வேத காலத்தின் கடைசி சில நூற்றாண்டுகள்(1000BCE - 600 BCE ):
முந்தைய பகுதியில் ஆரியர்களைப் பற்றியும் அவர்களின் வாழ்க்கையைப் பற்றியும் வேத காலத்தைப் பற்றியும் கண்டோம். இந்த பகுதியில் வேத காலத்தின் கடைசி சில நூற்றாண்டுகளைப் பற்றிக் காண்போம்.
இந்த கடைசி சில நூற்றாண்டுகள் "Later vedic period " என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும். இதுவரை நாம் கண்ட வேத காலத்துக்கும் இதற்கும் என்ன வித்தியாசம்? வேதங்களில் முதன்மையான ரிக் வேதம் மட்டுமே இயற்றப்பட்டிருந்த காலம் ஆதலால் அந்த காலம் ரிக் வேத காலம் என்றழைக்கப்பட்டது. ஆனால் மீதமுள்ள 3 வேதங்கள்- யஜுர், சாமம், அதர்வணம் மற்றும் பிராமணாஸ், ஆரன்யாகாஸ் மற்றும் உபநிஷத் (வேதங்கள் பற்றிய கருத்து விளக்கம்) ஆகியவை இந்த கடைசி சில நூற்றாண்டுகளில் தான் இயற்றப்பட்டன. இந்த காலத்தில் இரும்பு ஆயுதங்களின் உபயோகம் மற்றும் சாம்பல் நிறம் பூசப்பட்ட பண்டங்களின் உபயோகம் பரவலாகக் காணப்பட்டது. எனவே இதனை "சாம்பல் வர்ணம் பூசப்பட்ட இரும்பு பண்டங்கள் காலம்" என்றும் அழைப்பர்.
சமூக வாழ்க்கை:
பிராமணர்கள் தங்கள் நன்மதிப்பை இழக்கவில்லை எனினும் நாடு சம்மந்தப்பட்ட முக்கிய அதிகாரங்கள் அவர்களிடம் இப்போது இல்லை. அவை க்ஷத்ரியர்களின் கைகளுக்கு மாறின. அரசனே முதலாவதாக மதிக்கப்பட்டான்.
பெண்களின் நிலையில் சிறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. அவள் மதம் மற்றும் சமூக வளையத்தில் அவளின் முக்கியத்துவத்தை இழந்துகொண்டிருந்தாள். அவளின் சமுதாயப் பொறுப்புகள் பறிக்கப்பட்டன. பெற்றோர் வழி சொத்துக்கள் மறுக்கப்பட்டன. அரசர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகளை திருமணம் செய்யும் பலதர பழக்கத்துக்கு ஆளாகினர். இதனை ஆங்கிலத்தில் "Polygamy" என்பர். பெண் குழந்தைப் பிறந்தால் பெற்றோர்கள் துரதிர்ஷ்டசாலிகள் என்று கருதப்பட்டனர். எனினும், உயர்கல்வி, மறுமணம் போன்றவைகள் பெண்களுக்கு உரித்தாயின; சதி(Sati ) குழந்தைத் திருமணம், படுதா அணிதல், சிசு கொலை போன்றவை முற்றிலும் ஒழிக்கப்பட்டன.
இந்த காலத்தில் வர்ண முறை இன்னும் பலப்படுத்தப்பட்டது. இந்த வர்ண முறை சராசரி மனிதனின் வாழ்வில் எந்த மாற்றத்தையும் அளிக்கவில்லை. விவசாயமே அவனின் முதன்மை வேலையாக நீடித்தது.
பொருளாதார வாழ்க்கை:
மேலே கூறியது போல விவசாயமே பிரதான வேலையாக இருந்த இக்காலத்தில், பார்லி, கோதுமை, அரிசி போன்ற பழக்கப்பட்ட விளைச்சல்களோடு, புதிய தானியங்களையும் மக்கள் விளைவிக்கத் தொடங்கினர். அவற்றுள் எள் மற்றும் அவரைக் குறிப்பிடத்தக்கவை. வறட்சி அல்லது அதிக மழை - இரண்டும் ஆங்காங்கே காணப்பட்டுக்கொண்டு தான் இருந்தன. இருப்பினும் விவசாயத்தில் ஒரு புதிய முன்னேற்றம் கொண்டுவரப்பட்டது. செயற்கைப் பாசனை முறை தான் அது. மேலும் மாட்டு சாணம் உரமாக உபயோகிக்கப்பட்டது.
