Thursday 13 June 2013

பாவ நகரம் - X


பகுதி 8 ஐ நோக்கி வந்து கொண்டிருந்த ஒரு சாலை:

மாலை ஆகியிருந்தது. அந்த நகரத்து மனிதர்கள் பிழைப்பை முடித்து விட்டு தமது வீடுகளுக்கு திரும்ப ஆரம்பித்திருந்தார்கள். வாகன நெரிசல் மெல்ல நகரின் கழுத்தை நெரிக்க ஆரம்பித்திருந்த்து. பேருந்தில் நடத்துனர்களுக்கும் பயணிக்களுக்குமான சண்டைகள் உச்சத்தில் இருந்தன. ஸ்ரீதர் இரவுக்காக காத்துக் கொண்டிருந்தான். இருட்ட துவங்கியிருந்தது. முகத்தில் ஒரு கைகுட்டையுடன் ஒரு சாலையின் ஓரத்தில் நின்றுக் கொண்டு, இரு சக்கர வாகனங்களை நோக்கி கை காண்பிக்க ஆரம்பித்தான்.

பகுதி 8 பிரதான சிக்னல்:

மாலை வேலையில் சிக்னல் இயங்காததால், வாகனங்களை வழிநடத்திக் கொண்டிருந்தாரன் போக்குவரத்து காவலர், சுகுமார். ஒரு மூலையில் அவனது உடன் பணிபுரியும் காவலர் அமர்ந்திருந்தார். ஒரு நீண்ட வாகன அணிவரிசையை சிக்னலை கடந்து செல்ல அனுமதித்து விட்டு சுகுமார், அவரது சகாவிடம் வந்தார்.
என்ன பொழப்புபா இது?”

என்ன செய்ய?”

சுகுமார் விரக்தியாக சிரித்தான்.
என் பொழப்பாவது பரவால்ல, நீங்க போலீஸா இருந்து இப்படி ஆயிட்டீங்க. கொஞ்சம் கஷ்டம் தான்"

சரி, சரி, இன்னிக்கு எவ்வளவு கலக்க்ஷன்."


பகுதி 8 ஐ நோக்கி வந்து கொண்டிருந்த ஒரு சாலை:

இன்று காலை வழக்கம் போல்தான் ஹெட் காண்ஸ்டேபிள் சாமிக்கண்ணு தனது வேலைக்கு புறப்பட்டுக் கொண்டிருந்தார். ஆனால் குடித்து விட்டு ஆட்டோ ஓட்டி அவரது மனைவி மேல் ஒருவன் இடித்து விட, தற்போது அவரது மருத்துவமனையில் இருக்கும் அவரது மனைவிக்கு உணவு கொடுக்க சென்று கொண்டிருக்கிறார். ஹெல்மெட் அவரது முகத்தை மறைத்திருந்தது. அப்போது ஒருவன் அவர் வாகனத்தை நோக்கி லிப்ட் கேட்பது போல் கையசைத்தான்.

எங்க போகனும்.”

பகுதி 8 சார்"

உட்கார்"

பகுதி 8 பிரதான சிக்னல்:

சுகுமார் பேசிக்கொண்டிருந்த சமயம், அந்த விளக்குகளும் சரி செய்யப் பட்டிருந்தன. சுகுமார் யாரை பிடித்து காசு வாங்கலாம் என கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தான். எதிப் புறமிருந்த சிக்னலில் பச்சை விழ ஒரு சில நொடிகளே இருந்தன. அப்போது ஒரு இரு சக்கர வாகனம், அந்த சாலையின் நடுவே நிறுத்தப் பட்டது. அதை நிறுத்தி விட்டு அதை ஓட்டி வந்தவன், ஓரே பாய்ச்சலாக ஓடி மறைந்து விடவும், பச்சை சிக்னல் விழவும் சரியாக இருந்தது. வாகனங்கள் அனைத்தும் ஒலி எழுப்ப தயாராக இருந்ததே தவிர, குறுக்கே நிற்கும் அந்த வாகனத்தை அகற்ற தயாராக இல்லை. சுகுமார் அதை அகற்றுவதற்க்காக ஓடினான்.

இரு சக்கர வாகனம், மீண்டும் வேகமெடுத்த்து. ஸ்ரீதர் மௌனமாக இருந்தான். இரு சக்கர வாகனம் பகுதி 8 சிக்னலை அடைந்தது. இவர்கள் பக்கம் இப்போதுதான் சிகப்பு விளக்கு ஒளிர ஆரம்பித்தது. சிலர் நடைபாதையின் மேல் தங்கள் வாகனத்தை ஏற்றி முன்னேறி சென்றனர். சாமிக்கண்ணு பச்சைக்காகக் காத்திருந்தார். பின்னால் அமர்ந்திருந்த
ஸ்ரீதர் ஏதோ ஞாபகத்தில், வியர்வையைத் துடைக்க தன் கைகுட்டையை கழற்றினான். அப்போது சாமிக்கண்ணுவிற்கு அவனது முகம் கண்ணாடியில் தெரிந்தது. சுதாரித்துக் கொண்ட சாமிக்கண்ணு,

தம்பி, ஒரு நிமிஷம், அப்படியே வண்டிய புடிங்க" என்று இறங்கி, அவனது தோளை இறுகப் பற்றினார்.
அதே சமயம், சுகுமார் அந்த வண்டியை உயிர்ப்பித்தான். அந்த வண்டி ஒரு பெரும் சத்தத்துடன் வெடித்தது.

வெடிப்பில் சாமிக்கண்ணு தூக்கி எறியப்பட்டார். சில நிமிடங்களில் கண் விழித்த போது, அவரது வண்டி கிழே விழுந்து கிடந்தது. அதன் சக்கரம் மட்டும், உருண்டு கொண்டிருந்தது.


4 comments:

  1. அந்த வண்டி ஒரு பெரும் சத்தத்துடன் வெடித்தது - Bomb Blasta?

    ReplyDelete
  2. next part???

    ReplyDelete

  3. Great story. taking speed slowly. Can't wait for next part

    ReplyDelete