Sunday 28 April 2013

பாவ நகரம் - VIII

_________________________________________________________________________________

சாரதா சிட் பண்ட் என்ற அமைப்பு மேற்கு வங்கத்தில் மக்களிடம் கவர்ச்சி கரமான திட்டங்களை சொல்லி 500 கோடி ரூபாய் அளவிற்கு மோசடி செய்துள்ளது.
                                                                                                  -செய்தி
_____________________________________________________________________________________________

பகுதி 7 காவல் நிலையம்:
கமிஷனர் அலுவலகத்தில் குண்டு வெடித்தை அடுத்து தற்காலிகமாக பகுதி 7 காவல் நிலையத்தில் கமிஷனர் அலுவலகம் செயல்பட துவங்கியருந்தது. அந்த காவல் நிலையம் சற்று பெரிதென்பதாலும் அருகிலேயே ஒரு கட்டிடத்தை வாடகைக்கும் எடுத்து கமிஷனர் அலுவலகம் செயல்பட இருப்பதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக இரண்டு காவலர்கள் உரையாடிக் கொண்டிருந்தனர். தரண் தனக்கென ஒதுக்கப்பட்ருந்த அறையில் அம்ர்ந்து வங்கி சம்பவம் குறித்த கோப்புகளை பார்த்துக் கொண்டிருந்தான். அவனுக்கு எதிரே ஒரு அறையில் ஸ்ரீதர் அமர்ந்தப் பட்டிருந்தான்.
அவனைப் பார்ப்பதற்காக ஜோசப் சார், சபேசன் வெளியே காத்துக் கொண்டிருந்தனர். வெகு நேரம் போராடியும் அவர்களால் ஸ்ரீதரைப் பார்க்க முடியவில்லை. இறுதியாக ஒரு காண்ஸ்டேபிளைப் பிடித்து அவனுக்கு 500 ரூபாய் லஞ்சம் கொடுத்து, ஸ்ரீதரிடம் ஒரு 5 நிமிடம் பேச வாய்ப்பு கிடைத்தது. ஸ்ரீதர் மிகவும் தெளிவாகவே இருந்தான். சபேசன்தான் கலங்கிப் போயிருந்தார்.
நான் எந்தத் தப்பும் பண்ணலப்பா? என் அழுவுறீங்க?
சபேசன் இன்னும் குலுங்கி குலுங்கி அழுதார்.
அப்பா எத்தனை நாளானாலும் நான் தப்பு பண்ணலேனு நிருபிச்சடலாம் பா. நீங்க ஜாமீன்ல எடுக்க மட்டும் ட்ரை பண்ணுங்க
அப்போது அங்கு வந்த அந்த காண்ஸ்டேபிள் சார், கை நீட்டி காசு வாங்குனதால சொல்றேன். ஜாமீன்லாம் கொடுக்க குறைஞ்சது ரெண்டு மூனு மாசமாவது ஆகும்
ஏன்ப்பா? என்றார் ஜோசப் சார்.
நேத்து நடந்தது தெரியும் இல்ல. இவன நேத்தே கோர்ட்ல ஒப்படைக்காத்துக்கு அதுதான் காரணம். இது வேற கொல கேசு எல்லா ஆங்கிள்லயும் விசாரிப்பாங்க எனக் கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்தார்.
ஜோசப் சார் அவனை தனியே அழைத்தார். உன்னோட இந்த பிறந்த நாள் ரொம்ப முக்கியமான பிறந்த நாள்.” சற்று நிறுத்தியவர் சிறிது யோசித்தார். “அத நீ ஜெயில கழிக்கிறத நான் விரும்பல"
அதுக்காக, என்ன தப்பிக்கவா முடியும்”
ஆமா”
என்ன என்பது போல் அதிர்ந்தான்ஸ்ரீதர. “செய்யாத தப்புக்காக இன்னொரு தப்பு செய்ய சொல்றீங்களா?. என்னால முடியாது.”
அவனை அருகில் அழைத்த ஜோசப் சார் அவனுடைய காதில் ஏதோ ரகசியம் சொன்னார். அதைக் கேட்டவுடன் ஸ்ரீதர் அதிர்ந்து நின்றான்.
இன்னும் எல்லாத்தையும் சொல்றேன். நீ சாதாரண ஆளு இல்ல. இதப் பத்தி தெரிஞ்சிக்கனும்னா, நான் சொல்ற இடத்துக்கு வா. வேணாணா விட்ரு"
அதற்குள் அந்த காண்ஸ்டேபிள் வந்து கோர்ட்டுக்கு போகனும் எனக் கூறவே ஸ்ரீதர் யோசனையுடன் உள்ளே நுழைந்தான். சிறிது நேரத்தில் மேலும் சில கைதிகளுடன் இரண்டு காண்ஸ்டேபிகளும் வெளியே வந்தனர். அந்த நிலையத்தின் உதவி ஆய்வாளரும் வர அவர்களை ஏற்றிக் கொண்டு அந்த ஜீப் புறப்பட்டது. அதில் பின்னால் அமர்ந்திருந்த ஸ்ரீதரின் கண்கள் இன்னும் அதிர்ச்சியை தேக்கி வைத்துக் கொண்டு ஜோசப் சாரையே பார்த்துக் கொன்டிருந்தது.


