கொஞ்ச நாளைக்கு முன்னாடி பேசபட்ட பிரச்சனை இது. இணையம், பேஸ்புக்,
ட்விட்டர் உபயோகிக்கிறவங்களுக்கு தெரியும்னு நினைக்கிறேன். தமிழகத்தில ஒருத்தர் ஒரு
மத்திய அமைச்சரோட பையனப் பத்தி ஏதோ ட்விட்டர்ல ட்விட்ட, அத சாட்சியா வச்சி போலீஸ் அவரை
கைதுப் பண்ணிட்டாங்க. அடுத்து பாடகி சின்மயிக்கும் இன்னொரு தரப்பிக்கும் அதே ட்விட்டர்ல
பிரச்சனை வர, அதுவும் போலீஸ் வரைக்கும் போய் சமாதானம் ஆச்சு. இது மாறி இணையத்துல எழுதறதுக்கும்
சொல்றதுக்கும் பிரச்சனை வரும்னு யாரு கண்டா. இந்த விசயம் நாடு முழுக்க பரவ காரணமா இருந்தது
வேறவொரு சம்பவம்.
மும்பைல பால் தாக்கரே இறுதி ஊர்வலம் நடந்தப்ப அந்த இடத்துக்குநிறைய மின்சாரம் வேணும்னு மத்த இடத்துல நிறுத்தி
வச்சிருப்பாங்க போல. இத எதிர்த்து ஒரு பொண்ணு பேஸ்புக்ல ஸ்டேடஸ் போட, அவளோட தோழி ஒருத்தி
அந்த ஸ்டேடஸ்க்கு லைக் போட, ஆரம்பிச்சுது பிரச்சனை. அவங்க ரெண்டு பேரையும் பொது மக்களுக்கு
இடையுறு செய்யும் விதமாக செய்தி பரப்பியதுன்னுட்டு போலீஸ் கைதுப் பண்ணிட்டாங்க. அப்பறம்
மீடியா தலையிட, அவங்க ரெண்டு பேரையும் விட்டுட்டாங்க.
இந்த விசயம் போய்க்கிட்டு இருக்கும் போதே ஒரு பொண்ணு சுப்ரிம்
கோர்ட்ல பொது நல வழக்கு ஒன்னு போட்டுட்டாங்க. இந்திய சட்டம் மக்களுக்கு கருத்து சுதந்திரம்
கொடுத்திருக்கு. அப்படி இருக்கும் போது எப்படி அவங்க ரெண்டு பேரையும் கைதுப் பண்ணலாம்னு
கேட்டு கேஸ் போட்டங்க. சுப்ரிம் கோர்ட் அந்த கைதுக்கு கண்டனம் தெரிவிச்சு கைதுப் பண்ண
போலீஸையும் கண்டிச்சிருக்கு. இப்ப அந்த அரஸ்ட்
ஆன ரெண்டு பேரும் வழக்குப் போட்ட அந்த பொண்ணும் ரொம்ப பேமஸ் ஆகிட்டாங்க. IIT-யோ
IIM-யோ அந்த ரெண்டு பேரையும் அவங்க மாணவர்கள்கிட்ட பேச கூப்பிட்டுயிருக்காங்களாம்.
இப்படி எல்லாரும் கருத்து கந்தசாமியா மாறிட்டா நாடு திருந்தயிருமோ? “பேமஸ் ஆகலாம் இப்படி!”
னு ஒரு படம் எடுங்கப்பா.
விகடன்ல கதைப் படிக்கும் போது ஒன்னு தோன்னுச்சு. மாற்றுத்திறனாளிக்கு
சைக்கிள், தையல் மிஷின், அது இதுனு எவ்வளவோ செய்யிது அரசாங்கம். அத நம்ம மந்திரி, சட்ட
மன்ற உறுப்பினர்னு பெரிய மனுசங்களாம் வந்து கொடுக்கிறாங்க. அப்ப அந்த மாற்றுத்திறனாளிய
மேடை மேல ஏத்தி அவங்கள கஷ்டபடுத்தி வரிசையில நகத்தி அப்பப்பா…. அதுக்கு அவங்க ஒக்காந்து
இருக்கிற இடத்துக்கே போய் கொடுத்தா இன்னும் நல்லாயிருக்கும்ல. கொஞ்சம் யோசிக்கலாம்.
கரிகால் சோழன் மட்டும் இப்ப உயிரோட இருந்திருந்தான் ஏன்டா உயிரோட
இருக்கோம்னு நொந்துக்குவான், அழகான காவிரிய இப்படி திண்டாட வைக்குறானுங்கனு. மாத்தி
மாத்தி ரெண்டு அரசும் கேஸ் போடுது, சிறப்பு குழு ஆய்வு செய்யுது ஆனா ஒண்ணும் நடக்க
காணோம். ஒரு விவசாயி கேக்குறான், “சாமிகளா, நீங்க முதலைமைச்சரா யோசிக்க வேணாம். ஒரு
விவசாயியாயிருந்து நினைச்சுப் பாருங்க. திங்க சோறு இல்லாம போனா எதயா சாப்பிடுவீங்க?”
நிலாவில அறுவடை பன்ற காலம் வரைக்கும் இப்படியே இழுப்பானுங்களோ?
தங்கச்சிக்கிட்ட பேசிக்கிட்டுயிருந்தப்ப தீடீர்னு ஒரு தத்துவம்
பொறந்துச்சி. மனுச பயபுள்ளய தவிர வேற எந்த மிருகத்துக்காவது தொப்பையிருக்கா? நல்லா
மூனு வேள, சில பேரு அதுக்கு மேல தின்னுப்புட்டு, தூங்கி தூங்கி விழுந்து, சும்மா நீர்யானை
கணக்கா வளத்து வச்சிருக்கானுங்க. மக்களே, இதே பூமியில தான் சாப்பிட வழியில்லாம சாவுற
மனுசனும் இருக்கான். கொஞ்சம் மிச்சம் வைங்க.
கடைசியா ஒன்னு, அதிகமா தப்பு பண்ணுங்க. அதுக்குனு தப்பு மட்டுமே
பண்ணிட்டு இருக்காதீங்க. செஞ்ச தப்புல இருந்து எது சரினு கத்துக்கோங்க. தப்பு நல்லது.
முத நாள் எதிர் வீட்டு கொடில பாவடைய திருடிட்டு அடுத்த நாள் அந்த தப்ப பண்ணல, வேற தப்பு
பண்றேன்னு பேங்க்ல கொள்ளையடிக்க போயிறாதீங்க. சுட்டே புடுவாங்க!!! வாங்க என்னவேனாலும்
பேசலாம்.
-
கோழி
-
முருகன் (கார்டூன்)
கடலுக்கு போகும் தண்ணீரை கடனாய் கேட்பினும் கொடுப்பாரில்லை..... தண்ணீர் யுத்தம் வரும் நண்பா...
ReplyDelete