சென்னையில் புத்தக கண்காட்சி கடந்த
11ம் தேதியில் தொடங்கி வருகின்ற 23ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த முறை பச்சையப்பன்
கல்லூரி மைதானம் புத்தக கண்காட்சிக்காக ஒதுக்கித் தரப்படாத காரணத்தால், சென்னை நந்தனத்தில்
இருக்கின்ற ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் கண்காட்சி நடந்து வருகிறது. லட்சக்கணக்கான புத்தகங்கள்
குவிந்து உள்ள இடத்திற்கு சென்றுவிட்டு, அங்கு என்ன புத்தகத்தை வாங்கலாம் என்று யோசித்துக்
கொண்டு இருக்காமல், இந்த புத்தகங்களைத்தான் வாங்கப் போகிறோம் என்று முடிவு செய்துவிட்டு
செல்வது நமக்கு சற்று நலம் பயக்கும் என்பதால், முக்கியமான தவறவிடக்கூடாத நாவல்கள் என்று
பிரபலமான எழுத்தாளர்களால் கூறப்படும் நாவல்களின் பட்டியலை நமக்கு உதவியாக இருக்கும்
என்கின்ற நம்பிக்கையில் இங்கு கொடுத்திருக்கிறோம்.
முக்கியமான
நாவல்கள்:
ஜெயமோகன் எழுதிய காடு, ஏழாம் உலகம், கொற்றவை,
எம்.ஜி சுரேஷ் எழுதிய அலெக்சாண்டரும் ஒரு கோப்பை தேநீரும், யுரேகா என்றொரு நகரமும்,
எஸ்.ராமகிருஷ்ணனின் நெடுங்குருதி, யாமம் போன்றவையும், வாமு கோமுவின் கள்ளியும், யுவன்
சந்திரசேகரின் குள்ள சித்தன் சரித்திரம், கானல்நதி, பகடையாட்டம், ஜேடி..குரூஸின் ஆழி
சூழ் உலகு நாவலும், பூமணியின் வெக்கை, பிறகு நாவலும், சுந்தர ராமசாமியின் ஒரு புளியமரத்தின்
கதை, பா.சிங்காரத்தின் புயலிலே ஒரு தோணி, ஹெப்சிபா ஜேசுநாதனின் புத்தம் வீடு, சா.கந்தசாமியின்
சாயாவனம், தி.ஜானகிராமனின் மோகமுள், அம்மா வந்தாள், மரப்பசு, கி.ராஜநாராயணனின் கோபல்ல
கிராமம், தோப்பில் முகம்மது மீரானின் அஞ்சுவண்ணத் தெரு, ஒரு கடலோர கிராமத்தின் கதை,
கல்கியின் அலையோசை, மகுடபதி, சு.வெங்கடேசனின் காவல் கோட்டம், பா.வெங்கடேசனின் தாண்டவராயன்
கதை, அருணனின் பூருவம்சம், சுதேசமித்திரனின் காக்டெய்ல், ஆஸ்பத்திரி, தமிழவனின் வார்ஸாவில்
ஒரு கடவுள், ஜி.நாகராஜனின் நாளை மற்றொரு நாளே, குறத்தி முகடு, சோலை சுந்தர பெருமாளின்
குருமார்கள், சி.சு.செல்லப்பாவின் வாடிவாசல், நாஞ்சில் நாடனின் தலைகீழ்விகிதங்கள்,
சூடிய பூ சூடற்க, வண்ணநிலவனின் கடல்புறத்தில், ஆதவனின் காகித மலர்கள், அகிலனின் சித்திரப்
பாவை, கரிச்சான்குஞ்சுவின் பசித்த மானுடம், நீலபத்மநாபனின் பள்ளிகொண்டபுரம், தலைமுறைகள்,
அசோகமித்ரனின் கரைந்த நிழல்கள், சம்பத்தின் இடைவெளி.
சிறுகதை
தொகுப்பு:
ஆதவன், நகுலன், புதுமைபித்தன், வண்ணதாசன், வண்ணநிலவன்,
சுந்தர ராமசாமி, இமையம், அம்பை, தி.ஜானகிராமன், கி.ராஜநாராயணன், நாஞ்சில் நாடன், அ.முத்துலிங்கம்,
பிச்சமூர்த்தி, கோணங்கி, எஸ்.ராமகிருஷ்ணன், அசோகமித்ரன், பிரபஞ்சன், ச.தமிழ்செல்வன்,
லா.ச.ராமாமிருதம், மெளனி, கு.அழகிரிசாமி. ஆகிய ஆசிரியர்களின் தொகுப்புக்களை நம்பி வாங்கிப்
படிக்கலாம்..
இதுபோன்ற முக்கியமான தொகுப்புகளை நாம் குறைந்தவிலையில்
வாங்குவதற்கு சென்னை புத்தக கண்காட்சி சென்னையில் வசிக்கின்ற நம்மைப் போன்ற மக்களுக்கு
ஒரு வரப்பிரசாதம். வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே இந்த புத்தக கண்காட்சி நடக்கும் என்பதால்
இந்த வாய்ப்பை நீங்கள் தவறவிட்டால் அடுத்த வாய்ப்புக்காக அடுத்த ஜனவரி வரை காத்திருக்க
நேரிடும். தவறவிடாதீர்கள் நண்பர்களே……..!
மீண்டும் ஒன்றை அழுத்தமாக நினைவுபடுத்த விரும்புகிறேன்..
மேற்கூரிய நாவல்களும் சிறுகதை தொகுப்பு சார்ந்த விவரங்களும் அந்தந்த எழுத்தாளர்களின்
ரசனையுடன் ஒத்துப் போயிருக்கும்.. எனவே அவை மிகச்சிறந்த நாவல்கள் என அவர்களால் கூறப்படுகின்றன..
இவற்றில் சில நம் ரசனையோடு ஒத்துப் போகாமல் இருப்பதற்கான சாத்தியக்கூறுகளும் உண்டு
என்பதை சற்றே கவனத்தில் கொண்டால் நல்லது.
புத்தக கண்காட்சி நேரம்
:
வார நாட்கள் : மதியம் 2.30லிருந்து இரவு 8.30 வரை
வார இறுதிநாட்கள்: மதியம் 11.00லிருந்து இரவு
9.30 வரை
இன்பா.
Nalla thoguppu thola...
ReplyDeleteAnaivarukkum Payanulla thokuppu... Nandri Inba
ReplyDelete