இதுவே என் தீயிடம்
இனிமேல் இங்கே
தூறிடும்
இதுவே என் ஓய்விடம்
இதயம் இங்கே தூங்கிடும்
இதுவே என் போரிடம்
புழுவும் என்னை
கூரிடும்
யாக்கை வெந்து
தீரவே
காக்கை வந்து கூடிடும்
மண் சூழ்ந்து மூடவே
கண் கூர்ந்து தேடிடும்
அனலாகி எரிந்த
பின்னே
தாகங்கள் எடுக்குமோ
மண்ணாகிப் புதைந்த
பின்னே
மாற்றங்கள் நிகழுமோ
இரவும் முடிந்தது
விதியும் முடிந்தது
கனவும் கரைந்தது
திதியும் கரைந்ததுவோ
Miss you hughes
ReplyDelete