Wednesday, 27 August 2014

மெளனம்


இந்த சொல் சில காலமாக என்னை சுற்றி சுற்றி வந்து கொண்டிருக்கிறது.

அதை கட்டுபடுத்தவும் தெரியாமலும் அதனிடம் என்னை ஒப்புக்கொடுக்கவும்

முடியாமல் தவித்து வருகிறேன்.

ஏரிக்கரையில் அமர்ந்து அதன் மீது கல்லெறியும் சிறுவனாய் என் மௌனம்

உங்களுக்காக


                           
மெளனம் என்பது என்ன?
அமைதியான சூழலா?
சப்தமற்ற நிலையா?
மௌனத்தை கலைப்பது
சப்தமா இல்லை மனித மனதின் எண்ணமா?
மௌனம் என்றொரு நிலையை அடைவது எவ்வாறு?
அது சாத்தியமா?
மௌனத்தை காண முடியுமா?
மௌனத்தை உணர முடியுமா?
அப்படி உணர்ந்தால் அது மௌனமா?
மௌனத்தை கண்டு, மௌனத்தை உணர்ந்து
அதை கலைத்துவிட்டேனா?
மௌனம் என்றொரு நிலை
உண்மையில் உள்ளதா என்ன?

இல்லை கற்பனையா?

1 comment:

  1. வித்யாசமான படைப்பு தீபன்..

    ReplyDelete