Tuesday, 27 May 2014

முடிவிற்காக


முடிவிற்காக.... 

இதில் வரும் சில முடிவுகளை கடந்து வந்த பருவத்தில் எப்போதாவது நாமும் நனைந்து வந்திருப்போம்.....

தேர்வெழுதி
முடித்துவிட்டு
முடிவிற்காக
காத்திருக்கும் தருணங்கள்
அவ்வபோது
நம் வாழ்வில் கடப்பதுண்டு
முதலில் பத்தாம்
வகுப்பு முடிவுகள்
இவைகள் தான்
நம் வாழ்க்கையை
மாற்றிப்போடுகின்றன
நம் எதிர்காலத்தை
தீர்மானிக்கின்றன.
முடிவு வெளிவரும்
அன்றைய தினம்
முடிவு தெரியும் வரை
உணவு கொள்வதில்லை
அந்த காலத்தில் அந்த வயதில்
எதிர்காலக் கனவுகள்
அதிகம் இருப்பதில்லை
மனனம் செய்து
கக்குகின்ற அந்த வயதில்
எதற்கு படிக்கிறோம்
என்பது புரிவதில்லை
முடிவை இப்படியாய்
பிரித்துக் கொள்வோம்
400 க்கு மேல்
400 க்கு கீழ்
நன்கு படித்துக் கொண்டிருக்கும்
சிலர் 400 க்கு கீழே
சில நேரம் எடுக்க நேரிட்டால்
அங்கே தான் தொடங்குகின்றது
விதியின் விளையாட்டு
நினைத்த மாதிரி
FIRST GROUP எடுக்கமுடியாமல்
ஏமாற்றமும், தலைகுனிவும்
மாணவர்களை
மிகுந்த வேதனையில்
தள்ளுகிறது
அந்த வயதில்
தோற்றுவிட்டோம் என்ற
வலி நம்மை சிந்திக்க விடுவதில்லை
இதே தான் 12ம் வகுப்பு முடிவிலும்
தொடர்கின்றது
விரக்தியில் கல்லூரி
வாழ்க்கைக்கு அடியெடுத்து வைக்கிறோம்
இங்கும் ஒரு முடிவை எதிர் நோக்குகின்றோம்
நல்ல கல்லூரிக்கு செல்லவேண்டும்
தகுதி தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும்
இப்படியாய் ஒவ்வொரு செமஸ்டரிலும்
முடிவுகள் தொடர்கிறது
அப்போது தான்
இந்த காதல் கத்திரிக்காய்
எல்லாம் முப்பரிமாணம்
அடைகிறது
கல்லூரி முடியும் போது
சில காதலும் முடிகின்றது
அரியர்கள் ஐந்தாறு இருக்கும்
இறுதி ஆண்டு வரும்போதே
ஐந்தாறு ஐம்பது போல் தோண்றும்
கல்லூரி வாழ்க்கை
முடிவுகளால் கசக்கிறது
59.99 % வாங்கி பட்டமும்
வாங்குவோம். கேட்டால்
முதல் வகுப்பில் தேர்ச்சி என்று
பீத்திக் கொள்வோம்
அடுத்த கட்டம்
இருக்கே போதாத காலம்…
100 க்கு 80 % கால்கள்
வேலைக்காக சென்னையை
நோக்கி நடக்கின்றது.
ஒன்னுக்கும் உபயோகப்படாத
ஒரு பயோடேட்டா, அதில் நமது
HISTORY, GEOGRAPHY வேறு
ஒரே ஊர்பசங்க ஒன்னா ரூம்
எடுத்து தங்குவாங்க..
வேலை தேடி பட்டணம் வந்து
கழுதை தேஞ்சி கட்டெரும்பாகி
வயறு காஞ்சி அல்சரும் வந்து
பட்டணம் படுத்தும் பாடு.
ஐயோ முழி பிதிங்கீடும்
இவனோட மார்க்கு குறையா எடுத்தவன்
முதல்ல வேலைய வாங்கிடுவான்
அப்பதான் ரோசம் பொத்துகிட்டு வரும்
அதெப்படி அவனோட ஒரு மார்க்கு கூட நானு
அவனுக்கே வேலை கெடச்சுடுச்சின்னு
அப்பத்தான் பொறுப்பு வரும்.
தின்னும் திங்காமலும் அலைவான்.
ஐயோ INTERVIEW இருக்கே
இங்கிலீசு ஃபீவரு நமக்கு
பேசிபாரு வாயில சுழுக்கு
எவன்டா இத கண்டுபிடிச்சான்..
நமக்கு தெரிஞ்சதெல்லாம்
ஐ யாம் மாரிமுத்து
ஐ யாம் ஃப்ரம் கல்லுப்பட்டி
இது மட்டுந்தான்
அப்பத்தான்
அவமானப்பட கத்துக்குவோம்
தினம் நாலு கம்பெனி
தினசரி முடிவுகள்…
அப்பப்பா நெனப்பு வரும்
திரும்ப ஊருக்கே போயிடலாம்ன்னு
அப்பதான் ஒரு மாங்கா மடையன்
நம்மையும் மதிச்சு OFFER LETTER
கொடுப்பான். சம்பளம் குறைவாதான் இருக்கும்
வேற வழியில்லாம அதிலயே குதிர ஓடும்…
முடிவுகள் இன்னும் நிறைய இருக்கு
அப்பப்ப நியாபகம் வரும்போது
சொல்லுகிறேன்…

No comments:

Post a Comment