Friday 17 May 2013

வரலாறு முக்கியம் அமைச்சரே - 6



பௌத்தத்தைப் பற்றி சென்ற பகுதியில் கண்டோம். இப்போது சமணத்தைப்(Jainism) பற்றிக் காண்போம். சமணம் என்றால் முதலில் நம் நினைவுக்கு வருபவர், மகாவீரர். ஆனால் சமணத்தைத் தோற்றுவித்தவர் அவர் அல்லர். சமணம், ரிஷபநாதர் என்ற க்ஷத்ரிய குருவால் உருவம் தரப்பட்டது. இவர், சமணத்தை வளர்த்த இருபத்து நான்கு தீர்த்தங்காரர்கள் (24 Tritankaras)  என்று அழைக்கப்பட்ட க்ஷத்ரிய குருமார்களில் முதன்மையானவர். (அவரது சின்னம்: காளை). அவரை அடுத்த குருமார்களுள் கடைசி இருவர் மட்டுமே வரலாற்றுப் பிரசித்திப் பெற்றவர்கள்.

இருபத்து மூன்றாவது குரு, பர்ஷ்வநாதர் (சின்னம்: பாம்பு). அவரின் தந்தை, பனாரஸ் பகுதியை ஆண்ட அஷ்வசேனர். இந்த குரு, கீழ்க்கண்டவற்றை எதிர்த்தார். அவையாவன:

* பிற உயிர்களைத் துன்புறுத்துதல்.
* பொய்க் கூறுதல்.
* திருடுதல்.
* தனக்கென எதையும் வைத்துக்கொள்ளுதல்.

அவரை அடுத்த கடைசி குரு தான், வர்தமான் மகாவீரர். (சின்னம்: சிங்கம்). மேற்கூறியப் பட்டியலில் இவர், திருமணத்தையும் சேர்த்து எதிர்த்தார்.


மகாவீரர்:


பிறப்பு
599 BCE
பிறப்பிடம்
 பீகார் மாநிலத்தின்முஜாஃபர்பூர் மாவட்டத்தின்குண்டலகிராமம்.
தந்தை
நாட்ரிகா குல மக்களின்தலைவர்சித்தார்த்தர்.
தாய்
வைசாலியின் லிச்சாவிஇளவரசர் சேதக்கின்சகோதரிதிரிசாலா.

மகாவீரர், ஹரியன்யாகா வம்ச வழி வந்த பிம்பிசாராவுக்கு ஒரு வகையில் உறவினர் என்று சொல்லப்படுகின்றது. அவர்,  யசோதை என்றப் பெண்ணை மணம் முடித்து, ப்ரியதர்ஷனா என்ற மகளையும் கொண்டிருந்தார். தன் மருமகனான ஜமாலியே அவரது முதல் சீடர். மகாவீரரின் முப்பதாவது அகவையில் அவரது பெற்றோரை இழந்த அவர், அதன் பின் ஒரு நாடோடி வாழ்க்கையை வாழத் துவங்கினார்.
நாடோடியாகிய பதின்மூன்றாவது வருடத்தில், ஜ்ரிம்பிகா கிராமம் என்ற பகுதியில் அவர் முக்தியடைந்தார். அது முதல், அவர், "ஜினா" (அ) " ஜிதேந்த்ரியர்" மற்றும் மகாவீரர் என்று அழைக்கப்பட்டார். (ஜிதேந்த்ரியர் என்பதற்கு வென்றவர் என்று பொருள்). அவரைப் பின்பற்றியவர்கள், ஜைனர்கள் (சமணர்கள்) ஆனார்கள். இதோடு அரிஹந்த் என்றப் பட்டத்தையும் அவர் பெற்றார்.

மகாவீரர் தனது எழுபத்திரண்டாவது வயதில் (527 BCஏ) பாட்னா அருகே பாவபுரி என்ற இடத்தில் உயிர் நீத்தார். அப்போது பீகார் பகுதியை ஆண்டுவந்த சந்திரகுப்த மௌரியரின் ஆட்சியில் கடும் வெள்ளம் நிலவியது. அங்கிருந்த சமண துறவியர்கள் கங்கா பள்ளத்தாக்கிலிருந்து தெற்கு நோக்கி தெக்கான் பீடபூமிக்கு இடம் பெயர்ந்தனர். அங்கே அவர்கள் பல்வேறு ஜைன மையங்களை எழுப்பினார்கள். இந்த இடப்பெயர்ச்சி, சமணத்தில் ஒரு பெரும் பிளவையே ஏற்படுத்தியது.

பத்ரபாஹூ என்ற துறவி, மகாவீரரைப் போல, ஆடை அணியாமல் இருப்பதை ஆமோதித்தார். இவர் தான் தெக்கான பகுதி சமணர்களை வழி நடத்தி வந்தவர். இப்படி இடம் பெயர்ந்தவர்கள், நிர்வானத்தைக் கடைப்பிடிக்க, மறுபுறம், இடம் பெயராத சமணர்களுக்குத் தலைமை வகுத்த, ஸ்தூலபத்ரர் என்னும் துறவி சமணர்களை வெள்ளை ஆடை அணிய அனுமதித்தார். இப்படியாய் தலைமைகளின் மாறுதல்களும் இடப்பெயர்ச்சியும் இந்த சமணத்தை இரு பிரிவாய்ப் பிரித்தன. அவையாவன:

1. திகம்பரர்கள் என்று அழைக்கப்பட்ட நிர்வானத்தைப் பேணியர்வர்கள் (Sky clad).
2. ஸ்வேதம்பரர்கள் என்று அழைக்கப்பட்ட வெள்ளை ஆடை அணிந்தவர்கள் (White-Clad).

