Thursday, 24 April 2014

கவிதைக் காதல்




கவிதையே !
எந்தன் காதலே !
காற்றில் அலைந்த 
என் எண்ணங்களுக்கு
முகவரி ஒன்றை 
முன் நிறுத்தினாய்
காகிதத்தை ஆயுதமாக்கி
பேனாவைப் போர்வாளாக்கும்
புது வித்தை
நீ புகட்டினாய்

சிந்தனையினைச் செம்மையாக்கி
செயல்பாட்டைச் செழுமையாக்கி
கவிதை உந்தன் 
காதலினால்,
கண்ணம்மாவினைக் கண்டறிந்தவள்
எனதருமைக் காதலி
நீ அன்றோ .. !

அடைமழையில் நனைந்திருந்தேன் 
அயராதுன்னை நினைத்திருந்தேன்
காலன் வந்து 
கல் வீசவோ 
நகர்ந்துனை நான் சென்றேன்

கடலில் தத்தளித்தேன் 
காலத்தின் சுழலில்
சுற்றித் திரிந்து
உனைத் தொலைத்தேன்
என் பிழை பொறுத்த
தமிழ்த் தாய்
அல்லவே நீ !
கட்டுமரம் தந்து 
எனைக் காத்தாய்
கரையேறி,
மீண்டும் உன் 
கரம் சேர்ந்தேன் 

கவிதையே !
எந்தன் காதலே !
தாய் மடி
தரும் சுகம் நீ
சூனிய வாழ்வின்
வரம் நீ
மூச்சுள்ள மட்டும்
முயற்ச்சிக்கின்றேன்
நீ எனக்களித்த 
பேரின்பம்
பகுதியேனும்
நான் உனக்களித்திட 




2 comments:

  1. as always super kannamma
    காகிதத்தை ஆயுதமாக்கி
    பேனாவைப் போர்வாளாக்கும்
    புது வித்தை
    நீ புகட்டினாய்

    ReplyDelete
  2. கண்ணம்மா.. தங்களின் கவிதை நயம் இன்னும் குறையாமல் அப்படியே இருக்கின்றது.
    சிந்திக்க நேரம் ஒதுக்கி தங்களின் பணியை தொடர வேண்டுகின்றேன்...

    ReplyDelete