1.கூத்தாடித் திரிந்தவன் குடைக்குள் நிற்கிறான்
ஆஸ்த்தியைக்
கொண்டவன் அடிமையாய் அலைகிறான்
நிலைமை தவறி, பின் நிதானம் கெட்டவன்- அரசியல் செய்கிறான்
அவன் ஆத்திரம்
கொண்டவன்.
தமிழகத்தை
புரட்டிய கலைஞன்.
தேடினாலும் முயலாத திடமான கலி உலகம்
2. துரத்தி துரத்தி ஓட்டு கேட்கும் கூட்டம் இதுவோ??
ஆட்சி
பிடித்ததும் விரட்டி விரட்டி சோதனை தருமோ!!
நீ பேசும் வார்த்தையில் வஞ்சகம் வைத்து
உன் வழியினை
தொடரும் அடிமைக் குலங்கள்
பாதம் தொட்டு பணிவடை செய்ய- நீ
பாரத மாதா இல்லை
தாயே!!
நிலைமையை அறிந்து நீ விலைகளை ஏற்றி
இருட்டை அகற்றும் உந்தன் வார்த்தை
வெறும் வார்த்தையாய் போய் இருளில் ஆழ்த்த
அதில் நித்திரை
தொலைத்த மனிதர்கள் பலர்
உன் பாச வார்த்தையில் பச்சயம் கலந்து
பரிதாப
சந்தையில் மனதினை விற்று
என் மக்கள் வாழ்வை பின் நடத்தி செல்லும்
உன் அன்னை வேடம்
அருமையாய் பொருந்தும்.
அறிவு இன்றி அதிகாரம்_செய்து திமிருடன் முனையும்
கயவர்கள் உலகம்
3. கண் மறைக்கும் சலுகையை காட்டி
சில்லரையாய் அதை
சிதற வைத்து
குனிந்தவனின் முதுகில் குத்தும் காவலன் இவனோ
கனிவாய் கருத்துடன் கவியினை பொழியும்
ஒரு வெண்ணிற போர்வையில் நரியினை
கண்டேன்
குறைவாய் கொடுத்து நிறைவாய்
கிடைத்தது
அதற்கு அறியனை என்றேன்
ஆதியில், மறைந்து பயணம் செய்தான்- பின்
வீதியில் நிறைந்து
விளம்பரம் கொண்டான்
- நீ முதுமைக் கலைஞன்
திருடனை முன்னேற்றும் கனவு
உலகம்
4.தமிழை வளர்த்த தமிழ்மகன் நீயோ!!
அவசரம் அறியாமல் அபராதம்
விதித்தாய்
அறிவாய் செயல்பட்டு உன் வாரிசை அழைத்தாய்
தமிழை தொழுபவன் ஏன்??
உன் மகனை மருத்துவம் கற்க வைத்தாய்??
தமிழை அதன் பின் தான் கண்டு உணர்ந்தாயோ??
உன் அரசியல் தந்திரம் அறியச் செய்ய
உன் இனத்தை தூண்டி இன்னல்கள்
செய்தாய்
சாதனை என்று நினைத்து, சஞ்சலம் தந்தாய்
சரித்திரம் சொல்லும்
உன் மடமை குறித்து
மானம் கெட்ட நீ மருத்துவ அய்யன்
பார்வை_இல்லாத மடையர்களின் கண்ணுலகம்
5. கருப்பு சட்டை அணிந்த கயவன் நீயே!!
சட்டம் படித்த சூழ்சமத்
தீயே!!
துள்ளிக் கொள்ளும் உன் அரசியல் தந்திரம்
தாவிக் குதிக்கும் கட்சியோர்
விசித்திரம்
வெறுப்பினை மூட்டும் உன் மூட வார்த்தைகளும்
கலங்கிக் கொண்டிருக்கும் என் மக்கள் கண்களும்
உந்தன் வழக்கினை கூட தீர்க்காது வழக்கறிஞரே!!
நகைப்பினை தூண்டும்
உன் நகைச்சுவை பேச்சு
மதியும் திறனும் அற்ற முதிர்வற்ற கடலுலகம்
6. இருப்பதன் இடமறியாத இடதுசாரி நீ
எதிர்ப்பினை முனையும்
நீவிர் எதிராலி கூட்டம்
தொடங்குவதுமில்லை தொடர்வதுமில்லை தொலைந்து போவதுமில்லை
குற்றங்களை அறிந்து குரல் கொடுக்கும் நீ
பொது அறிவில்லாத பொது உடைமை கொள்கை கூட்டம்.
அரசியல் என்றால்:
மனம் கொண்டு,
மற்றவர் நலனில் பெருமிதம் கண்டு – தான்
எடுத்ததன் முடிவினில் உறுதியை கொண்டு
மக்கள் தரப்பில் கருத்தினை அறியவும்
பொது நலன் கருதி துடிப்புடன் செயல்படும்
நெஞ்சமே
- அரசியல்வாதி
No comments:
Post a Comment