Thursday 24 April 2014

துளித் துளியாய் - 38



கவிதைக் காதல்




கவிதையே !
எந்தன் காதலே !
காற்றில் அலைந்த 
என் எண்ணங்களுக்கு
முகவரி ஒன்றை 
முன் நிறுத்தினாய்
காகிதத்தை ஆயுதமாக்கி
பேனாவைப் போர்வாளாக்கும்
புது வித்தை
நீ புகட்டினாய்

சிந்தனையினைச் செம்மையாக்கி
செயல்பாட்டைச் செழுமையாக்கி
கவிதை உந்தன் 
காதலினால்,
கண்ணம்மாவினைக் கண்டறிந்தவள்
எனதருமைக் காதலி
நீ அன்றோ .. !

அடைமழையில் நனைந்திருந்தேன் 
அயராதுன்னை நினைத்திருந்தேன்
காலன் வந்து 
கல் வீசவோ 
நகர்ந்துனை நான் சென்றேன்

கடலில் தத்தளித்தேன் 
காலத்தின் சுழலில்
சுற்றித் திரிந்து
உனைத் தொலைத்தேன்
என் பிழை பொறுத்த
தமிழ்த் தாய்
அல்லவே நீ !
கட்டுமரம் தந்து 
எனைக் காத்தாய்
கரையேறி,
மீண்டும் உன் 
கரம் சேர்ந்தேன் 

கவிதையே !
எந்தன் காதலே !
தாய் மடி
தரும் சுகம் நீ
சூனிய வாழ்வின்
வரம் நீ
மூச்சுள்ள மட்டும்
முயற்ச்சிக்கின்றேன்
நீ எனக்களித்த 
பேரின்பம்
பகுதியேனும்
நான் உனக்களித்திட 




Sunday 20 April 2014

சாக்லேட்


2030-ம் ஆண்டு
"என்ன உளறுகிறாயா?" எனக் கேட்டான் அவன் நண்பன் அதிர்ச்சியாகி.
"ஆம்"
"ஆனால், அது சில ஆண்டுகளுக்கு முன்பு தடை செய்யப்பட்டது"
"அவளுக்காக நான் எதையும் செய்வேன். அவளுக்கு சிறு வயதிலிருந்தே அதைப் பிடிக்கும். இப்பொழுது தடை செய்து விட்டார்கள்"
"ஆனால் உற்பத்தியில் இல்லாத ஒன்றை எங்கு சென்று வாங்குவது?"
"அது உற்பத்தி செய்யப்படவில்லை என்று யார் சொன்னது?" என்று  அவன் தன் நண்பணைப் பார்த்து சிரித்தான்.

----------------------------------------------------------------------------------------------------------------

அவர்கள் ஒரு ஹோட்டலுக்குள் பிரவேசித்து ஒரு வெற்று மேசையை ஆக்கிரமித்தபோது கிட்டத்தட்ட இரவு 10 மணி ஆகி இருந்தது. அவன் ஒரு சர்வரை அடையாளம் கண்டு அவனை அழைத்து "ஐஸ் கிரீம்", என்றான். அவன் சொன்னதின் உள் அர்த்தத்தை புரிந்துக் கொண்ட சர்வர் அவனைப் பார்த்து புன்னகைத்து விட்டு ஒரு அறையினுள் சென்றான்.

அதற்குள் அவனது கைப்பேசி குறுங்செய்தியைக் கக்கியது.
“எங்கே இருக்கிறாய்?” என அவள் ஆங்கிலத்தில் கேட்டிருந்தாள்.
“உனக்காக ஒரு பரிசை வாங்கிக் கொண்டிருக்கிறேன்”
“என்ன பரிசு?”
“தரும் போது நீயேப் பார்த்துக்கொள்”

சிறிது நேரத்தில் அந்த சர்வர் திரும்பி வந்தான். அவனுடன் மற்றொருவனும் வந்தான். அவனையும் அவன் நண்பனையும் அவர்கள் ஒரு அறைக்குள் அழைத்து சென்றார்கள்.
----------------------------------------------------------------------------------------------------------------

அந்த போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த ஒரு தகவலை அந்த இன்ஸ்பெக்டர், மீண்டும் மீண்டும் கேட்டு விட்டு பின் தனது குழுவை அழைத்தார். சில நிமிடங்களில் குழுமிய அவர்களிடம், “நமக்கு வேலை வந்து விட்டது” என்றார்.