ரகு அந்த இடுகாட்டில், ஒரு கல்லறையின் முன் நின்றிருந்தான். அந்த வங்கியை கொள்ளையடித்த நால்வரில் ஒருவன் ரகு. அந்த கல்லறையில் ஷாலினி என்று எழுதப் பட்டிருந்தது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு:

ரகு வழக்கம் போல் வேலைக்கு செல்லும் போது, ஷாலினிக்கு போன் செய்தான்.
சொல்லுடா செல்லம் எங்க இருக்க?” ஷாலினி வழக்கமான உற்சாகத்துடனேயே பேசினாள்.
இப்பதான் ஆபிஸ் கிளம்பறேன்"
Express Avenueவில் தான் அவன் மேனஜராக வேலை செய்து கொண்டிருந்தான்.
சார், கல்யாணத்துக்கு அப்புறம் இவ்வளவு லேட்டாலாம் வரக்கூடாது"
சரிங்க மேடம். எங்க இருக்கீங்க?"
ஒரு வேலையா நானும் வெளிய போய்ட்டு இப்பதான் வீட்டுக்கு பஸ்ல போய்ட்டு இருக்கேன்"
பள்ளியிலேயே ஆரம்பித்தக் காதல் ஏழு வருட காதல் அது. ஒரு வழியாக வீட்டில் சம்மதம் வாங்கி இன்னும் இரண்டு மாதங்களில் திருமணம் நிச்சயம் செய்திருந்தார்கள். ஷாலினி ஒரு பள்ளி ஆசிரியையாக பணி புரிந்து வந்தாள்.
சரி, சிக்கனல் எல்லாம் பாத்து வண்டி ஓட்டு. ஒவர் ஸ்பீடு போகாத.நான் அப்புறமா பேசறேன்"
"சரிங்க டீச்சரம்மா" என்று போனை வைத்தான்.ரகுவுக்கு இதுதான் அவளுடன் பேசுவது கடைசி எனத் தெரியாது.
ஷாலினி சென்ற பேருந்தில் அவளுக்கு முன் இருக்கையில் ஒரு கைதி அமர்ந்திருந்தான். அவனுடன் ஒரு காண்ஸ்டேபிளும், அதற்கு முன் இருக்கையில் ஒரு காண்ஸ்டேபிளும் அமர்ந்திருந்தனர்.கைதியுடன் அமர்ந்திருந்த காண்ஸ்டேபிகள் அவனுடன் ஏதோ பேசிக் கொண்டு வந்தான். பேருந்து ஒரு சிக்னலில் நின்றது.
அப்போது திடீரென ஒரு கும்பல் பேருந்தில் கையில் ஆயுதங்களுடன் ஏறியது. வேகமாக அந்த கைதியை நோக்கி சென்று அவனை தாக்க ஆரம்பித்தது. அந்த இரண்டு காண்ஸ்டேபிள்களும் ஒதுங்கி நின்று கொண்டனர்.

