ஹோலி அன்று போலீஸார் சிலர் மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டி ஒரு பெண்ணின் மீது மோதி உயிரிழப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
-செய்தி
__________________________________________________________________________________________________
பாவ நகரம் - 7
பாவ நகர காவல்துறை கமிஷனர்
அலுவலகம் எதிரே உள்ள ஒரு டீக்கடை:
கமிஷனர் அலுவலகம் பரபரப்பை பூண்டிருந்தது. ஆனால் அதன் எதிரே இருந்த டீக்கடையில் ஒருவன் மிகவும்
சாவகாசமாக சிகிரெட் புகைத்துக் கொண்டிருந்தான். அவன் புகைத்து முடிக்கவும் ஒரு ஆட்டோ அங்கு வந்து நிற்கவும் சரியாக இருந்தது. அதிலிருந்து கீதா இறங்கி சுற்றும் முற்றும் பார்த்தாள். பின் அவனைப் பார்த்து சிரிக்க ஆரம்பித்தாள்.
காவல்துறை கமிஷனர் அலுவலகம்
கமிஷனரின் அறையில் ACP தரண் அவருடன் பேசிக்
கொண்டிருந்தான்.
“தரண் இது ரொம்ப முக்கியமான கேஸ்"
கமிஷனர் பேசுவதை தரண் பொறுமையாக
கேட்டுக் கொண்டிருந்தான். “போலிஸ் ஸ்டஷன்லேயே பாம் வச்சிருக்காங்க. எவ்வளவு சீக்கிரம் இந்த கேஸ முடிக்க
முடியுமோ முடிச்சிருங்க.”
இடையில் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது. ஒரு அதிகாரி வந்து பத்திரிக்கையாளர் சந்திப்புக்கு அனைத்து
பத்திரிக்கையாளர்களும் வந்து விட்டதாகத் தெரிவித்தார். இன்னும்
பத்து நிமிடத்தில் வந்து விடுவதாக அவரிடம் தெரிவித்தார் கமிஷனர். அதிகாரி விடைபெற்று வெளியேறினார்.
“தரண், கண்ணன் இந்த கேஸ்லயும் உனக்கு உதவியாயிருப்பார்.”
தரண் அவரையே கவனித்துக் கொண்டிருந்தார்.
“24 போலீஸ் காரங்க செத்து போயிருக்காங்க. ஒரு
செக்யூரிட்டிய கொன்னிருகாங்க. எவ்வளவு சீக்கிரம் இந்த கேஸ
முடிக்க முடியுமோ முடிச்சிருங்க. அவங்க பேங்க கொள்ளை அடிக்க
மட்டும் இத செஞ்சதா தெரியல”
“எப்படி சார் சொல்றீங்க”
“அவங்க கொன்ன செக்யூரிட்டி ஒரு ரிடையர்ட் போலீஸ்”
“இது ஏதேச்சையா கூட நடந்திருக்கலாம்”
“ஆமா! ஆனா செத்து போன 24 பேர்ல 2 பேர் அவர்கூட வேல பாத்தவங்க”
தரண் நிதானமாக அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்தான். அப்பொழுது கண்ணன் அங்கு வந்தான்.
கமிஷனரைப் பார்த்து ஒரு சல்யூட் வைத்தான்.
“வாங்க கண்ணன்” என்ற கமிஷனர் தொடர்ந்தார். “இன்னிக்கு நடந்த விஷயங்கள் நம்ம டிபார்ட்மெண்டுக்கு ஏற்கனவே இருக்க கெட்ட
பேர அதிகப் படுத்தியிருக்கு. நீங்க தரண் கூட சேர்ந்து
இதுக்கு காரணமானவங்கள சீக்கிரமா கண்டுபிடிக்கனும்.”
“கண்டிப்பா சார், I will try my best” என்றான் கண்ணன்.
மீண்டும் அந்த அதிகாரி வந்து பத்திரிக்கையாளர் சந்திப்பை
நினைவு படுத்தினார்.