----------------------------------------------------------------------------------------------------------------
அவனும், அவனது நண்பனும் தரையின் கீழே இருக்கும் ஒரு அறைகுள் நுழைந்த போதே, அந்தப் பொருளின் வாசனையை அறிந்து கொண்டார்கள். அவர்களுடைய குழந்தை பருவத்தில் அதை உணர்ந்துள்ளார்கள். ஆவலை கட்டுப்படுத்த முடியாத அவன் நண்பன் “ஹை, சாக்லேட்” என கத்தியே விட்டான். அவர்களுடன் வந்து கொண்டிருந்த ஆள் அமைதியாக வருமாறு சைகை செய்தான். ஆம் அவர்கள் சாக்லேட் வாங்க தான் இங்கு வந்திருந்தார்கள்.

சாக்லேட் பல ஆண்டுகளுக்கு முன் தடை செய்யப்பட்டது. சாக்லேட் கோகோ தூள் என்ற மூலப்பொருளில் இருந்து தயாரிக்கப்பட்டது. இந்த கோகோ தூள்  கோகோ பீன்ஸில் இருந்து தயாரிக்கப்பட்டது. கோகோ பீன்ஸின் விளைச்சல் பூவி சூடாதல் காரணமாக நின்று விட்டது. ஆனால் சில விஞ்ஞானிகள் செயற்கை கொக்கோ விதைகளை உருவாக்க ஒரு வழி கண்டணர். ஆனால் அவற்றை நிறைய உட்கொண்டால் புற்றுநோய் வந்து சிலர் இறந்ததை அடுத்து, உலகம் முழுதும் சாக்லேட் தடை செய்யப்பட்டது. ஆனாலும் சாக்லேட் சட்டவிரோதமாக உலகம் முழுவதும் செயற்கை கொக்கோ விதைகளை பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படுகின்றன. அந்த இடங்களில் இதுவும் ஒன்றாகும்.

அவர்கள் அறையில் நுழைந்த போது, அவர்களுக்கு வழிகாட்டுபவன் மற்றொரு நபரிடம் அவர்களை இட்டுச்சென்றான். அவன் தான் தலைவனாக இருக்க வேண்டும். தலைவன் பல்வேறு சாக்லேட்டுகளை அவர்களுக்கு காட்டினான். அவனும், அவனது நண்பனும் தங்கள் கண்களை நம்பவில்லை. அனைத்து பிரபலமான சாக்லேட்களும் அங்கு இருந்தன. அவர்கள் ஒரு கணம் திகைத்து நின்றார்கள்.
----------------------------------------------------------------------------------------------------------------
அவன் தலைவனைப் பார்த்துக் கேட்டான், "எவ்வளவு?"
தலைவன் 5 விரல்களைக் காட்டி சிரித்தான்.
"500?”
தலைவன் அவனை முறைத்துக்கொண்டே இல்லை “5000” என்றான். அவன் தனது பர்ஸை திறந்து 1000 ரூபாய் தாள்களை உருவிய போது, போலீஸ் காலடிகளின் சத்தம் கேட்டது. இன்ஸ்பெக்டர் தனது அணியுடனும் முதல் முதலாக அவர்கள் சந்தித்த சர்வருடனும் நின்று கொண்டிருந்தார். அந்த சர்வர் ஒரு போலீஸ் துறை உளவாளி. இந்த சாக்லேட் வியாபாரம் மூலம், நாட்டுக்குள் கருப்பு பணத்தின் புழக்கம் அதிகரித்ததை அடுத்து, அரசாங்கம் இவர்களை ஒடுக்க எடுத்த நடவடிக்கைளில் இதுவும் ஒன்று. அவர்கள் அனைவரையும் கைது செய்தனர். அவனும், அவனது நண்பனும் இன்ஸ்பெக்டரிடம் சென்று தங்களை விட்டு விடுமாறு கேட்டனர். இன்ஸ்பெக்டர் கேட்டார், “யாருக்காக் சாக்லேட் வாங்க வந்தீங்க?”

