Saturday, 31 August 2013

நீயும் நானும்

நான்
பொது இடங்களில் அசுத்தம் மட்டுமே செய்வேன்!
நீ
பொது இடங்களில் போராடவும் செய்கிறாய்!
நான்
பெண்கள் இருக்கையில் அமர்ந்து தூங்கி விடுவேன்!
நீ
பெண் உரிமைக்காக குரல் கொடுக்கின்றாய்!
நான்
முதலாளியின் பணத்தையே பொய் கணக்கில் திருடிவிடுவேன்!
நீ
உழலுக்கு எதிராக நிற்கிறாய்!
நான்
செய்வது குற்றமெனினும் பணத்தைக் கொண்டு
அதனை அழித்து விடுவேன்!
நீ
செய்தது நன்மையெனினும் உன் மீது
குற்றம் சுமத்தப்படும்!
அடுக்கிக் கொண்டே போகலாம்
எனினும் உனக்கும் எனக்குமான
வேற்றுமைகளை
ஒரே வரியில் சொல்வதானால்
நான்
குனிந்து நெளிந்து ஊர்ந்து விடும்
குடிமகனாக வாழ்ந்துவிடுகிறேன்!
நீ
குனியவே மறுத்து மனிதனாக வாழ்கிறாய்!
இதற்காக
எனக்கு ஒரு வீடும், வண்டியும் சொந்தமாகலாம்
நீ
நடுரோட்டில் வெட்டுப் படலாம்
ஏனெனில் நமக்குள் ஒரு ஒற்றுமையும் உள்ளது
நீயும் நானும்
ஒரே ஜனநாயக நாட்டின் இரு பிரஜைகள்!!!

- சராசரி இந்தியன்

3 comments:

  1. அருமை நண்பா, வெகு நாட்களுக்கு பிறகு கம்யூனிசம் வாசனையுடன் ஒரு கவிதை... மீண்டும் மீண்டும் சுவாசிக்கின்றேன்...

    ReplyDelete
    Replies
    1. makkalai patri ezhudha munaigiram avalave...

      Delete
  2. இயல்பான வார்த்தைகளில் அருமையான கருத்துகள்....

    ReplyDelete