைத்த பீங்கான் பாத்திரத்தை காலால் எத்தி உதைக்கிறான்.. அது உடைந்து சிதறுகிறது. பாட்டியின் செருப்பை எடுத்து ஒளித்துவைக்கிறான்.. வெறும் காலுடன் அந்த மலைக் கிராமத்தில் தண்ணீர் எடுக்கச் செல்லும் பாட்டியைப் பார்த்து வன்மமாகச் சிரிக்கிறான்.. 

பாட்டியின் கொண்டையில் சொருகி இருக்கும் வெண்கல ஊசியை அவள் தூங்கும் போது எடுத்துக் கொண்டு ஓடுகிறான். அதை விற்று பேட்டரி வாங்க நினைக்க.. வழிதவறிப் போய் ரோட்டில் அழுது கொண்டு நிற்கிறான். ஒரு விவசாயி சைக்கிளில் அவனை அவர்கள் கிராமத்தில் விட்டுவிட்டு செல்ல.. எதிரே பாட்டி அவனைத் தேடி வந்து கொண்டு இருக்கிறாள். இவன் பாட்டி தன்னை அடிப்பாளோ.. திட்டுவாளோ என்று பயந்து போய் நிற்க.. பாட்டி இவனைக் கண்டு கொள்ளாமல் கடந்து செல்ல… இவன் பாட்டியின் கொண்டையைப் பார்க்க அதில் ஒரு வெண்கல ஸ்பூன் சொருகப்பட்டு இருக்கிறது… அவன் பாட்டியின் பின்னால் மெதுவாக வீட்டை நோக்கி நடக்கத் தொடங்குகிறான்… இந்த இடத்தில் தான் அவன் தன் தவறை உணரத் தொடங்குகிறான். துவைத்து காயப் போட்ட துணிகள் மழையில் நனைய.. முதலில் தன் துணியை மட்டும் எடுப்பவன், பின்பு பாட்டியின் துணிகளையும் எடுத்து உள்ளே போடுகிறான். உடனே மழை நின்றுவிடுகிறது… வெறுத்துப் போன சிறுவன் மீண்டும் துணிகளைக் காயப் போடுகிறான். இந்தப் புள்ளியில் இருந்து பாட்டியின் மீது அவனுக்கு அன்பு பிறக்கிறது


இப்படி படம் முழுக்க அவன் பாட்டியை பாடுபடுத்துவதும்.. அதற்காக அவன் மீது கொஞ்சம்கூட கோபம் கொள்ளாத பாட்டி மெல்ல மெல்ல.. அவனைத் தன் அன்பால் மாற்றுவதும் தான் மொத்தப்படமும்… ஒரு முறை பாட்டி உனக்கு என்ன சாப்பிட வேண்டும் என்று கேட்க.. இவன் பீட்ஸா, பர்கர், கெண்டகி சிக்கன் என்று சொல்லிவிட்டு, உனக்கு எதுவுமே தெரியாது என்று சலிப்புடன் சொல்ல.. கோழி என்பதைப் புரிந்து கொண்ட பாட்டி, சிக்கனா என்று கேட்டுவிட்டு, தன் தோட்டத்தில் விளைந்த பருத்திகளை சந்தையில் விற்று, கோழி வாங்கச் செல்கிறாள். சிறுவன் சந்தோசத்தில் குதிக்கிறான்.. பேட்டரி வாங்க காசு தராத கோபத்தில் பாட்டியைப் பற்றி சுவற்றில் திட்டி எழுதிய வாசகங்களை அடிக்கிறான்.. பாட்டியை எதிர்பார்த்து காத்திருந்து தூங்கிப் போகிறான்.. மழை பெய்து கொண்டு இருக்க… அதில் கோழியுடன் நடந்து வரும் பாட்டி, கோழியை தண்ணீரில் வேக வைத்து சமைத்து, பேரனை எழுப்ப.. அதைப் பார்த்து அதிர்ந்த அவன் “கோழி ஏன் தண்ணீல இருக்கு.. எனக்கு எண்ணெய்ல பொறித்ததுதா வேணும்… உனக்கு ஒன்னுமே தெரியல..” என்று அழத் தொடங்கிவிட்டு அருகில் வைத்திருந்த வெண்ணெயை தூக்கி எறிகிறான். எனக்கு எதுவும் வேணாம் என்று கோபத்தில் படுத்துக் கொள்கிறான்.. மீண்டும் நடுராத்திரியில் எழுந்தவன் பசியால் பாட்டி அறியாமல் அந்தக் கோழியை தின்னத் தொடங்குகிறான்.