நண்பன் அமைதியாக இருக்க, அவன் சொன்னான், “லவ்வர்காக சார்”

அவனது கைப்பேசியை வாங்கிய இன்ஸ்பெக்டர் அதிலுள்ள குறுந்செய்திகளைப் பார்த்தார்.

பின் மெதுவாக சொன்னார், “ஏறுங்கடா வண்டில”
----------------------------------------------------------------------------------------------------------------
இன்ஸ்பெக்டர் காலை தனது வீட்டிற்கு திரும்பினார்.
அவரது மகள் பள்ளிக்கு கிளம்பிக் கொண்டிருந்தார்.
அவர், “அப்பா உனக்கு என்ன கொண்டு வந்துள்ளேன் எனத் தெரியுமா?", என்றார்.
"இல்லை" என ஒரு குழந்தை மொழியில் சொன்னாள்.
அவர் குழந்தையை முத்தமிட்டு பள்ளிக்கு அனுப்பி வைத்தார். அவள் போன பிறகு, அவர் தனது மனைவியிடம் சாக்லேட்டை கொடுத்து பாலில் கலந்து அவர்களின் மகளுக்கு கொடுக்க சொன்னார்.
"இது எப்படி கிடைத்தது?" என அவரது மனைவி கேட்டார்.
"ஒரு சோதனையின் போது, உனக்கு ஒன்று தெரியுமா?"
"என்ன?"
"என்னை போல காதலியின் மேல் பைத்தியமாக உள்ள ஒருவனைப் பார்த்தேன்"
"நீங்கள் எப்படி அவ்வளவு உறுதியாக சொல்கிறீர்கள்?"
"நான் கல்லூரி நாட்களில் பல ஆண்டுகளுக்கு முன் செய்ததை அவன் இன்று செய்தான்"
----------------------------------------------------------------------------------------------------------------
அவன் அடுத்த நாள், தன் காதலியின் அறைக்கு சென்றான்.

"நான் உங்களிடம் பேச போவதில்லை,நேற்று நீ எங்கே சென்றாய்? தொலைபேசியில் பேசக்கூட நேரம் இல்லையா உனக்கு?”
"மன்னிக்கவும் அன்பே! நான் உனக்காக ஒரு பரிசு வாங்க சென்றேன், ஆனால் இடையில் அகப்பட்டு...”
"என்ன பரிசு?"
"இதோ", என்று அவன் தனது சட்டை பையில் இருந்து ஒரு விலையுயர்ந்த சாக்லேட்டடை வெளியே எடுத்தான். அவள் அதனைப் பார்த்து சந்தோஷமடைந்தாள். "ஆனால் யார் உன்னை பிடித்தது?"
"போலீஸ்"
"ஓ!"
"கவலைப் படாதே. நான் உன்னை சந்தோஷமாக செய்ய இந்த அளவிற்கு சென்றேன் என்று கேட்ட பிறகு,  இன்ஸ்பெக்டர்  ஒரு சாக்லேட்டுடன் என்னை விட்டு விட்டார்.” என அவன் சிரித்தான். அவள் அவனை கட்டி அணைத்து அவனது முகத்தின் மேல் முத்தமிட்டாள்.
----------------------------------------------------------------------------------------------------------------
"நீங்கள் அவனை விட்டு விட்டீர்களா?" என இன்ஸ்பெக்டரின் மனைவி கேட்டார்.

