Sunday 8 September 2013

8 காதல் கடிதங்கள் கடிதம் -1 : விதை




பிரியமுள்ள பூங்குழலி,
           துளி நேரம் உன்னை பிரிய மனமில்லாத அருள்மொழி எழுதிக்கொள்வது. நீ அங்கு நலமா? நலமில்லை நான் இங்கு உன்னை பார்த்த நொடியிலிருந்து, மனநலமில்லாமல் உலகத்தில் பற்றற்று உனையே ஒற்றியிருக்கிறேன்.
           பார்வையில் என் அன்பை பரிவர்த்தனை செய்துவந்த நான், உன் ஓரக்கருவிழி என்னை பார்த்ததில் தைரியம் கொண்டு காதிதத்தில் என் உள்ளத்தை சொல்ல முயல்கிறேன்.
           பசியில்லை, உறக்கமில்லை வேறேதும் நினைப்பில்லை உனையன்றி. தொட்டால் சுடும் தீ இப்போது என் நெஞ்சத்தில் கொழுந்துவிட்டு எரிகிறது, கண்களில் தீப்பிழம்பாய் உன் உருவம். குளிரான உன் புன்னகையை தந்து என்னை ஆட்கொண்டு ஆற்றிவிடு என்னோடு சேர்ந்துவிடு.
           பின்னால் நீ பிறக்கப் போகிறாய் இந்த கரையருகில் என்றுணர்ந்துத்தான் வைத்தாரோ இந்நதிக்கு பெயர் ‘பொன்னி’ பொன்னி தந்த பொன்னாலான சிலை நீயல்லவோ!
பூங்குழலி,
     பொன்னி படும் இடமெல்லாம் செழிக்கும் வளம்.
பொன் நீ,
     உன் பாதம் பட்ட இடமெல்லாம் மல்லிகை வனம்.

           பெண்ணிற்கு இலக்கணம் உன்னிடம் கண்டேன், பேரழகு சிலையே நெஞ்சில் உன்னை கொண்டேன், உனைத்தவிர வேறாரும் நினையேன் உயிர்வுள்ள வரை.
           எவரிடமும் சொல்லாத ஒரு சொல்லை, கொள்ளாத ஒரு உணர்வை, தராத என் இதயத்தை தந்துவிட்டேன் உனக்கு. என் அன்புக்கு உரியவளே பூங்குழலி,
நான் உன்னை காதலிக்கிறேன்.
I Love You.
    
                           உன் காதலுக்கு காத்திருக்கும்,
                                      அருள்மொழி.

2 comments:

  1. Nanba ithu ponniyin selvan poongulalikku eluthunathaa illa ?

    ReplyDelete
  2. Illa Nanba. oru kaathalan kaathaliku eluthunuthu..

    ReplyDelete