மழையில் நனைந்ததால் பாட்டிக்கு காய்ச்சல் வருகிறது. சிறுவன் பாட்டிக்கு பணிவிடை செய்து பார்த்துக் கொள்கிறான். மெல்ல மெல்ல பாட்டியின் மேல் அன்பு கொள்கிறான்.. சந்தைக்கு சென்று தன் தோட்டத்தில் விளைந்த காய்களை விற்று ஹோட்டலில் பேரனுக்கு சாப்பாடு வாங்கித் தருவதும், புதிய செருப்பு வாங்கிக் கொடுப்பதும், தன் பேரனை மட்டும் பஸ்சில் அனுப்பி வைத்துவிட்டு, அவனுக்கு செலவளிக்க காசு வேண்டும் என்று பாட்டி பின்னால் நடந்து வருவதும் நெகிழ்வானக் காட்சிகள். இது போன்ற நிகழ்வுகளை நாமும் கூட கடந்துதானே வந்திருக்கிறோம்.. அதனால் தான் இவை நம் மனதுக்கு நெருக்கமாக அமைந்துவிடுகின்றன.. 


மேலும் பாட்டி இன்ப அதிர்ச்சியாக அவனுக்கு ஒரு பரிசு கொடுக்க.. அதில் காகிதத்தில் சுற்றப்பட்ட அவனது வீடியோகேமும், பேட்டரியும் இருக்கிறது. அவன் சந்தோசத்தில் சிரிக்கிறான். ஆனால் அடுத்து அவனுக்கு அது தேவைப்படுவதே இல்லை.. பாட்டியுடனே பெரும்பாலானபொழுதைக் கழிக்கிறான். அவனை அழைத்துச் செல்ல வருவதாக அம்மாவிடம் இருந்து கடிதம் வர.. பாட்டியை பிரியப் போவதை நினைத்து அழுகிறான். முதன் முதலின் அன்பின் பிரிவை அவன் உணரும் தருணமாக அதைக் கொள்ளலாம். பாட்டியின் மீது உள்ள பாசத்தால் அவளுக்கு, “நான் உடல் நலமின்றி இருக்கிறேன்…” என்றும் ”நான் உன் நினைவாக இருக்கிறேன்..” என்றும் கடிதம் எழுத கற்றுக் கொடுக்கிறான்.. அம்மாவுடன் பஸ்சில் ஏறும் போது அழுது கொண்டே, தன் கையால் நெஞ்சில் தடவி தான் செய்த தவறுகளுக்காக மன்னிப்புக் கேட்கிறான்.. பாட்டியின் கண்களும் தன் பேரனையே பார்த்துக் கொண்டிருக்க…. நம்மை விட்டு நிரந்தரமாகவும் தற்காலிகமாகவும் பிரிந்து சென்ற எல்லா பாட்டிகளின் நினைவும் நம் நெஞ்சை அழுத்த… அது கண்ணில் கண்ணீராய் வெளிப்படுகிறது…


