Friday, 20 December 2013

என்ன வேணுனாலும் பேசலாம் - அரசியல்


1.கூத்தாடித் திரிந்தவன் குடைக்குள் நிற்கிறான்
     ஆஸ்த்தியைக் கொண்டவன் அடிமையாய் அலைகிறான்
நிலைமை தவறி, பின் நிதானம் கெட்டவன்- அரசியல் செய்கிறான்
     அவன் ஆத்திரம் கொண்டவன்.
           தமிழகத்தை புரட்டிய கலைஞன்.
தேடினாலும் முயலாத திடமான லி உலகம்

2. துரத்தி துரத்தி ஓட்டு கேட்கும் கூட்டம் இதுவோ??
     ஆட்சி பிடித்ததும் விரட்டி விரட்டி சோதனை தருமோ!!
நீ பேசும் வார்த்தையில் வஞ்சகம் வைத்து
     உன் வழியினை தொடரும் அடிமைக் குலங்கள்
பாதம் தொட்டு பணிவடை செய்ய- நீ
     பாரத மாதா இல்லை தாயே!!
நிலைமையை அறிந்து நீ விலைகளை ஏற்றி
இருட்டை அகற்றும் உந்தன் வார்த்தை
வெறும் வார்த்தையாய் போய் இருளில் ஆழ்த்த
     அதில் நித்திரை தொலைத்த மனிதர்கள் பலர்

உன் பாச வார்த்தையில் பச்சயம் கலந்து
     பரிதாப சந்தையில் மனதினை விற்று
என் மக்கள் வாழ்வை பின் நடத்தி செல்லும்
     உன் அன்னை வேடம் அருமையாய் பொருந்தும்.
றிவு ன்றி திகாரம்_செய்து திமிருடன் முனையும் யவர்கள் உலகம்
3. கண் மறைக்கும் சலுகையை காட்டி
     சில்லரையாய் அதை சிதற வைத்து
குனிந்தவனின் முதுகில் குத்தும் காவலன் இவனோ

கனிவாய் கருத்துடன் கவியினை பொழியும்
ஒரு வெண்ணிற போர்வையில் நரியினை கண்டேன்
குறைவாய் கொடுத்து நிறைவாய்
     கிடைத்தது அதற்கு அறியனை என்றேன்
ஆதியில், மறைந்து பயணம் செய்தான்- பின்
     வீதியில் நிறைந்து விளம்பரம் கொண்டான் 
- நீ முதுமைக் கலைஞன்

திருடனை முன்னேற்றும் னவு உலகம்

4.தமிழை வளர்த்த தமிழ்மகன் நீயோ!!
     அவசரம் அறியாமல் அபராதம் விதித்தாய்
அறிவாய் செயல்பட்டு உன் வாரிசை அழைத்தாய்
    
தமிழை தொழுபவன் ஏன்??
உன் மகனை மருத்துவம் கற்க வைத்தாய்??
தமிழை அதன் பின் தான் கண்டு உணர்ந்தாயோ??

உன் அரசியல் தந்திரம் அறியச் செய்ய
     உன் இனத்தை தூண்டி இன்னல்கள் செய்தாய்
சாதனை என்று நினைத்து, சஞ்சலம் தந்தாய்
     சரித்திரம் சொல்லும் உன் மடமை குறித்து
                     மானம்  கெட்ட நீ மருத்துவ அய்யன்
பார்வை_இல்லாத டையர்களின் ண்ணுலகம்

5. கருப்பு சட்டை அணிந்த கயவன் நீயே!!
     சட்டம் படித்த சூழ்சமத் தீயே!!
துள்ளிக் கொள்ளும் உன் அரசியல் தந்திரம்
     தாவிக் குதிக்கும் கட்சியோர் விசித்திரம்
வெறுப்பினை மூட்டும் உன் மூட வார்த்தைகளும்
கலங்கிக் கொண்டிருக்கும் என் மக்கள் கண்களும்
உந்தன் வழக்கினை கூட தீர்க்காது வழக்கறிஞரே!!

நகைப்பினை தூண்டும் உன் நகைச்சுவை பேச்சு
தியும் திறனும் அற்ற முதிர்வற்ற டலுலகம்
6. இருப்பதன் இடமறியாத இடதுசாரி நீ
     எதிர்ப்பினை முனையும் நீவிர் எதிராலி கூட்டம்
தொடங்குவதுமில்லை தொடர்வதுமில்லை தொலைந்து போவதுமில்லை
குற்றங்களை அறிந்து குரல் கொடுக்கும் நீ
பொது அறிவில்லாத பொது உடைமை கொள்கை கூட்டம்.

