Tuesday, 28 January 2014

ஏதோவாகிக்கொண்டிருக்கிறேன்....…

















நெடுநாள் தவத்தை
உன் மூச்சு காற்று தொட்டதிலிருந்து
ஏதோவாகிக்கொண்டிருக்கிறேன்

எனக்கென்று இருக்கும்
இந்தப் பாலைவனம்
அழகிய நந்தவனமாகிக் கொண்டிருக்கிறது

என் நாட்குறிப்பின் பக்கங்களில்
பகலும் அலைகிறது நிலா
என் கவிதையின் வரிகளில்
தினமும் நடக்கிறது விழா

நேரங்களை மதிப்பதில்லை
என்றாகிவிட்ட போது
தூக்கம் ஒரு தடையாகுமோ
பின்னிரவும் கடக்க
மின்மினிகள் மினுக்க
கண்மணியே உன்னிடம்
பேசியே விடிகிறது

உனக்கும் எனக்குமான
தூரங்கள் குறைந்து கொண்டே
வருகின்றது

மாற்றங்களை விரும்பாத மனதில்
நீ சேர்ந்து கொண்டிருக்கிறாய்
கடுகளவு என் உள்ளத்தில்
கடல் அளவு நீ
எப்படி சேமிப்பதுனை…

உன் கையிடம் சேராத
என் கைகளை
யாரிடமும் கொடுப்பதில்லை
என்றாகிவிட்டது
ஆமையாய் ஓடும்
நெடிய பொழுதினை
வேகமாய் விரட்டுகின்றேன்

ஏதோ ஆகிக் கொண்டிருக்கிறேன்
என்பது மட்டும் புரிகிறது

யாருமற்ற உலகில்
நீயும் நானும் மட்டுமே
வாழ்வதாய்த் தெரிகிறது

மறைத்தே வளர்க்கும்
என் மீதான உன் பிரியம்
உனக்கே தெரியாமல்
அவ்வப்போது நீ சிந்திடும்
வேளைகளில் திக்குமுக்காடிப்
போகிறேன் அன்பே

வேண்டும்போதெல்லாம் உன்னை
நினைக்கும் உரிமை
என் எண்ணத்திற்கு எப்போதும்
உண்டு ஆகவே
உன்னை கேட்டு பெறப்போவதில்லை
என்றும்..

என்னைச் சுற்றி மிதந்து கொண்டிருக்கும்
காற்று எப்போதெல்லாம் என்னைத்
தொடுவதாய் உணர்கின்றேனோ
அப்போதெல்லாம்
நீ என்னைத் தொடுகிறாய்..

நீ குழப்பத்தில் இருக்கும் போது
என்னைச் சுற்றிலும் குழப்பங்கள்
சூழ்ந்து விடுகின்றது


உண்மையில்
ஏதோவாகிக்கொண்டிருக்கிறேன்....…  

Wednesday, 1 January 2014

ஏதோ போங்கப்பா...


புலர்ந்த பிறகு புத்தாண்டு
மற்றுமொரு நாளாகவே
கடந்து செல்கிறது.

யாழியை நினைக்கக்கூடாது,
மதுவை தொடக்கூடாது,
சர்க்கரை நோயாளி
சர்க்கரையை குறைப்பதுபோல்
கோபத்தை குறைத்துக்கொள்ள வேண்டும்,
இந்தி கற்றுக்கொள்ள வேண்டும்,
கலிங்கத்துபரணி படித்திட வேண்டும்,
என எடுத்துக்கொண்ட
உறுதிமொழிகளையெல்லாம்
மூட்டைக்கட்டி தூர போட்டாகிவிட்டது.

இரவில் அழைத்த நபர்களையும்,
அழைக்கப்பட்ட நபர்களையும்,
அலைபேசியில் சரிபார்க்கும் போது
“இவன் கூடவெல்லாம் பேசினோமா”
என்பது போன்ற ஏதோவொரு
மென்னதிர்வு ஏற்பட்டுவிடுகிறது.