இத்திரைப்படம் எல்லா பாட்டிகளுக்கும் சமர்ப்பணம் என்ற வாசகத்துடன் படம் முடிகிறது. பாட்டியாக நடித்திருக்கும் அந்த மூதாட்டியின் நடிப்பும் அந்தச் சிறுவனின் நடிப்பும் மிகமிக அருமை. மிக நேர்த்தியான பிண்ணனி இசை. இந்தப் படத்தின் இயக்குநர் Lee jeong hyang ஒரு பெண் இயக்குநர். படம் எத்தனையோ செய்திகளை நம்மிடையே சொல்லாமல் சொல்கிறது. வயதான காலத்தில் பெற்றோரின் தனிமை, தங்கள் சுயநலத்திற்காக மட்டும் பெற்றோரை அணுகிச் செல்லும் பிள்ளைகள், நாகரீக வாழ்க்கை என்கின்ற போர்வையில் இயந்திரத்தனமான வாழ்க்கையில் பெற்றோர்கள் பிள்ளைகளை கவனிக்காததால் இயந்திரத்தைப் போலவே செயலாற்றும் குழந்தைகள், அன்பு, மரியாதைப் போன்ற அடிப்படை மனித இயல்புகளை ஒட்டு மொத்தமாக தொலைத்துவிட்ட நகர மாந்தர்கள்… இவர்களுக்கு மத்தியிலும் அன்பை மட்டுமே கொடுக்க.. எப்போதும் தனிமையில் காத்திருக்கும் இது போன்ற பாட்டிகள்… என்று எத்தனை எத்தனையோ….. செய்திகளைச் சொல்கிறது. கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படம்…

Saturday 11 May 2013

மழைப் பெண்….




காதல் தானோ .. ?




குறள் மழை - 6



இல்லறவியலின் இரண்டாவது அதிகாரமும் அறத்துப்பாலின் ஆறாவது அதிகாரமுமான, "வாழ்க்கைத் துணை நலம்" இந்த மாத இடுகையாக!


மனைக்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.

பிறந்த வீட்டுக்கும்
புகுந்த வீட்டுக்கும்
பெருமை சேர்த்து
புதுமை பொதித்து
பெற்றப் பணத்தில்
பெருமிதமாய் வாழ்பவளே
இனிய வாழ்க்கைத் துணையாள்!


மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித் தாயினும் இல்.

கோடி கொடியாய்க் கொட்டிக்கிடப்பினும்
கட்டிக்கொண்டவள் குணமற்றுப் போனால்
இல்லறம் மணமற்றுப் போகும்


இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை

நற்குணம் கொண்ட கொண்டவளைக் கொண்டவன்
கொள்ளாதது தான் என்ன!
நற்குணம் கொள்ளாக் கொண்டவளைக் கொண்டவன்
கொண்டது தான் என்ன!


பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மைஉண் டாகப் பெறின்.

ஒருவனுக்கு மட்டும் அள்ளிக் கொடுக்க
கற்பென்னும் கருமணியை
கருத்தாய்க் காத்து
கொண்டவனுக்கேக் கொடுப்பவளைக் காட்டிலும்
அவனுக்கு எதுவும் பெரிதல்ல!


தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை.

திடமான தெய்வமென
தினம் தினம்
உன்னை மட்டுமே தொழுதெழும்
உன்னுயிர்த் தோழி
பெய் என்றால்
மழையும் பொழியும்
இயற்கைப் பணியும்


தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்.

மனம் காத்து
குணம் காத்து
தன்மானம் அதைக் காத்து
கணவன் தன் புகழ்க் காத்து
குடும்பக் கோவிலைச் செய்பவள் தான் மனைவி!


சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை.

நல்லொழுக்க நகை சூடி
கரும்பெட்டியிலே அவளைப் பூட்டி வைத்து
பெரும் சாதனைப் புரிந்துவிட்டதாய் நினைக்கும் கணவனே கேள்!
அவள் ஒழுக்கத்தை அவளாலன்றி வேறு யாராலும் காக்க முடியாது.


பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழும் உலகு.

சீரும் சிறப்பும் கொடுத்து
சீக்கில்லா செம்மையான வாழ்க்கையை
தன் கணவனுக்குக் கொடுக்கும் மனைவிக்கு
மேலுலக எட்டாக் கனியும் எட்டும்!


புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன்
ஏறுபோல் பீடு நடை.

புகழ்ப் போற்றும் பெண் கிட்டாதவன்
பழித் தூற்றும் படையர் முன்
புழுதி நோக்கி பயனிக்கலாகிறான்!


மங்கலம் என்ப மனைமாட்சி மற்று அதன்
நன்கலம் நன்மக்கட் பேறு

நர்குணமாம் அவள் அழகு
நற்பேறு அவள் அணிகலன்
இவை முன் புற அழகு புரண்டோடும்
அக அழகு நிறைந்தாடும்!