அரசியல் என்றால்:
      மனம் கொண்டு,
மற்றவர் நலனில் பெருமிதம் கண்டு – தான்
எடுத்ததன் முடிவினில் உறுதியை கொண்டு
      மக்கள் தரப்பில் கருத்தினை அறியவும்
      பொது நலன் கருதி துடிப்புடன் செயல்படும் நெஞ்சமே

                                               - அரசியல்வாதி

Tuesday, 17 December 2013

உனக்காக எழுதும் நான்



விழிகள் பார்த்த ஆரம்பம் ,
எதிர் பாராமல் எனக்கு கிடைத்த
நல்ல நண்பன் நீ!
பல முறை பார்த்து இருக்கிறோம்!
பேச தொடங்குவோம்
என்று சற்றும் நினைக்கவில்லை!!!

பேச மாட்டாய் என்று நினைத்த நொடிகள்,
வெடித்து சிதறிவிரிந்தது புதிய வாழ்க்கை  கோடுகள்
இப்போது தொடங்கியது 
சற்றும் யோசிக்காமல்கிடைத்த
உன் அன்பும்உன் ஊக்கம்மும்,
என்னை மாற்றி இப்போது 
உனக்காக கவிதையும் எழுதுகிறேன்!

"நீயில்லா - நான்", என்ற உறவு இல்லை!
பிரியும் வலிவர கூடும்என்ற பயம் இல்லை!
வண்ணங்கள் மறைந்துவலிகள் நிறைந்து,
தவிக்கும் மனம் தரும்நட்பும் இல்லை!
வெறுமையாய் இருக்கும் பொழுதுகள்,
உன்னோடு இருக்கும் போது வந்த மகிழ்ச்சிக்கும் எல்லைகள் இல்லை!
 ஆனால், " இல்லை " என்ற சொல்லிற்கு,
 நீ உயிர் கொடுத்து,
விலகிப் போனால்!
நான் மேலேசொன்ன "இல்லைஎன்ற
வாரத்தை அனைத்திற்கும் அர்த்தம் பிறக்கும் !
அர்த்தம் இல்லா வார்த்தைகளாக இருக்க வேண்டுகிறேன் !
உன் நீங்காநட்பு என்றென்றும் கிடைக்க விரும்புகிறேன்..

Wednesday, 11 December 2013

நானறியா தேசத்தில் பிறந்தாய்



நானறியா தேசத்தில் பிறந்தாய்
வாழ்வறியா சோகத்தில் மிதந்தாய்
அன்படர்ந்த பேதைச் சுடராகி
பண்படர்ந்த சோலை மலராகி
ஏழ்மையின் சாரத்திலே
ஆழமாய் புதையுண்டாய்
ஓலைக் குடிசையிலே
அழகழகாய் பூத்து வந்தாய்
பஞ்சம் தலை விரித்து
அங்கம் வறுத்திவிட
பசியில் பாடம்;
தலையில் பாரம்
வெறிச்சோடிக் கிடக்கும்
வீதியை நீ குலைப்பாய்
அடிகுழாய்த் தண்ணீரில்
ஆட்டமிட்டு குளிப்பாய்
அர்த்தம் புரியாமல்
அன்பாய்ச் சிரிப்பாய்
நெத்தித் திருநீரை
நித்தம் சுமப்பாய்