“நீங்க வர்றீங்களா தரண்”
“இல்ல சார், நான்
அந்த பேங்குக்கு போகனும். கண்ணன் வாங்க”
தரணும் கமிஷனரும் ஒன்றாக அந்த அறையில் இருந்து வெளியேறி
வெவ்வேறு திசையில் சென்றனர்.
தரண் வெளியே செல்லும் போது அங்கிருந்த கான்ஸ்டேபிளைப் பார்த்து
“என்னய்யா, எல்லாரையும் செக்
பண்ணிதான விடறீங்க?” எனக் கேட்டான்.
“ஆமா சார்”
“பத்திரிக்கை காரங்கள?”
“சார், அவங்கள
எப்படி?” என நெளிந்தார் அந்த கான்ஸ்டேபிள்.
“சரி, சரி” என்று கண்ணனை அழைத்துக் கொண்டு தனது ஜீப்பை நோக்கி
போனான் தரண். அப்பொழது பாவ நகர
தொலைக்காட்சியை சேர்ந்த கேமராமேனும், நிருபரும் ஒரு வெள்ளை
நிற மாருதி வேனிலிருந்துவேக வேகமாக உள்ளே செல்வதைப் பார்த்தான்.
“கவர்மென்ட் டி.வி. லேட்டா வரங்க பாரு” என சலித்துக் கொண்டே கண்ணன் அந்த ஜீப்பை ஓட்ட
ஆரம்பித்தான்.
காவல்துறை கமிஷனர் அலுவலகம் பத்திரிக்கையாளர் சந்திப்பு அறை
கமிஷனர் அறைக்குள்
வந்ததும் அறையை பரபரப்பு தொற்றிக் கொண்டது. அனனவரும்
கேள்விகளைக் கேட்க தயாராகினர். கமிஷனர் மைக்குகள் முன் தன்னை
அமர்த்திக் கொண்டதும் கேள்விகள் கிளம்பின. அனைத்து
தொலைக்காட்சிகளிலும் இந்த சந்திப்பு நேரடியாக ஒளிப்பரப்பாகிக் கொண்டிருந்தது.
“சார், யார் செஞ்சாங்கனு தெரிங்சுதா?
“இன்னும் இல்லை”
“தீவிரவாதிகளோட வேலையா?’
“இப்ப தான் விசாரணைய ஆரம்பிச்சிருக்கோம். இப்போ எதுவும் சொல்ல முடியாது.”
“யார் விசாரணை பண்றாங்க?”
“தரண்”
“அவர் இந்த பிரஸ் மீட்டுக்கு வரலயா?”
“எங்க ஸ்ட்அவர்?”
“விசாரணைய ஆரம்பிக்க போய்கிட்டிருக்கார்.”
கமிஷனர் அலுவலகம் அருகே உள்ள சிக்னல்
தரணின் ஜீப் சிக்னலுக்காக காத்துக் கொண்டிருந்தது. கண்ணன்
மெல்ல பேச்சை ஆரம்பித்தான். சிக்னல் டைமர் இன்னும் மூன்று
நிமிடங்கள் காத்திருக்க வேண்டும் என்றது.
“என்ன தைரியம் சார் அவங்களுக்கு நாலு ஸ்டசன்ல பாம் வெச்சிருக்காங்க”
தரண் சிரித்துக் கொண்டே சொன்னான், “சாதாரணமான ஒரு
கான்ஸ்டேபிள அடிச்சா என்ன பண்ணுவீங்க”
“என்ன பண்ணுவோமா? ஒரு ரெண்டு நாள் ஸ்டசன்லயே வெச்சு
அடிப்போம்”
“அப்படி இருக்கும் போது, ஒருத்தன் நாலு ஸ்டசன்லன்யும்
பாம் வெக்கிறானா?”
“பாம் வெக்கிறானா?”
“இங்க பாத்தியா, கார் கண்ணாடி கவர், பட்ஸ் விக்கறவங்க எத்தன பேர்.
