Tuesday, 23 March 2021

பாவ நகரம் - XIV


ஸ்ரீதர் காலையில் கண் விழித்த பொழுது அவன் கால்களில் ஏதோ  மாற்றம் தெரிந்தது. அவன் எழுந்து நிற்க முயற்சித்த பொழுது அவனது கால்கள் ஏதோ பலத்தை பெற்றியிருப்பதை போல் உணர்ந்தான். அவனால் சாதாரணமாக நடக்க முடியவில்லைஅவன் முதல் மாடியில் இருந்தான்கீழ் தளத்திற்கு செல்ல விரும்பினான். வினோத உணர்ச்சி தரும் தனது கால்களை வைத்து கீழ் தளத்தை நோக்கி நடந்தான். அடுத்த நொடி அவன் கீழ் தளத்தில் இருந்தான். இருந்தான் என்பதை விட, விழுந்தான் என தான் சொல்ல வேண்டும். என்ன நடக்கிறது? மீண்டும் மேல் தளம் நோக்கி நடந்தான். மீண்டும் அதி வேகமாக அவன் நினைத்த இடம் நோக்கி வந்து சேர்ந்தான். தான் வேகமாக செல்கிறோம் என உணர்ந்தான். இதுதான் அந்த வினோத உணர்ச்சியோ? அடுத்த சில நொடிகளில் வீட்டின் அணைத்து பகுதிகளுக்கும் சென்று வந்தான். என் அம்மா எதையோ கண்டுபிடித்ததாக ஜோசப் சொன்னாரே, அது இதுவா


என்னால் வழக்கம் போல் சாதாரணமாக நடக்க முடியுமா?


என்னை போலீஸ் தேடிக் கொண்டிருப்பார்களே?


என்ற பல கேள்விகள் அவன் மனதை துளைத்தன. அதற்குள் யாரோ கீழ் தளத்தில் டிவியில் செய்தி கேட்டும் சத்தம் கேட்டது. கீழே சென்றான் ஸ்ரீதர். தன்னைப் பற்றி ஏதாவது செய்தி வரும் என்று எதிர்பார்த்தவனுக்கு வேறொரு சம்பவத்தை  பற்றி செய்தி  சொல்லப்பட்டது.


--------------------------------------------------------------------------------------------------------------------------------------------


அடுத்த அரை மணி நேரத்தில்  நிலைமை கை மீறியிருந்ததுஅமைதியாக இருந்த பொது ஜனம்  ஒருவன் குரல் கொடுக்க ஆரம்பித்த உடன், விழித்துக் கொண்டது. அதற்குள் கீதா காசு கொடுத்து ஏற்பாடு செய்திருந்த ஆட்கள் ஆங்காங்கே கல் வீச்சில் ஈடுபட்டனர். வாகனங்களின் கண்ணாடிகள் உடைக்கப் பட்டன. சில நிமிடங்களில் கலவரம் வெடித்தது. ரவுடி ஒருவன் கண்ணாடி உடைப்பதை பார்த்த ஒரு பொது ஜனம்  இன்னொரு  கண்ணாடியை உடைத்தது


"என்னடா இப்படி டப்பா பஸ் எல்லாம் விடறீங்க?" எனக் கேட்டுக் கொண்டே ஒரு பொது ஜனம் வேறொரு பேருந்தின் மீது கல் எரிந்தது.


அந்த பொது ஜனம் ஒரு அலுவலகத்தில் வேலை செய்கிறது. அதற்கு இதை செய்ய வேண்டிய அவசியம் இல்லை ஆனாலும் செய்தது. இது போன்ற செயல்கள் தவறு என்று தெரிந்தும் செய்தது. அந்த பொது ஜனத்தின்  உண்மை ரூபம் வெளி வந்து விட்டது. இதைப்  போல் பலரின் உண்மை ரூபம் வெளி வந்துக் கொண்டிருந்தது . அந்த பொது ஜனம் எப்போதும் இதற்கு தயாராய் இருந்துள்ளது. ஆனால் சமூகத்தில் போர்வை போர்த்திக் கொண்டு அமைதியாக தகுந்த நேரத்திற்க்கு காத்துக் கொண்டிருந்ததுப் போலும்


அந்த பொது ஜனம் போல், இன்னும் சில பொது ஜனமும் நடந்து கொள்ள நிலைமை இப்போது கலவரமாக மாறி இருந்தது.