ஷாலினி அதிர்ச்சி அடைந்தாள். அவர்களை நோக்கி "ஏன் சும்மா நிக்கிறீங்க?” எனக் கத்தினாள். அவர்கள் இவளை காதில் வாங்கி கொள்ளவே இல்லை. கூட்டம் பின் வழியாக இறங்கி ஓட ஆரம்பித்தது. இவளுக்கு அவ்வாறு செல்ல மனதே இல்லை. சட்டென்று ஒரு யோசனை தோன்றியது. வேகமாக பேருந்திலிருந்து கீழிறங்கி, அங்கிருந்து தன் செல்போன் கேமரா மூலமாக அந்த்க் கொலைப் படலத்தை படம் பிடிக்க ஆரம்பித்தாள்.

இதை கவனித்த ஒரு காண்ஸ்டேபிள், கொலை செய்து கொண்டிருந்த ஒருவனுக்கு சிக்னல் செய்ய, அவன் இவளைப் பார்த்தான். காண்ஸ்டேபிள்களும் அவர்களுடன் கூட்டு என்பது அவளுக்கு உரைக்க ஆரம்பித்தப் போதுதான் தான் மாட்டியிருந்த சிக்கல் அவளுக்கு புரிந்தது. அனைத்தையும் உணர்வதற்குள் இரண்டு கத்திகள் அவளை நோக்கி பாய்ந்தன.

ரகுவுக்கு ஒரு மணி நேரம் கழித்தே விஷயம் புரிந்தது. எப்போதும் தப்ப பாத்தா தட்டிக் கேக்குறனு எவனாவது பொண்ணுங்கள கிண்டல் பண்றவன், பிக்பாக்கெட் அடிக்கிறவன எல்லாம் போலீஸ்ல பிடிச்சு கொடுத்திருக்கா. ஆனா இவ்வளவு பெரிய பிரச்சனையில் இப்படி போய் மாட்டிக் கொள்வாள் என எதிர்ப்பார்க்க வில்லை. மருத்துவமனையில் அவள் உடலைப் பார்த்ததும் ரகு கதறி அழ ஆரம்பித்தான்.

இன்று:

அவனுக்காக தலைவன் ஒரு இரு சக்கர வாகனத்தில் காத்துக் கொண்டிருந்தான். இவன் வெளியே வந்தவுடன் அதை இவனிடம் கொடுத்து விட்டு, அவன் முகம் ஞாபகம் இருக்குல்ல என கேட்டு விட்டு சென்று விட்டான். அதை எப்படி மறக்க முடியும்.

ஷாலினி கொலை குறித்து நடந்த வழக்கில் அவள் அந்த கைதியின் காதலி என்றும், சிறையிலிருந்து கோர்ட்டுக்கு செல்லும் பேருந்தில் இருவரும் பேசிக் கொண்டே வந்ததாகவும், தாங்கள் எவ்வளவு சொல்லியும் இருவரும் கேட்க வில்லை எனவும், அந்த இரண்டு காண்ஸ்டேபிகளும் சாட்சி சொன்னார்கள். முன் விரோதம் காரணமாக ரவுடியும், அவனது காதலியும் கொலை என அனைத்து தினசரிகளும் கதறின.

அந்த இருவரில் ஒருவன் நேற்று நடந்த குண்டு வெடிப்பில் கொல்லப் பட்டு விட்டான். மற்றொருவன் போக்குவரத்து காவல் துறைக்கு மாற்றப்பட்டிருந்தான்.
ஷாலினிக்காக...” எனக் கூறிக் கொண்டே அந்த இரு சக்கர வாகனத்தை உசுப்பி வேகமாக பறக்க ஆரம்பித்தான்.



2 comments:

  1. சூப்பர் கார்த்தி.... எப்ப ட்விஸ்ட உடைப்பிங்க?

    ReplyDelete