Sunday 20 April 2014

சாக்லேட்


2030-ம் ஆண்டு
"என்ன உளறுகிறாயா?" எனக் கேட்டான் அவன் நண்பன் அதிர்ச்சியாகி.
"ஆம்"
"ஆனால், அது சில ஆண்டுகளுக்கு முன்பு தடை செய்யப்பட்டது"
"அவளுக்காக நான் எதையும் செய்வேன். அவளுக்கு சிறு வயதிலிருந்தே அதைப் பிடிக்கும். இப்பொழுது தடை செய்து விட்டார்கள்"
"ஆனால் உற்பத்தியில் இல்லாத ஒன்றை எங்கு சென்று வாங்குவது?"
"அது உற்பத்தி செய்யப்படவில்லை என்று யார் சொன்னது?" என்று  அவன் தன் நண்பணைப் பார்த்து சிரித்தான்.

----------------------------------------------------------------------------------------------------------------

அவர்கள் ஒரு ஹோட்டலுக்குள் பிரவேசித்து ஒரு வெற்று மேசையை ஆக்கிரமித்தபோது கிட்டத்தட்ட இரவு 10 மணி ஆகி இருந்தது. அவன் ஒரு சர்வரை அடையாளம் கண்டு அவனை அழைத்து "ஐஸ் கிரீம்", என்றான். அவன் சொன்னதின் உள் அர்த்தத்தை புரிந்துக் கொண்ட சர்வர் அவனைப் பார்த்து புன்னகைத்து விட்டு ஒரு அறையினுள் சென்றான்.

அதற்குள் அவனது கைப்பேசி குறுங்செய்தியைக் கக்கியது.
“எங்கே இருக்கிறாய்?” என அவள் ஆங்கிலத்தில் கேட்டிருந்தாள்.
“உனக்காக ஒரு பரிசை வாங்கிக் கொண்டிருக்கிறேன்”
“என்ன பரிசு?”
“தரும் போது நீயேப் பார்த்துக்கொள்”

சிறிது நேரத்தில் அந்த சர்வர் திரும்பி வந்தான். அவனுடன் மற்றொருவனும் வந்தான். அவனையும் அவன் நண்பனையும் அவர்கள் ஒரு அறைக்குள் அழைத்து சென்றார்கள்.
----------------------------------------------------------------------------------------------------------------

அந்த போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த ஒரு தகவலை அந்த இன்ஸ்பெக்டர், மீண்டும் மீண்டும் கேட்டு விட்டு பின் தனது குழுவை அழைத்தார். சில நிமிடங்களில் குழுமிய அவர்களிடம், “நமக்கு வேலை வந்து விட்டது” என்றார்.

----------------------------------------------------------------------------------------------------------------
அவனும், அவனது நண்பனும் தரையின் கீழே இருக்கும் ஒரு அறைகுள் நுழைந்த போதே, அந்தப் பொருளின் வாசனையை அறிந்து கொண்டார்கள். அவர்களுடைய குழந்தை பருவத்தில் அதை உணர்ந்துள்ளார்கள். ஆவலை கட்டுப்படுத்த முடியாத அவன் நண்பன் “ஹை, சாக்லேட்” என கத்தியே விட்டான். அவர்களுடன் வந்து கொண்டிருந்த ஆள் அமைதியாக வருமாறு சைகை செய்தான். ஆம் அவர்கள் சாக்லேட் வாங்க தான் இங்கு வந்திருந்தார்கள்.

சாக்லேட் பல ஆண்டுகளுக்கு முன் தடை செய்யப்பட்டது. சாக்லேட் கோகோ தூள் என்ற மூலப்பொருளில் இருந்து தயாரிக்கப்பட்டது. இந்த கோகோ தூள்  கோகோ பீன்ஸில் இருந்து தயாரிக்கப்பட்டது. கோகோ பீன்ஸின் விளைச்சல் பூவி சூடாதல் காரணமாக நின்று விட்டது. ஆனால் சில விஞ்ஞானிகள் செயற்கை கொக்கோ விதைகளை உருவாக்க ஒரு வழி கண்டணர். ஆனால் அவற்றை நிறைய உட்கொண்டால் புற்றுநோய் வந்து சிலர் இறந்ததை அடுத்து, உலகம் முழுதும் சாக்லேட் தடை செய்யப்பட்டது. ஆனாலும் சாக்லேட் சட்டவிரோதமாக உலகம் முழுவதும் செயற்கை கொக்கோ விதைகளை பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படுகின்றன. அந்த இடங்களில் இதுவும் ஒன்றாகும்.

அவர்கள் அறையில் நுழைந்த போது, அவர்களுக்கு வழிகாட்டுபவன் மற்றொரு நபரிடம் அவர்களை இட்டுச்சென்றான். அவன் தான் தலைவனாக இருக்க வேண்டும். தலைவன் பல்வேறு சாக்லேட்டுகளை அவர்களுக்கு காட்டினான். அவனும், அவனது நண்பனும் தங்கள் கண்களை நம்பவில்லை. அனைத்து பிரபலமான சாக்லேட்களும் அங்கு இருந்தன. அவர்கள் ஒரு கணம் திகைத்து நின்றார்கள்.
----------------------------------------------------------------------------------------------------------------
அவன் தலைவனைப் பார்த்துக் கேட்டான், "எவ்வளவு?"
தலைவன் 5 விரல்களைக் காட்டி சிரித்தான்.
"500?”
தலைவன் அவனை முறைத்துக்கொண்டே இல்லை “5000” என்றான். அவன் தனது பர்ஸை திறந்து 1000 ரூபாய் தாள்களை உருவிய போது, போலீஸ் காலடிகளின் சத்தம் கேட்டது. இன்ஸ்பெக்டர் தனது அணியுடனும் முதல் முதலாக அவர்கள் சந்தித்த சர்வருடனும் நின்று கொண்டிருந்தார். அந்த சர்வர் ஒரு போலீஸ் துறை உளவாளி. இந்த சாக்லேட் வியாபாரம் மூலம், நாட்டுக்குள் கருப்பு பணத்தின் புழக்கம் அதிகரித்ததை அடுத்து, அரசாங்கம் இவர்களை ஒடுக்க எடுத்த நடவடிக்கைளில் இதுவும் ஒன்று. அவர்கள் அனைவரையும் கைது செய்தனர். அவனும், அவனது நண்பனும் இன்ஸ்பெக்டரிடம் சென்று தங்களை விட்டு விடுமாறு கேட்டனர். இன்ஸ்பெக்டர் கேட்டார், “யாருக்காக் சாக்லேட் வாங்க வந்தீங்க?”