சுருங்கிய சில வெள்ளை சட்டைகள்
வர்ணம் கலைந்த பாவாடைகள்
இவைகள் தான் இவள் சொத்து
எப்போதாவது ஒற்றை சடை - அதில்
எப்போதாவது மல்லிகைப்பூ
எப்போதாவது மழை - அதில்
எப்போதும் குளியல்
எப்போதும் பூனைக் குட்டிகள்
இவள் மடியில் இருக்கும்
எப்போதும் அவைகளுக்கு கண்மையிட்டு
நெற்றியால் முட்டி போட்டிடுவாள்
காலம் இவளை பக்குவமாய்
செதுக்கத் தொடங்கியது
மார்கழி மாதம் முதல் நாள்
அதிகாலை இவள் கதவை திறந்தாள்
தெருவெங்கும் வண்ணக் கோலங்கள்
அழகழகாய் பூத்திருந்தன.
தெருவில் நடக்கிறாள்
கோலங்கள் ஒவ்வொன்றையும்
இமைக்காமல் ரசிக்கிறாள்
திரும்ம்பி வீடு சேர்கிறாள்
இவள் வீட்டுக் கோலம் மட்டும்
வெள்ளை வர்ணம்
கைகள் பதிக்கி வைத்திருந்த
பல வர்ணத் துகள்களை
கோலத்தில் இடுகிறாள்
அன்று
கோலமிட கை பிடித்து
சொல்லிக் கொடுக்கிறாள் அன்னை
அன்று முதல் இவள் வீட்டு
முற்றம் அழகாகிறது.
ஒரு நாள் இரவு நேரம்
மொட்டைமாடியில் தெரியும்
சில விண்மீன்களை
எண்ணிக்கொண்டிருக்கையில்
மின்விளக்குகள் மொத்தமாய்
பார்வை இழக்கிறது.
 இப்போது
வானம் முழுக்க கோலப்புள்ளிகள்
வானத்தில் போய் எப்படி அம்மா கோலமிடுவது
 என்று அரும்பாய் கேட்கிறாய்…
நானறியா தேசத்தில் பிறந்தாய்
நீ தான் அழகி…




வந்த நாள் முதல்


இந்த புத்தகம் வாசிக்கும் போது உண்மையில் சில வரிகள் நம் வாழ்வில் கடந்து சென்ற சில நியாபகங்களை நினைவு படுத்துகின்றது. பள்ளியில் தொடங்கிய காதலின் நீட்சி பள்ளி முடிந்த பிறகு மீண்டும் கல்லூரிக்கு செல்லும்போது எவ்வாறெல்லாம் பயணப் படுகிறது என்பது தான் இந்த வந்த நாள் முதல். திரைப்பட ஒளிப்பதிவாளர் திரு செழியன் அவர்களால் எழுதப்பட்டு விகடன் பதிப்பகம் வெளியிட்ட இந்த நூலை அலசி அதில் சில நினைவுகளை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமை அடைகிறேன்.

பள்ளியில்....

என் இருக்கையில் நான் மூன்றாவது
உன் இருக்கையில் நீ மூன்றாவது
பையன்களில் முதல் மதிப்பெண் எனக்கு
மாணவிகளில் உனக்கு.

சூரிய ஒளி முதல் வரிசையிலிருந்து
பின் நகர்ந்து உன் நாட்டுக்கு வருகிறது
நீ ஒளியின் மீது எழுதத் துவங்குகிறாய்.

நாம் உடுத்தும் உடைகளின் வண்ணம்
பலமுறை பொருந்திபோகிறது.
திருத்துவதற்காக மேசை மீது நோட்டுக்கள்
அடுக்கப்படும் போது நம் பெயர்கள்
அடுத்தடுத்து வருகையில்
ரகிசியமாய் ஒரு புன்னகை மலர்கிறது.

பேருந்தில்....

காலை 8.20, பேருந்து முழுக்க மாணவ மாணவியர்,
முதல் நாள் பயணம்
அடுக்கடுக்காய் அமர்ந்த முகங்களின் நடுவே
சன்னலோரம் ஒரு முகம்
யதேச்சையாய் இடித்து
வருத்தம் சொல்லி விலகுவது போல
நம் பார்வைகள் அடிக்கடி விலகிக்கொள்கின்றன
சில நரங்களில் நெரிசலில் இடம் கிடைத்தும்
நீ நிற்கிறாய்; நானும் நிற்கிறேன்...
நிறுத்தம் வந்ததும் நீ பெண்கள் பள்ளி நோக்கிச் செல்கிறாய்...

விடுமுறையில்...

வீடு - மூன்று வேலைக்கான
உணவு விடுதியை மாறுகிறது
மீதப் பொழுதுகளில் மைதானம்..
நண்பனின் வீடு...
நூலகம் அல்லது குளக்கரை
போகும் திசையறியாது நடக்கிறேன்...

நூலகத்திற்கு செல்லும் வழி
யாருமற்ற தொலைவில்
மஞ்சள் புள்ளியென மிதந்து வரும்
உன்னைப் பார்கிறேன்.

என்னைப் பார்த்ததும் கால்கள் ஊன்றி
சைக்கிளில் இருந்து இறங்குகிறாய்.
நம் நிழல்கள் நெருங்கி வருகின்றன
மெல்லிய கொலுசொலி
என்னைக் கடந்து அணைகிறது...
ஊரின் சப்தங்கள் மீள்கின்றன...


இன்னும் இப்படியே நீண்டு கொண்டே போகிறது இந்த தீராக் காதல்…