"ஆமாம் இரண்டு சாக்லேட்டுடன்". இன்ஸ்பெக்டரின் மனைவி அவரை கட்டி அணைத்து "ஐ லவ் யூ" என்று கூறி முத்தமிட்டார்.
----------------------------------------------------------------------------------------------------------------
சிறிது நேரம் கழித்து, அவன் மற்றொரு பெண்ணின் வீட்டிற்கு சென்று அதே முதல் பெண்ணிடம் சொன்ன கதையை மீண்டும் கூறினான்.
"அட கடவுளே! என்ன நடந்தது?"
“பயப்படாதே. . நான் உன்னை சந்தோஷமாக செய்ய இந்த அளவிற்கு சென்றேன் என்று கேட்ட பிறகு,  இன்ஸ்பெக்டர்  ஒரு சாக்லேட்டுடன் என்னை விட்டு விட்டார்.” என அவன் சிரித்தான்.
அவள் அவனை கட்டி அணைத்து அவனது முகத்தின் மேல் முத்தமிட்டாள்.
----------------------------------------------------------------------------------------------------------------

[ஒரு ஆனந்த விகடன் துணுக்கு செய்தியை மையமாக வைத்து]

Friday 18 April 2014

கிராமத்துக் காதல்




அடங்காம மனசு  அலபாயுது
மாமா,
ஆகாசம் தொடும் உன் ஒசரத்துல!


கண் பார்வையா, இல்ல கத்தி வீச்சா
மாமா,
கெரங்கிக் கெடக்குறேன் உன் பார்வையில!


முத்துப்பல்லா இல்ல ஒத்த சொல்லா
மாமா,
ஊசி தைக்கிதே என் உசுருக்குள்ள!


கழுத்து மச்சம் அத பாத்தே நித்தம்
மாமா,
கரைஞ்சு போறேன் கற்பூரம் போல!


விரிஞ்ச மார்புக்குள்ள, பரந்த உன் மனசுக்கே
மாமா,
பம்பரமா சுத்துறேன் உன் பின்னால!


சொடுக்கு போட்டு நீ முறுக்கும் மீசைக்கு
மாமா,
சொக்கித் தவிக்கிறேன் மனசுக்குள்ள!


சண்டையில வந்து உன் சண்டித்தனம் பாத்து
மாமா,
சலனப்பட்ட நெஞ்சுக்குள்ள சத்தமேயில்ல!


சாஞ்ச நடை சண்டியரே, வெள்ள வேட்டி மம்முதரே
மாமா,
வெக்கத்துல வேகுது இந்த வெடலப்புள்ள!


எட்டு வச்சு நீ மடிச்சுக் கட்டுற வேட்டிக்கு
மாமா,
மவுசு இன்னும் கொறையவேயில்ல ஊருக்குள்ள!


அய்யனாரு சாமி போல, அஞ்ச வைக்கிற தோரண
மாமா,
அசந்து போயி நின்ன இமை சேரவே இல்ல!


தூணு துரும்பெல்லாம் உன் மொகமாம், தும்மும்போதும் உன் நெனப்பாம்
மாமா,
தூக்கங்கெட்டு துடிக்கிறேன் தூண்டிப்புழுவப்போல !


வானமளவு ஆச வளத்து, வண்ண வண்ணமா தோரணம் கட்டி
மாமா,
ஒனக்கான என் ஏக்கத்த நான் எப்புடிச் சொல்ல!


மண்ணுக்குள்ள நான் போகுமுன்ன, உன் எண்ணத்த தான் சொல்லு
மாமா,
மூனு முடிச்சுக்குதான் நிக்குது என் உசுரு பூமியில!!!!  

