முன்னங்கால்களில் மண்டியிட்டு
இலைகள் பிடுங்கும் குட்டி ஆடு
தன்னைத் தானே சுற்றிக் கொண்டு
அன்பைச் சொல்லிடும் மாடப் புறா
கோவில் தீபத்தை ஊதி அணைத்திட
முரண்டு பிடிக்கும் தென்றல்
சத்தமின்றி அடுப்படி நுழைந்து
பானைகள் உருட்டும் பூனை
பதுங்கி பதுங்கி பலகாரம்
ருசிக்கவரும் சுண்டெலி
ரகசியம் சொல்லக் காதைத்
தேடி வரும் குழவி
வெற்றிலை வாயில் கேள்விகள்
துப்பும் கிழவி
கண்ணாடியில் தன்னையே சண்டைக்கு
இழுக்கும் குரங்கு
முருங்க மரங்களில் பூக் கொறித்து
தாவும் அணில்கள்
சகதிக் குட்டையில் முங்கிக் குளிக்கும்
சிட்டுக் குருவி
வாசப்படியை கூட்டி தெளித்து
கோலமிடும் சிறுமி
நட்சத்திரங்களை எண்ணிவிட்டு
கணக்கு சொல்லும் சிறுவன்
வாடிப்போகியும் ஆளை
மயக்கும் மல்லிகை
இரவில் தெருவெங்கும்
மணக்கும் வேப்பம்பூ
ஜன்னல் நிலவை
வம்புக்கு இழுக்கும் கவிஞன்
பொயாய் கடித்து
விளையாடும் குட்டி நாய்கள்
எருமைக்கு காது குடையும்
காக்கை உறவுகள்
சத்திரத்தில் கதை அளக்கும்
சாமானிய பெருசுகள்
இழவு வீட்டில்
கும்மாளமிடும் சிறுசுகள்
நையென பெய்யும் அடைமழை
சட்டென மின்னும் கத்தரி மின்னல்
இப்படியாய் நீங்களும்
ரசித்திருப்பீர்கள்
கடந்து வந்த
காலத்தின் கவிதைகளை....
விஜய் Che
காலத்தின் கவிதைகள்
ReplyDeletealagu..
Nandri
Deleteநிலவை வம்பிழுப்பதே இந்த கவிஞர்களுக்கு வேலையாய் போய்விட்டது...
ReplyDeleteரசித்துணர்ந்து மகிழ்ந்த வரிகள்......
Nandri Nanba..........
Delete