இந்த
நிசப்த
இரவினைத்
தூங்காது
கடக்கப்போகிறேன்
என்று
தெளிவாய்த் தெரிகிறது
மாதத்தின்
கடைசி தேதி
பெருகிடும்
தேவைகள்
பிடிக்காத
அலுவல்கள்
அடம்பிடிக்கும்
சோம்பல்
கருமேகங்கள்
அற்ற வானம்
எப்போதும்
அல்லாத வெயில்
நெரித்து
தள்ளிய பேருந்து
புழுங்கிப்
போன உடல்
குழம்பி
கிடக்கும் மனம்
சவரம்
செய்யாத முகம்
முடிக்க
முடியாத சில கவிதைகள்
மாதங்கள்
துவைக்காத போர்வை
நாற்றமெடுக்கும்
காலுறைகள்
காற்றோட்டம்
இல்லாத மெத்து
அடிக்கடி
இரையும் பண்பலைகள்
சண்டையிடும்
தெருநாய்கள்
பிடுங்கும் கொசுக்கள்
விரட்டும்
வலைத்தள அரட்டைகள்
விடாத
ஒற்றைத் தலைவலி
நெடுநேரமாய்
அழைப்பை
ஏற்காத தலைவி
போதுமென்று
நினைக்கிறேன்
இன்றைய
இரவினை
தூங்காது
கடப்பதற்கு
No comments:
Post a Comment