வாழ எல்லோருக்கும் ஒரு வழி இருக்கு. ஆனா
இதையெல்லாம் விட்டுட்டு ஒருத்தன் இந்த மாதிரி பண்றானா?”
“நீங்க அவன் செஞ்சது சரினு சொல்றீங்களா?” என கண்ணன் கேட்டுக் கொண்டிருக்கும் போதே அவர்களுக்கு எதிப் புறம் கடந்து
சென்ற ஒரு தனியார் தொலைக்காட்சி வேன் தரணின் கண்ணில் பட்டது.
கமிஷனர் அலுவலகம்
கமிஷனர் அலுவலகத்தின் வெளியே பாதுகாப்புக்கு நின்றிருந்த
கான்ஸ்டேபிளை நோக்கி டீக்கடையில் சிகிரெட் பிடித்துக்
கொண்டிருந்தவன் ஓடி வந்தான்.
“சார், சார்"
“என்னயா?”
“இந்த போன கமிஷனர் கிட்ட குடுக்கனுமா சார். இல்லேனா பாம் வெடிக்குமா சார்"
“யார்யா குடுத்தா?”
“ஒரு பொண்ணு சார் அழகா இருந்துச்சு"
கமிஷனர் அலுவலகம் அருகே உள்ள சிக்னல்
தரணுக்கு அந்த வேனைப் பார்த்ததும் ஏதோ உறைத்தது. அனைத்து டி வி வேன்களிலும் அந்த சேனலின்
பெயர் எழுதப் பட்டிருக்கும். ஆனால் பாவ நகர தொலைக்காட்சி
ஆட்கள் வந்தது பெயர் எழுதப்படாத வெள்ளை வேன். தரண் தனது
செல்போனில் கமிஷனரின் எண்ணை டயல் செய்து கொண்டே இறங்கி கமிஷனர் அலுவலகம் நோக்கி ஓட ஆரம்பித்தான்.
கமிஷனர் அலுவலகம்
கமிஷனர் அந்த செல்போனை வாங்கி காதில் வைத்தார்.
“கமிஷனர் போன loudspeakerல போட்டு மைக்
கிட்ட வைங்க" கமிஷனர் சற்று தயங்க "யோசிக்கிற ஒவ்வொரு நிமிஷமும் ஆபத்துதான்" என்றது
அந்த குரல்.
கமிஷனர் loudspeakerல் அந்த
போனை மைக்குகள் அருகில் வைத்தார். அதிலிருந்து ஒரு குரல்
தெளிவாக ஒளித்தது.
“இன்னிக்கு ஆரம்பிச்சிருக்கிறது, நீங்க
எல்லாரும் இந்த ஊரொட மக்கள் எல்லாரும் செஞ்ச பாவத்தோட பலன்தான். அதனால வர போற முடிவ எல்லாரும் சந்தோஷமா ஏத்துக்கோங்க"
தரண் அதற்குள் கமிஷனர் அலுவலகம் அருகே வந்துவிட்டான். கமிஷனரின் போனை வேறொரு அதிகாரி எடுத்தார்.
“பாவ நகர டி வி கேமராமேன், ரிப்போடர் இருக்காங்களா அங்க"
“அவங்க இப்போதான் போனாங்க சார்"
“பாம் இருக்கு அங்க" என தரண் சொல்வதற்கும், மைக் முன் வைக்கப் பட்டிருந்த அந்த போன் இணைப்பு
துண்டிக்கப்படுவதற்கும், கமிஷனர் அலுவலகத்தில் குண்டு வெடிப்பதற்கும் சரியாக
இருந்தது.
-பாவங்கள் தொடரும்.
விறுவிறுப்பாக போகிறது நண்பா....
ReplyDeletethanks
ReplyDeleteதினமும் படிக்க வேண்டும் போல இருக்கிறது... செம்ம வேகம்... கலக்குங்க கார்த்தி...
ReplyDelete