உருண்டோடும் நாழிகைகளும்
தேய்ந்து வளரும்
தாரிகையும்
பேயந்து,பொய்க்கும்
பெருமழையும்
ஆடி அடங்கும்
அழகிய அலைகளும்
அறிவிற்க் கொணர்கின்றன
நிரந்தரமில்லா நிகழ் காலத்தை
இற்றுப் போன உறவுகள்
ஊட்டிப் போன
உயிர் வலியினை
தைக்கத் தேடுகின்றோம்
தங்கத்தாலான ஊசி ஒன்றை
பல நேரங்களில்
பக்குவம் பழகிய மனது
பட்டென்று இழை
அறுந்தாற் போல்
அறுத்துச் சென்றுவிடுகின்றன
அழகிய உறவுகளை
உறக்கத்திலிருந்து
விழித்த ஒரு நாள்
உணர்கின்றோம்
உறவுகளின் உன்னதத்தை
தனிமையின் தாக்கங்களை
மீள முடியா ஏக்கங்களை
அறுத்த இழைகளை
சேர்த்தெடுக்கும் பொழுதுகளிலேயே
கழிந்து விடுகின்றன
பொன்னான ,
கால நேரங்கள்
நிகழ்காலத்தை நகர்த்திவிட்டு
எதிர் காலத்தில்
ஏங்கித் தவிப்பது
கோடை காலக் கானல் நீராய்
ஏமாற்றங்களையே
நிரப்பிச் செல்லும்
உண்மையான உறவுகள்
உயிர் காக்கும் விழுதுகள்
கிளைகளாய் ,
பிரிந்து,படர்ந்திருப்பினும்
விழுதுகளால்,
வீழாமல் காத்து வருவோம்
உறவுகளையும்,
அவற்றின் உணர்வுகளையும்..
கண்ணம்மா
அறுத்த இழைகளை
ReplyDeleteசேர்த்தெடுக்கும் பொழுதுகளிலேயே
கழிந்து விடுகின்றன
பொன்னான ,
கால நேரங்கள்
யோசிக்க வைக்குது வரிகள்.... உறவுகளை இனிமே பார்த்து கையாளனும்....
ReplyDelete