--------------------------------------------------------------------------------------------------------------------------------------------


இந்த செய்தியை பார்த்துக் கொண்டிருந்த ஸ்ரீதருக்கு ஏதோ உரைத்தது. அந்த முதியவருக்கு தெரியாமல் அவரது வீட்டை விட்டுக் கிளம்பினான்.


--------------------------------------------------------------------------------------------------------------------------------------------


தரண் தனது டீமுக்கு வேகமாக அடுத்து செய்ய வேண்டியவைகளைப் பற்றி சொல்லிக் கொண்டிருந்தான். கலவரம் நடக்கும் அனைத்து இடங்களிலும், காவல் துறையினர் குவிக்கப்பட்டனர். தண்ணீர் பீரங்கியம், கண்ணீர்ப்புகை குண்டுகளும் கொண்டு மக்கள் கலைக்கப் பட்டனர். காவல் துறை ஆங்காங்கு தடியடி நடத்தியது. அந்த மாவட்ட கலெக்டரிடம் நிலைமை விளக்கப்பட்டு தேவைபட்டால் துப்பாக்கி சூடு நடத்த அனுமதி தேவை என தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.


--------------------------------------------------------------------------------------------------------------------------------------------


தனது மேனேஜரிடம் லேட்டாகும் என கூறி விட்டு பேருந்தில் அமர்ந்துக் கொண்டிருந்த கார்த்திக் கலவரம் நடக்க ஆரம்பித்தவுடன், வேகமாக பேருந்தில் இறங்கி நடந்து பாதுகாப்பான இடம் கிடைக்குமா எனப் பார்த்துக்கொண்டே நடந்தான்ஒரு கடையினுள் வேகமாக சிலர் ஒளிவதைப் பார்த்த அவனும் அக்கடையை நோக்கி ஓடினான். அவன் வருவதைப் பார்த்த கடையினுள் இருந்தவர்கள், கதவை முழுதாக மூடாமல், சிறிது திறந்து வைத்துக் காத்துக் கொண்டிருந்தனர்.


அவன் அந்த கடையின் கதவை தொடுவதற்கும், அவன் தலையில் ஒரு கல் வந்து விழுவதற்கும் சரியாக இருந்தது.எவ்வித யோசனையுமின்றி கடையின் கதவுகள் அடைக்கப்பட்டன.


--------------------------------------------------------------------------------------------------------------------------------------------


தரண் சென்ற இடத்தில் முதலில் நிலைமை கை மீறி போனதைப் போல் தோன்றியது. ஆனால் காவல் துறை துரிதமாக செயல்பட்டு நிலைமையை அரை மணி நேரத்தில் கட்டுக்குள் கொண்டு வந்தது.


--------------------------------------------------------------------------------------------------------------------------------------------


கார்த்திக் அடிபட்டு கிடந்த இடத்திற்கு ஸ்ரீதர் வந்தான். ஸ்ரீதரின் உடம்பில் சில உராய்ப்புகள் இருந்தன. அவன் வேகமாக ஓடி வரும் போது விழுந்ததற்கான தடயங்கள் அவை. ஸ்ரீதர் கார்த்திகை தூக்கிக் கொண்டு, அருகிலிருந்த ஹாஸ்பிடல் நோக்கி ஓடினான். அடுத்த சில நிமிடங்களில் அடிபட்டு உதவி கிடைக்காமல் இருந்த மேலும் பலரை ஹாஸ்பிடலில் சில நொடிகளில் கொண்டு சேர்த்தான். அரை மயக்கமாகவோ, முழு மயக்கமாகவோ இருந்த அவர்களுக்கு என்ன நடக்கிறது என்று புரியவே இல்லை. ஆனால் அந்த ஹாஸ்பிலின் ஒரு CCTV கேமரா எந்த வித சலனமும் இன்றி, அவனின் வேகத்தை படம் பிடித்துக் கொண்டிருந்தது.


                                                                                                                                                                        -பாவங்கள் தொடரும்

No comments:

Post a Comment