பதினைந்து ரூபாய்
வாழ்த்து அட்டை வாங்கி
அஞ்சல் செய்தபோது
மகிழ்ந்த மனம்,
ஒரு ரூபாய் ஐம்பது பைசாவிற்கு
குறுஞ்செய்தி அனுப்பிட
பதைபதைத்து போகிறது.

அழைக்கபடாதவர்களின்
தொடர்பு எண்களை
பார்க்கும் பொழுது,
அவர்களை அழைத்து
வாழ்த்து சொல்லும்
எண்ணம் துளியுமில்லை.

எது எப்படியோ...
மீண்டும் ஒருமுறை
உங்கள் அனைவருக்கும்
என் இதயங்கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

குடிகார தின வாழ்த்துக்கள்


குடிமக்கள் அனைவருக்கும் முன்கூட்டியே "குடிகார தின வாழ்த்துக்கள்".

ஆங்கிலப் புத்தாண்டு என்ற பெயரில் இரவு முழுதும்
குடித்து
 கும்மாளமிட இப்பொழுதே தயாராகி வருகின்றன
நமது
 நகரங்கள்சில காலம் முன்பெல்லாம்,
குடிப்பதற்கு செல்பவர்கள் யாருக்கும் தெரியாத வண்ணம்
மறைந்து
 மறைந்தே குடித்து வந்தனர்ஆனால்,
இப்பொது டீக்கடையில் டீ குடிப்பது போல் சர்வ
சாதாரணமாய்
 ஆகிவிட்டது இப்பழக்கம்.
அதுவும் ஆங்கிலப் புத்தாண்டு என்பது குடிகாரர்
தினமாகிவிட்டது
ஜோடிகளோடு ஆட்டம் போடுவதற்கும்,
கேளிக்கை செய்வதற்கும் இந்த குடிகாரர் தினம் மிகவும்
வசதியாய்
 உள்ளது. "பப்கல்சர் பெருகி வரும் இக்காலத்தில்,
ஒவ்வொரு க்ளப்புகளும் வாலிபர்களை கவர்ந்திழுக்க பல
கவர்ச்சி
 திட்டங்களை அறிமுகப் படுத்துகின்றன.
பெண்களுக்கு இலவச நுழைவுச் சீட்டு என பல விடுதிகள்
அறிவிக்கின்றன
பெண்கள் நிறைய
கூடினால்தானே
 குடிமகன்களுக்கு உற்சாகம் ?
இதில் புத்தாண்டு பிறக்கையில் வசதியாக சில நிமிடங்கள்
மின்சாரத்தையும்
 அனைக்கிறார்களாம்திசை மாறி செல்லும்
இளம்பெண்கள்
 இதன் விளைவுகளை யோசிக்கிறார்களா ?
கோடிக்கணக்கில் நாம் அரபு கொள்ளையர்களுக்கு முந்திரி,
பாஸ்மதி அரிசிபாதாம்
என்று
 உழைத்து உற்பத்தி செய்தவற்றை எல்லாம்
ஏற்றுமதி
 செய்துஅவர்களின்
கச்சா
 எண்ணையை இறக்குமதி செய்கிறோம்.
நமது குடிமக்களோ பெட்ரோலை தங்கள் வாகன டாங்குகளில்
நிரப்பி
 "ஹாப்பி ந்யூ இயர்என்று ஏதோ சாதித்துவிட்டது
போல்
 நகரங்களை வலம் வருகிறார்கள்.
எத்தனை விபத்துக்கள் ? எத்தனை பெற்றோர்கள் வயிற்றில்
நெருப்பை
 கட்டிக்கொண்டு இருப்பார்கள் ?
காவலர்களுக்கு தான் இவர்களை கட்டுபடுத்த
எத்தனை
 சிரமம் ?
சந்தோஷமாய் இருப்பதில் தவறில்லைஆனால்
அது
 கண்மூடித்தனமாக சென்று பின்னர் வருத்த
படுமாறு
 இருக்கக் கூடாதுஇதை பழமைவாதம்
என்று
 ஒதுக்கி விடாதீர்கள்உங்கள்
பகுத்தறிவு
 கொண்டு யோசித்து பாருங்கள்.