மகாவீரரின் அறிவுரைகள்:

இவரும் புத்தரைப் போலவே வேதங்களில் கூறப்பட்ட பலி கொடுக்கும் முறைகளை எதிர்த்தார். அவர் நம்பிக்கைகளுள் முக்கியமானது, "அகிம்சை". ஒரு அணுவுக்குக் கூட உயிர் உண்டு; அதைத் துன்புறுத்தக் கூடாது என்று தெளிவாக இருந்தார்.
அதே சமயம், உலக உயிர்களுகெல்லாம் மேல் ஒரு பெரும் சக்தி நம்மை ஆண்டுக்கொண்டிருக்கிறது என்பதை அவர் எதிர்த்தார். மாறாக அனைத்திற்கும் ஒரு பொது நியதி உள்ளதென்பதை அவர் நம்பினார். கடவுள் இல்லை என வெளிப்படையாக அவர் கூறவில்லை எனினும், கடவுளுக்கு அவர் முக்கியத்துவம் கொடுத்ததில்லை. கடவுள், ஜைனர்களை விட ஒரு படி கீழாகவே கருதப்பட்டார்.

மொற்றொரு முக்கியமான அம்சம் என்னவென்றால், ஏற்றத்தாழ்வு இல்லாத, வகுப்புகளற்ற ஒரு முறையை அவர் காத்தார்.
ஜைனர்களின் அடிப்படைக் கோட்பாடு, "அனேகந்தவாடா". இது பல் வகைப்பாட்டுத் தன்மையைக் குறிக்கின்றது. அதாவது, உண்மையை வெவ்வேறு கோணங்களில் பார்க்க வேண்டும். ஒரு கோணத்தில் மட்டுமே கண்டால் அது முழுமையான உண்மை ஆகாது என்கிறார்.

அவர், மோட்சத்தை அடைய, "Triratnas" என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் கீழ்க்கண்ட மூன்றினை வலியுறுத்துகின்றார்.
1. சரியான நம்பிக்கை (Right Faith)
2. சரியான அறிவு (Right Knowledge)
3. சரியான நடத்தை (Right Conduct)

ஜைன குழுக்கள்:


வருடம்இடம்தலைமை வகித்தவர்முடிவு
மூன்றாம் நூற்றண்டு  BCEபாடலிபுத்ராஸ்தூலபத்ரர்சமண இலக்கியங்களான பன்னிரண்டு அங்கங்களின் படைப்பு
ஐந்தாம் நூற்றண்டு BCEவல்லபி தேவாரிதிகானிபன்னிரண்டு அங்கங்களின் இறுதி மற்றும் பன்னிரண்டு உப அங்கங்களின் படைப்பு
    



சமண தாக்கம்:


சமணம் பல மாறுதல்களை ஏற்படுத்தியுள்ளது. சந்திர மௌரியரின் காலத்தில், புகழின் உச்சியில் இருந்த சமணம், கிருத்துவர் பிறந்த முதல் நூற்றண்டில், கலிங்க நாட்டு அரசரான கரவேலராலும் மதிக்கப்பட்டது.  சமணம் பல பிராந்திய மொழிகளை உருவாக்கியது. சௌரசேனா என்ற மொழியிலிருந்து மராத்தி, குஜராதி, ராஜஸ்தானி மற்றும் கன்னடம் போன்ற மொழிகள் உருவாகின. ஆனால் சமண இலக்கியங்கள் என்னவோ அர்த்-மகதி மற்றும் பிரக்ரித் மொழிகளில் தான் இருந்தன.

முடிவு:

சமண முடிவுக்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும் முக்கியமாகக் கருதப்படுவது இது தான். அவர்கள், உடல்நலக் குறைபாடு சமயத்திலும் மருந்துகளைத் துறந்தனர். நோய்க் கிருமிகளைக் கொல்லக் கூடாதக் காரணத்தினால் (அகிம்சையின் உச்சம்). மேலும் மரங்களும் உயிருள்ளவை என நம்பி, அதன் காய்க்கனிகளையும் பறிக்க மறுத்த சமண  மதம், பாமர மக்களின் வாழ்வில் சென்று ஒரு மூலையில் ஒளிந்துக்கொண்டதே தவிர, அவர்களை ஈர்க்கவில்லை. இறுதிக் காரணமாக, மௌரியர்களுக்கடுத்த மன்னர்கள் யாரும் இம்மதத்தைப் ஆதரிக்கவில்லை.

ஒரு வழியாக சமண மதம் முடிவைத் தழுவியது. சமண மதம் பகுதியில், பெரும்பான்மையாக நாம் மௌரியர்களைப் பற்றியேக் கண்டோம். அவர்கள் யார் என்பதை அடுத்தப் பகுதியில் காண்போம்.

2 comments:

  1. மிகவும் பயனுள்ள பதிவு... நன்றி..

    ReplyDelete