அப்பாவின் கல்லூரி நண்பர் வீட்டுக்கு வந்திருந்தார். அப்பா வீட்டில் இல்லை.
அப்போவோட நம்பர் கொடுப்பா நான் பேசிக்கிறேன் என்றார். நான் போனை தேட ஆரம்பித்தேன்.
என்னப்பா அப்பா நம்பர கூட ஞாபகம் வச்சுக்க மாட்டியா என்றார். சுருக் என்று ஏதோ
குத்தியது போல் இருந்தது
சமீபகாலமாக ஒரு
மோசமான பழக்கத்தில் சிக்கி தவிக்கிறேன். கூட்டமாய் நின்று
பேசிக்கொண்டிருக்கும் போது, அவர்களோடு இயைந்து என்னால் பேச முடியவில்லை என்றால், ஃபோனை
எடுத்து நண்பர்களுக்கு மெஸ்ஸேஜ் அனுப்ப ஆரம்பித்துவிடுகிறேன். என்னடா
பழக்கம் இது என்று அப்பா கூட இருமுறை கடிந்து கொண்டார்.
மச்சி ஸ்கோர்
அனுப்புடா...
143...
Me too…
இவ ஏன் இப்ப இத
அனுப்புறா என யோசித்துவிட்டு sent item எடுத்து பார்த்த போது தான் தெரிகிறது, நம்பர்
மாத்தி அவன் தங்கச்சிக்கு அனுப்புனது.
ரொம்ப நாள் கஷ்டப்பட்டு, ஒரு பொண்ணோட போன் நம்பர வாங்கி, ஹாய்னு ஒரு மெஸ்ஸேஜ்
அனுப்புன அதே ஸ்பீட்ல திரும்ப ரிப்ளே வரும் போது ப்ரகாசமா ஒன்னு எரியும்
பாருங்க... கம்பெனி பல்ப்லாம் வேஸ்ட்டுங்க...
பாத்துக்கோ சித்தப்பா, SMART PHONE இல்லனா நீங்களும் அங்கிள் தான் என்று சாம்சங் விளம்பரத்தை காட்டி
சொன்னேன். அவர் அசால்ட்டா சொன்னார் என்ன கலாய்ச்சுட்டாங்களாமா...
யாருக்கு யாருடா பல்ப் கொடுத்தது.
ஒரு விருந்துக்கு நானும் என் அண்ணனும் ஒன்றாக ஒரு பேருந்தில் சென்றோம். அவன் டிக்கெட்
எடுப்பான்னு நான் இருக்க, நான் டிக்கெட் எடுப்பேன்னு அவன் இருக்க, கடைசில ரெண்டு
பேருமே டிக்கெட் எடுக்கல... கரெக்ட்டா வந்தானுக மாப்பிள்ளைங்க ரெண்டு பேரும்
மாட்டிக்கிட்டோம். அப்போ தான் வந்துச்சு ஒரு மெஸ்ஸேஜ், “என்ட ஜேஞ்ச் இல்ல நீ
டிக்கெட் எடுத்துடு”னு எங்க அண்ணன் ஏறுன உடனே அனுப்புன மெஸ்ஸேஜ்.
இன்னும் மூணு நாளைக்கி மழ இல்ல, ஆனா மேகமூட்டம் இருக்கும் என அப்ளிக்கேசன
பார்த்து வானிலை அறிக்கை சொன்னேன்
ஆமா..., ரமணன் சொல்லியே வாராத மழ இவர் சொல்லி வரபோகுதாக்கும், எலேய்.., நிலாவ
சுத்தி பரிவட்டம் கட்டிடுச்சு நாளைக்கி ராத்திரிகுள்ள மழ வருதா இல்லையானு மட்டும்
பாரு... சொல்லிவிட்டு வீராப்பா கடந்துபோனார் சித்தப்பா
ஆயிரம் பெரியார் வந்தாலும் உங்கள திருத்தமுடியாதுனு முணகிகிட்டே படுத்தேன்.
விடுஞ்சு எழுந்து பாத்தா வீதியெல்லாம் வெள்ளம்...
சாட்டிலைட்டுகே சவால் விடுறாங்கபா நம்ம ஆளுங்க...
WRONG CALL வந்தாலும்
மொக்கை
போடும்
பழக்கம்
எனக்கு
உண்டு...
ஹாய்
சுதாகர்...
ம்ம்..
நீங்க...
என்னடா
இன்னும்
தூக்கமா,
நைட்
படம்
பார்த்தியா...
ஆமா...
மன்னிக்கவும்
எழுத
முடியாத
அளவிற்கு
BAD
WORDS…
சிறிது
சமாளிப்பிற்கு
பின்
செல்லமாய்
கொஞ்சம்
கொஞ்சல்கள்...
அப்படியே
பேச்சு
நீண்டது...
திடீரென
நீ
யாருனு
நினைச்சுகிட்டு
என்ட
பேசிட்டு
இருக்க...
திவ்யா
தானே
இல்ல
இல்ல
ப்ரியா....
CALL END
யார்
காதலுக்கோ
சுபம்
போட்ட
சந்தோசம்...
ஒரு அவசர பயணம் போனில் சார்ஜ் இல்லாமல் அணைந்துவிட்டது. என் வீட்டில்,
உறவுக்காரர்கள் என அனைவரும் முயற்சித்து இருக்கிறார்கள். இரவு வீட்டிற்கு வந்து
சார்ஜ் போட்டவுடன் அப்பாவின் அழைப்பு, நடந்ததை சொன்னதும் தான் நிம்மதி
அடைந்தார்கள். இடைல எவனோ போட்டுவிட்ருக்கான் நான் ஏதோ ஒரு பொண்ண கூட்டிட்டு ஓடி
போயிட்டேன்னு..., அவன தான் தேடிட்டு இருக்கேன்.
செல்போன்
டவர்களின்
அதிக
கதிர்வீச்சால்
சிறு
பறவையினங்கள்
அழிந்துவிட்டன. –செய்தி
அட
போங்கயா... ஈழத்துல எங்க இனம் அழிஞ்சதுக்கே நாங்க
கவலபடல...
யோகி
No comments:
Post a Comment