Sunday 13 April 2014

சாதி

































சற்றேனும் சிந்தித்தாயா ?
ஒன்றல்ல இரண்டல்ல பல்லாயிரம் உயிர்கட்கும்
சாதி இரண்டுதான் !
ஒன்று உயிர்த்த ஜாதி மற்றது மரித்த சாதி
குருதியில் தெரியுமோ உன் ஜாதி
எலும்பு கூட்டினில் தெரியுமோ உன் சாதி
இல்லை சதை பிண்டத்தில் தெரியுமோ உன் சாதி
ஊன கண் காட்டும் கபடமாட இந்த சாதி..!
உணராத மந்தையாய்
உன்னை பகடையாகும் பாவியர்பின்
செல்லாதிரு உன்னையே மடமையால் கொல்லாதிரு
எது சாதி ?
சில மூடர் கதை சொல்ல
பலர் அதை கண்மூடி பின்செல்ல
உன்னையும் மதிகெட்டு மந்தியைபோல் ஆடச்செயும்
மூடத்தனம் தான் சாதியா ?
உன்னை உயர்ந்த சாதியனாய் காட்டிகொள்ள
மற்றோரை இழிவு செய்வதுவோ உயர்ந்த மனிதம்
உன் சாதியினால் எனத்தான் சாதித்தாய்?
உள்ளம் சுடும் வார்த்தைகள் உன் நாவிநில் உதிக்கையில்
போசுங்கவில்லையோ உன் நாக்கு?
வலியவரை ஒடுக்க நினைக்கையில்
வலிக்கவில்லையோ உன் உள்ளம்?
எது உயர்வு?
உன்னை உயர்ந்தவனாய் காட்டிக்கொள்ள
வல்லவன் போல் நடிப்பதுவோ உயர்வு?
திறமை இருந்தும் சாதியினால் ஒடுகுவதுவோ உயர்வு?
திருந்தாயோ மூடனே..?
உன்வாழ்வை மதியிழந்து சாதி சதியில் தொலைத்துவிட்டாய்!!!
உன் சந்ததியாவது சாதி சாக்கடையில் குளிக்காதிருக்கட்டும்!!!
துறவு பூன தேவை இல்லை,
உன்னை புத்தன் ஆகா சொல்லவில்லை
சாதிபேயின் கை பொம்மை ஆகதிரு போதும்...!!


என் நட்பே - 2


























என் மகிழ்ச்சியின் போது மனம் மகிழ்ந்தவளே
என் துன்பத்தின் போது கண்ணீர் துடைத்தவளே 
என் உணர்வுகளுக்கு உரு கொடுத்தவளே
என் சிரிப்பிற்கு காரணமானவளே

ஒருநாளும் நினைத்ததில்லை!!!!!!!!!!!!!!!
என் கண்ணீருக்கு காரணமாவாய் என்று
என் வாழ்வின்  வானவில்லாய் சில நொடியில் பிரிவாய் என்று
நீர்குமிழியாய் மறைவாய் என்று………..

என் இரவுகள் பகலாய் போனதடி  
நாம் ரசித்த தென்றல் காற்றும்
புயலாய் தோன்றுதடி
நீ இல்லா என் இரவில்

புரியா புதிராய் உன் பிரிவு எனக்கு
வளர்ந்து தேய பிறை நிலா அல்ல 
நம் நட்பு!!!!!!!!!!!!!!!!

என் வாழ்வில்
முதல் முறை உணர்கிறேன் நட்பே
தனிமையின் வலியை

என் மனதின் சோகங்களை கண்டுபிடித்தவளே
இன்று உன் மனதில் நான் இல்லாமல் போனது ஏனோ???

வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை தோழி 
உன் பிரிவின் வலியை
மரணம் என்னை தழுவும் வரை

என்றும் என் உயிர் உனக்காக

Friday 11 April 2014

காற்றில் கலைந்தோடிய கவிதைகள்


மழையின் பெயரிட்டு
தமிழின் விதையிட்டு
அழகழகாய் முளைத்தன
கவித்தமிழ் பூக்கள்
அள்ளக் குறையாத
அட்சய பாத்திரமாம் உள்ளே
திகட்டாத தெளி தேனாம்
தாய் தமிழ்
வரண்டு அழுத நிலத்தினுள்
திரண்டு எழுந்த நீரூற்று
இருப்பிடம் வெவ்வேறு
இணைந்தது எவ்வாறு
எண்ணங்கள் வெவ்வேறு
கலந்தது எவ்வாறு
தூரிகை கரைய
தூய்தமிழ் தவழ
தூமழையில்
அன்றோ தினமும் திருவிழா
என்னாச்சோ ஏதாச்சோ
என்றும்
இருண்டே கிடக்குது வானம்
வரண்டே கிடக்குது பூமி
நில்லெனப் பெய்த மழை இல்லை
சில்லெனத் தெரித்த துளி இல்லை
தாகம் கொண்டு பொழிந்த
கவிகளும் இல்லை
காற்றில் கலைந்தோடி
அழிந்து கொண்டிருக்கும்
எண்ணங்களையும்
திறமைகளையும்
என்ன செய்யப்போகிறோம்