நண்பன் அமைதியாக இருக்க, அவன் சொன்னான், “லவ்வர்காக சார்”

அவனது கைப்பேசியை வாங்கிய இன்ஸ்பெக்டர் அதிலுள்ள குறுந்செய்திகளைப் பார்த்தார்.

பின் மெதுவாக சொன்னார், “ஏறுங்கடா வண்டில”
----------------------------------------------------------------------------------------------------------------
இன்ஸ்பெக்டர் காலை தனது வீட்டிற்கு திரும்பினார்.
அவரது மகள் பள்ளிக்கு கிளம்பிக் கொண்டிருந்தார்.
அவர், “அப்பா உனக்கு என்ன கொண்டு வந்துள்ளேன் எனத் தெரியுமா?", என்றார்.
"இல்லை" என ஒரு குழந்தை மொழியில் சொன்னாள்.
அவர் குழந்தையை முத்தமிட்டு பள்ளிக்கு அனுப்பி வைத்தார். அவள் போன பிறகு, அவர் தனது மனைவியிடம் சாக்லேட்டை கொடுத்து பாலில் கலந்து அவர்களின் மகளுக்கு கொடுக்க சொன்னார்.
"இது எப்படி கிடைத்தது?" என அவரது மனைவி கேட்டார்.
"ஒரு சோதனையின் போது, உனக்கு ஒன்று தெரியுமா?"
"என்ன?"
"என்னை போல காதலியின் மேல் பைத்தியமாக உள்ள ஒருவனைப் பார்த்தேன்"
"நீங்கள் எப்படி அவ்வளவு உறுதியாக சொல்கிறீர்கள்?"
"நான் கல்லூரி நாட்களில் பல ஆண்டுகளுக்கு முன் செய்ததை அவன் இன்று செய்தான்"
----------------------------------------------------------------------------------------------------------------
அவன் அடுத்த நாள், தன் காதலியின் அறைக்கு சென்றான்.

"நான் உங்களிடம் பேச போவதில்லை,நேற்று நீ எங்கே சென்றாய்? தொலைபேசியில் பேசக்கூட நேரம் இல்லையா உனக்கு?”
"மன்னிக்கவும் அன்பே! நான் உனக்காக ஒரு பரிசு வாங்க சென்றேன், ஆனால் இடையில் அகப்பட்டு...”
"என்ன பரிசு?"
"இதோ", என்று அவன் தனது சட்டை பையில் இருந்து ஒரு விலையுயர்ந்த சாக்லேட்டடை வெளியே எடுத்தான். அவள் அதனைப் பார்த்து சந்தோஷமடைந்தாள். "ஆனால் யார் உன்னை பிடித்தது?"
"போலீஸ்"
"ஓ!"
"கவலைப் படாதே. நான் உன்னை சந்தோஷமாக செய்ய இந்த அளவிற்கு சென்றேன் என்று கேட்ட பிறகு,  இன்ஸ்பெக்டர்  ஒரு சாக்லேட்டுடன் என்னை விட்டு விட்டார்.” என அவன் சிரித்தான். அவள் அவனை கட்டி அணைத்து அவனது முகத்தின் மேல் முத்தமிட்டாள்.
----------------------------------------------------------------------------------------------------------------
"நீங்கள் அவனை விட்டு விட்டீர்களா?" என இன்ஸ்பெக்டரின் மனைவி கேட்டார்.

"ஆமாம் இரண்டு சாக்லேட்டுடன்". இன்ஸ்பெக்டரின் மனைவி அவரை கட்டி அணைத்து "ஐ லவ் யூ" என்று கூறி முத்தமிட்டார்.
----------------------------------------------------------------------------------------------------------------
சிறிது நேரம் கழித்து, அவன் மற்றொரு பெண்ணின் வீட்டிற்கு சென்று அதே முதல் பெண்ணிடம் சொன்ன கதையை மீண்டும் கூறினான்.
"அட கடவுளே! என்ன நடந்தது?"
“பயப்படாதே. . நான் உன்னை சந்தோஷமாக செய்ய இந்த அளவிற்கு சென்றேன் என்று கேட்ட பிறகு,  இன்ஸ்பெக்டர்  ஒரு சாக்லேட்டுடன் என்னை விட்டு விட்டார்.” என அவன் சிரித்தான்.
அவள் அவனை கட்டி அணைத்து அவனது முகத்தின் மேல் முத்தமிட்டாள்.
----------------------------------------------------------------------------------------------------------------

[ஒரு ஆனந்த விகடன் துணுக்கு செய்தியை மையமாக வைத்து]

3 comments:

  1. நன்றாக இருக்கிறது கார்த்தி

    ReplyDelete
  2. :) who is that another girl ;)

    ReplyDelete
  3. ரசித்தேன் நண்பா...

    ReplyDelete