மழையின் பெயரிட்டு
தமிழின் விதையிட்டு
அழகழகாய் முளைத்தன
கவித்தமிழ் பூக்கள்
அள்ளக் குறையாத
அட்சய பாத்திரமாம்
உள்ளே
திகட்டாத தெளி
தேனாம்
தாய் தமிழ்
வரண்டு அழுத நிலத்தினுள்
திரண்டு எழுந்த
நீரூற்று
இருப்பிடம் வெவ்வேறு
இணைந்தது எவ்வாறு
எண்ணங்கள் வெவ்வேறு
கலந்தது எவ்வாறு
தூரிகை கரைய
தூய்தமிழ் தவழ
தூமழையில்
அன்றோ தினமும்
திருவிழா
என்னாச்சோ ஏதாச்சோ
என்றும்
இருண்டே கிடக்குது
வானம்
வரண்டே கிடக்குது
பூமி
நில்லெனப் பெய்த
மழை இல்லை
சில்லெனத் தெரித்த
துளி இல்லை
தாகம் கொண்டு பொழிந்த
கவிகளும் இல்லை
காற்றில் கலைந்தோடி
அழிந்து கொண்டிருக்கும்
எண்ணங்களையும்
திறமைகளையும்
என்ன செய்யப்போகிறோம்
No comments:
Post a Comment