"நீ இப்போ
மாதிரியே எப்போவும் குடிக்காம இருக்கனும், புரியுதா?" அவன் கையை முத்தமிட்டுக்
கொண்டே இன்னும் ஒருமுறை அவள் அவனிடம் கூறினாள்.
------------------------------------------------------------------------------------------------------
"ஏன்டா
இப்படி பொண்ணுங்க மாதிரி இருக்க?" என்றான் ஒருவன்.
"இப்போல்லாம்
பொண்ணுங்க கூட குடிக்கறாங்க மச்சி" என்றான்
இன்னொருவன்.
காரை நிறுத்த
சொல்லி அமைதியாக இறங்கி நடக்க துவங்கினான்.
------------------------------------------------------------------------------------------------------
"இப்போ
நீ சண்டைய நிறுத்தலான நான் குடிக்க ஆரம்பிச்சிடுவேன்"
"நீ குடிக்கறதுக்கு
என்ன காரணம் காட்டாத?" மறுமுனை துண்டிக்கப் பட்டது.
------------------------------------------------------------------------------------------------------
3 டாலர் பீர்
கேஸ் ஒன்றை வாங்கி வந்து பிரிட்ஜ்ல் அடுக்கி
வைத்துவிட்டு 5 நிமிடம் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான்.
பின் ஒன்றை
எடுத்து கையில் வைத்துக் கொண்டு அவளின் கடைசி whatsapp சாட்டைக் பார்த்தான்.
"எனக்கு
இனிமே போன் பண்ணாத" என ஆங்கிலத்தில் அனுப்ப பட்டிருந்தது.
கோபம் தலைக்கேற
2 பீர் பாட்டில்கள் உடைந்தன. மூன்றாவதை எடுத்துக் கொண்டு மெத்தை அருகில் வைத்துக் கொண்டு
படுத்துக்க கொண்டே சிந்தனையில் ஆழ்ந்தான்.
------------------------------------------------------------------------------------------------------
"அவன்
சைக்கோ மாதிரி இருக்கான். அவனை போய் ?" அவளின் தோழி சற்று அழுத்தமாகவே கூறினாள்
.
"உளராத
அவன்கிட்ட எந்த கெட்ட பழக்கமும் இல்ல. அவன் யார்கிட்டயும் சரியா பேசலான சைக்கோவா?".
அவன் கேட்டுக்
கொண்டே வகுப்பறையில் நுழையாமல் திரும்பி சென்றான்.
------------------------------------------------------------------------------------------------------
"எல்லாரும்
அப்பவே சொன்னங்க நீ ஒரு சைக்கோனு. அவங்க பேச்ச கேக்காததுக்கு எனக்கு இதுவும் வேணும்
இன்னமும் வேணும்.
------------------------------------------------------------------------------------------------------
அடுத்த நாள்
மேலும் இரண்டு பாட்டில்கள் உடைந்தன. அடுத்த பீர் பாட்டில் மெத்தைக்கு அருகில் வந்தது.
------------------------------------------------------------------------------------------------------
"படிக்க
அனுப்சா எவன் கூடயோ ஊர் சுத்திட்டு வந்திருக்க" அவன் மறுமுனையில் அமைதியாக காத்திருக்க,
அவள் அவளின் பெற்றோரிடம் இவர்களின் காதலைப் பற்றி சொல்ல வந்த பல வசைகளில் முதலாவதும்
சற்று கேட்கும் படியாகயும் இருந்த வாக்கியம் இது. அவர்கள் கூறிய மற்றவற்றை கேட்கவே
முடியாதவை. அதுவும் பெற்ற பெண்ணிடமே .
------------------------------------------------------------------------------------------------------
கடைசி பாட்டிலும்
உடைக்கப்பட்டது.
------------------------------------------------------------------------------------------------------
"நான்
பொட்டையாவே இருந்திக்கிறேன்." என நண்பனுக்கு பதில் அளிக்கப்பட்டது.
------------------------------------------------------------------------------------------------------
"என்ன
மன்னிச்சிரு" என watsappல் அனுப்பப்பட்ட வாய் வழி செய்தி (வாய்ஸ் மெஸ்ஸஜ்) அவளால்
கேட்கப் பட்டதற்கான இரண்டு நீல டிக் விழுந்த சில நேரத்தில், typing... என அவன்
watsapp சிரித்தது.
------------------------------------------------------------------------------------------------------
நன்று
ReplyDelete