ஸ்ரீதரை
ஏற்றிக் கொண்டு அந்த போலீஸ்
ஜீப் மெதுவாக டிராப்பிக்கில்
ஊர்ந்துக் கொண்டிருந்தது.
அதனுள்
ஸ்ரீதர் கண்ணை மூடிக் கொண்டு
அமர்ந்திருந்தான்.
அவனுடன்
பின்னால் ஒரு கான்ஸ்டேபிளும்
முன்னால் ஒரு இன்ஸ்பெக்டரும்
இருந்தனர்.
அப்போது
அவனருகில் அமர்ந்திருந்த
கான்ஸ்டேபிள் தூங்குகிறான்
என நினைத்து அவனைப் பிடித்து
உலுக்கினார்.
அவன்
கண்ணைத் திறந்தவுடன்,
“என்ன
கனவா?”
எனக்
கேட்டார்.
“நீங்கள்
chaos
theory-யைப்
பற்றிக் கேள்விப் பட்டிருக்கீங்களா?”
“அப்படின்னா?”
“இன்னிக்கி
எங்கூட வர வேண்டிய கான்ஸ்டேபிள்
நீங்க இல்ல தான?
“ஆமா”
“என்னாச்சி
அவருக்கு?”
“அவருக்கு
ஒன்னும் இல்ல,
அவரோட
வீட்ல காலைல மார்க்கெட்
போயிருக்காங்க,
ஒரு
ஆட்டோ டிரைவர் போதைல வந்து
இடிச்சுட்டான்”
“அவ்ளோ
காலைல சரக்கா?”
அவனை
முறைத்த கான்ஸ்டேபிள் “நைட்டே
வாங்கி வெச்சிருப்பான்?”
என
முறைத்தார்.
“பாத்தீங்களா
யாரோ ஒருத்தன் குடிச்சதால
நீங்க இன்னிக்கு என்கூட கோர்ட்
வரைக்கும் வரீங்க.
இததான்
நாங்க chaos
theory-னு
சொல்லுவோம்”
“அத
நாங்க விதினு சொல்லுவோம்”
“ஏதோ
ஒன்னு அதனாலதான் நீங்க இப்ப
சஸ்பெண்ட் ஆகப் போறீங்க”
“என்னடா
சொல்ற” எனக் கேட்டுக் கொண்டே
சுதாரிக்க முயன்ற கான்ஸ்டேபிளின்
மூக்கில் ஒரு குத்து விழுந்தது.
முன்னால்
அமர்ந்திருந்த இன்ஸ்பெக்டர்
திரும்பி பார்ப்பதற்குள்,
ஸ்ரீதர்
பின்னால் எகிறி குதித்து ஓட
ஆரம்பித்திருந்தான்.
உடனே
கீழே குதித்து இறங்கிய
இன்ஸ்பெக்டர் அவனை துரத்த
ஆரம்பித்தார்.
ஆனால்
ஸ்ரீதர் அந்த மனித சமுத்திரத்தில்
கலந்து கரைந்து விட்டிருந்தான்.
ஜீப்பிற்கு
திரும்பிய இன்ஸ்பெக்டர்
அந்த கான்ஸ்டேபிளைப் பார்த்து
அமைதியாக சொன்னார்.
“You
are suspended.”
No comments:
Post a Comment