Tuesday 2 April 2013

பணக்கார கூலி




தட்டச்சு வாழ்க்கை ஆனது

எலியும் மெளசாய் போனது 
 
விரட்டி பிடிக்கும் பூனையாய்

தினம் தினம் துரத்தும் மானுடன்


சிகரம் தொடவே துடிக்கிறான்

அலுவலக பணியில் களிக்கிறான்

இரவும் பகலும் அறியாமல்

விரல்கள் தேய உழைக்கிறான்


கூண்டில் அடைத்த கிளியாய்

உலகை என்றும் காண்கிறான்

சிற்றுண்டி,உணவாய் இருந்தாலும்

கைகளை ஏனோ மறக்கிறான்

கெளரவம் கொண்டு

spoonஜ எடுக்கிறான்


வணக்கம் என்பதை மறந்து

Hai....hello...., மோகம் கொள்கிறான்

தாய்மொழி அதை துறந்து

அந்நிய மொழி ஆனாலும்

ஆங்கிலம் அதை தான் உரைக்கிறான்


இனியாவது ஒரு விதி செய்வோம்

நம் தாய்மொழி காக்க

தமிழில் பேசி

தமிழனாய் வாழ்ந்து பழகுவோம்.....!



5 comments:

  1. நல்லாயிருக்கு நண்பா....

    ReplyDelete
  2. இப்பத்தான் புரியுது நண்பா உன் ஜென்மத்தில நம்ம எல்லாம் எலி புடிக்குரவங்க போல....கவிதை உறைக்கிறது

    ReplyDelete
    Replies
    1. innum ennanna pudikka solluvangalo...... ethir kaalam prakaasamaga ullathu......

      Delete
  3. super machi....pathu da aduthu puliya pudika sola poranga

    ReplyDelete