விவசாயம் தவிர வியாபாரம் மற்றொரு முக்கியமான தொழிலாக இருந்தது. வியாபாரிகள் அவர்களை "கில்ட்"
களாக பகுத்துக்கொண்டு அவர்களின் தனி விருப்பங்களைக் காத்துக் கொண்டனர். "நிஷ்கா"
எனப்படும் காசுவகை வழக்கில் வந்தது.
வியாபாரம் நில வழியில் மட்டுமன்றி கடல் வழியிலும் தொடங்கப்பட்டது.
இந்த பொருளாதார வாழ்க்கை மக்களின் நகர வாழ்க்கைக்கு வழிவகுத்தது. ரிக் வேத காலத்தில் சில நகரங்களே இருந்தன. ஆனால் இந்த காலத்தில் விதேஹா, கௌஷாம்பி, காசி, அயோத்தியா,ஹஸ்தினாபுரா, இந்திர பிரஸ்தா போன்ற நகரங்கள் பிறந்தன.
அரசியல் வாழ்க்கை:
ரிக் வேத காலத்தில் அரசாட்சிகள் சிறியனவாக இருந்தன. ஏனெனில் அரசர்கள் ஆரியகள் அல்லாதவர்களை விரட்டியடிப்பதிலேயே குறியாக இருந்தனர். ஆனால் இபோது அத்தகையவர்கள் முற்றிலும் தென்படாததால், அரசர்களின் ஆர்வம் பெரிய பெரிய அரசாட்சிகளை அமைப்பதிலேயே இருந்தது. அப்படியாய்ப் பிறந்தவை தான் குரு, கோசலா, மகதா, காசி, அங்கா போன்ற பெரிய அரசாட்சிகள். இவ்வாறு பெரிய அரசாட்சியை அமைத்த அரசன் அந்த வெற்றியைக் குதிரை பலியிட்டு (Ashvamedha Yagna ) கொண்டாட ஆரம்பித்தான்; "சாம்ராட்" என்றும் அழைக்கப்பட்டான். அதற்கு அரசர்களுக்கெல்லாம் அரசன் (king of kings ) என்று பொருள். அரசன் இப்போது சுயமாக முடிவெடுக்கும் அதிகாரம் பெற்றவன். அவனது சிம்மாசனம் இப்போது மரபுவழி ஆனது. சபா, சமிதி ஆகியவை இனி அவனின் அதிகாரங்களைப் பறிக்காது. இருப்பினும் அவனுக்கென ஆலோசனை சொல்ல ஒரு குழு வேண்டும் அல்லவா? அதற்கென அவன் அரசபையில் புது புது பதவிகள் நியமிக்கப்பட்டன. அவற்றுள் சில- பொக்கிஷதாரர், தேரோட்டி மற்றும் பல அரசு அதிகாரிகள். யானைப்படையும் புதிதாக சேர்க்கப்பட்டது. புது புது ஆயுதங்கள் உருவாக்கப்பட்டன.
மத வாழ்க்கை:
சராசரி மனிதனின் வாழ்வில் சடங்குகள் பெரும்பாலும் காணப்பட்டன. பலி கொடுக்கும் பழக்கமும் தொடங்கியது. இந்திரா மற்றும் அக்னி கடவுள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டன. மாறாக, ஆக்கும் கடவுளான பிரஜாபதியும், காக்கும் கடவுளான விஷ்ணுவும் வணங்கப்பட்டனர். இந்த கால இறுதியில் பலி கொடுத்தல் மற்றும் சடங்குகளின் தாக்கம் அதிகமானதன் பொருட்டு புதுமையான சில மதங்கள் உருவாகின. அவைகள் பிராமணிய ஆச்சாரங்களுக்கும் புறம்பானவை. அவைகள் தாம் பௌத்தம் மற்றும் சமயம். அவற்றைப்பற்றி அடுத்தப் பகுதியில் காண்போம்.
ஜெய கீதா
Hi JG,
ReplyDeleteரிக் வேதம் என்பது ஒரு மதமா? அல்லது ஒரு குறிப்பிட்ட இனமா?
அல்லது பைபிள், குரான், கீதை போன்று வாழும் நெறிமுறைகள் அடங்கிய தொகுதியா?
rig vedham enbadhu vedha kaalaththil irundha kadavulgalin thudhigalaik konda thoguppu.
ReplyDelete