சற்றேனும் சிந்தித்தாயா ?
ஒன்றல்ல இரண்டல்ல பல்லாயிரம் உயிர்கட்கும்
சாதி இரண்டுதான் !
ஒன்று உயிர்த்த ஜாதி மற்றது மரித்த சாதி
குருதியில் தெரியுமோ உன் ஜாதி
எலும்பு கூட்டினில் தெரியுமோ உன் சாதி
இல்லை சதை பிண்டத்தில் தெரியுமோ உன் சாதி
ஊன கண் காட்டும் கபடமாட இந்த சாதி..!
உணராத மந்தையாய்
உன்னை பகடையாகும் பாவியர்பின்
செல்லாதிரு உன்னையே மடமையால் கொல்லாதிரு
எது சாதி ?
சில மூடர் கதை சொல்ல
பலர் அதை கண்மூடி பின்செல்ல
உன்னையும் மதிகெட்டு மந்தியைபோல் ஆடச்செயும்
மூடத்தனம் தான் சாதியா ?
உன்னை உயர்ந்த சாதியனாய் காட்டிகொள்ள
மற்றோரை இழிவு செய்வதுவோ உயர்ந்த மனிதம்
உன் சாதியினால் எனத்தான் சாதித்தாய்?
உள்ளம் சுடும் வார்த்தைகள் உன் நாவிநில்
உதிக்கையில்
போசுங்கவில்லையோ உன் நாக்கு?
வலியவரை ஒடுக்க நினைக்கையில்
வலிக்கவில்லையோ உன் உள்ளம்?
எது உயர்வு?
உன்னை உயர்ந்தவனாய் காட்டிக்கொள்ள
வல்லவன் போல் நடிப்பதுவோ உயர்வு?
திறமை இருந்தும் சாதியினால் ஒடுகுவதுவோ உயர்வு?
திருந்தாயோ மூடனே..?
உன்வாழ்வை மதியிழந்து சாதி சதியில்
தொலைத்துவிட்டாய்!!!
உன் சந்ததியாவது சாதி சாக்கடையில்
குளிக்காதிருக்கட்டும்!!!
துறவு பூன தேவை இல்லை,
உன்னை புத்தன் ஆகா சொல்லவில்லை
சாதிபேயின் கை பொம்மை ஆகதிரு போதும்...!!
Nanba, Semma ponga... Arumai... thayavau seithu eluthuvathai continue pannunga.. in free time....
ReplyDelete