இந்த பகுதியில் இவரைப் பற்றி எழுத நான் மிகவும் கொடுத்து வைத்திருக்க வேண்டும். ஆயிரத்தில் ஒருவன் என்பார்கள் ஆனால் இவர் லட்சங்களில் ஒருவர். இவரைப் பற்றி தெரியாத இளைஞர்கள் இந்த உலகத்தில் இருக்க முடியுமா என்பது சந்தேகமே. இவரைப் பற்றி நான் கல்லூரி படிக்கும் போது கேள்விப்பட்டிருக்கிறேன். தொழிற் சங்கங்களிலும், ஆட்டோ நிலையங்களிலும், கம்யூனிஸ்ட் கூட்டங்களிலும் இவரின் படங்கள் அணிவகுத்து நிற்கும். அப்போது இவரைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. யார் இவர் என்று ஒரு சில ஆட்டோ ஓட்டுனர்களிடம் கேட்டேன். அவர்களும் பெயரை மட்டும் சொல்வார்களே தவிர மற்ற விபரங்கள் தெரியாது என்பார்கள். இன்றும் அவர்களைக் கேட்டால் தெரியாது என்று தான் சொல்லுகின்றனர்.
சென்னை வந்த பிறகு புத்தகங்களின் நட்பு அதிகம் கிடைத்ததால் முதன் முதலில் கிழக்குப் பதிப்பகம் வெளியிட்ட "சிம்ம சொப்பனம்" (ஃபிடல் காஸ்ட்ரோ வின் வாழ்க்கை வரலாறு பற்றி ஆசிரியர் மருதன் எழுதியது) என்ற புத்தகம் என் கைக்கு கிடைத்தது. அப்போது தான் காஸ்ட்ரோ என்ற மாபெரும் லட்சியவாதியின் நட்பு கிடைத்தது.
புத்தகம் புரட்ட புரட்ட பக்கங்கள் வேகமாக ஓடின. அந்த குறிப்பிட்ட ஒரு பக்கத்திலிருந்துதான் நம் லட்சத்தில் ஒருவன் எனக்கு அறிமுகம் ஆகிறான். நல்ல தோழமை கிடைத்தால் நம்மால் முடியாதது ஒன்றுமில்லை. அது காஸ்ட்ரோவின் விசயத்தில் முற்றிலும் உண்மையானது. ஆம் அந்த தோழன் மாவீரன் திரு சே குவேரா (Ernesto Che Guevara)
"The Revolution is not an
Apple that falls when it ripe, you have to make it fall” - Che
Nationality : Argentina, Cuba, World
Birth : 14.06.1928
Place of Birth : Rosario, Santa Fe, Argentina
Father : Ernesto Guevara Lynch
Mother : Celia de la Serna
Inspiration : Carl Marx
Principles : Guerrilla Warfare, Military Revolution and Marxism
Fact : Che had severe Asthma problem
Earlier Profession : Che is a doctor by profession
Achievement : Revolutionary Fire across youth
and Guerrilla Warfare
Book : Motor Cycle Diary, The
Renaissance of Cuban Revolution
Death : 09.10.1967 Followers : Youth
Position : Cuban Minister
PERSONALITY: ONE AMONG 100 MOST INFLUENTIAL PERSONALITIES IN THE WORLD
சே வின் தந்தை கட்டிடப் பொறியாளர். இடதுசாரி சிந்தனையாளர். தாய் செலியா பெண்ணுரிமை இயக்கத்தில் முக்கிய பங்கு வகித்து வந்தார். மிகவும் துணிச்சல் கொண்டவர். இந்த தம்பதியருக்கு 1928 ஜூன் 14 ஆம் தேதி அர்ஜென்டினாவில் ரொசாரியோ என்னும் இடத்தில் சே பிறந்தார். பிறந்த சில வருடங்களிலே ஆஸ்துமாவினால் பெரிதும் சிரமப்பட்டார். கடைசி வரை அது அவரை விடவே இல்லை.
அர்ஜென்டினாவின் தலைநகர் பியூனஸ் ஏர்சில் உள்ள பல்கலைகழகத்தில், 1948 ஆம் ஆண்டு மருத்துவ மாணவனாக சே நுழைந்தார். ஒரு இளம் மருத்துவ மாணவனாக, தன் நண்பன் ஆல்பெர்ட்டோவுடன் குவேரா லத்தீன் அமெரிக்கா முழுவதும் பயணம் செய்து அடித்தட்டு மக்களின் அப்பாவி நிலையையும், வறுமையையும், அவர்களின் பிரச்சனைகளையும் அறிந்து மனமாற்றம் கொண்டார். அந்தப் பயணம் அவரை புதியதோர் மனிதராக மாற்றியது. தனது மோட்டார் பயணத்தில் தென் அமெரிக்கா முழுவதும் சுற்றி ஏழை மக்களின் நோய்களை கண்டறிந்து மருத்துவம் செய்தார். கடைசியாக மியாமியில் உள்ள ஒரு தொழு நோய் ஆசிரமத்தில் நீண்ட நாட்கள் முகாமிட்டு மருத்துவ சேவை ஆற்றினார். தொழு நோயாளிகளை மருத்துவர்கள் கையுறை அணிந்து தான் தொடுவார்கள். ஆனால் சே அவர்களுடன் கையுறை இன்றி கட்டித் தழுவி அரவணைத்தார்.
சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு முக்கிய காரணம் முதலாளித்துவம். புரட்சியின் மூலம் மட்டுமே அதை களைய முடியும் என்று நம்பினார். அந்த நம்பிக்கை தான் குவேராவின் அரசியல் சித்தாந்தத்திற்கு வழிவகுத்தது. மெக்ஸிகோ நகரில் வாழும் போது, அவர், ராவுல் மற்றும் ஃபிடல் காஸ்ட்ரோவை சந்தித்து அவர்களின் ஜூலை இயக்கத்தில் சேர்ந்தார். அமெரிக்க ஆதரவு கியூபா சர்வாதிகாரி பல்கின்சோ பாடிஸ்டாவை விரட்டி அடிக்கும் நோக்கத்துடன்,
கிரான்மா என்ற கப்பலில் கியூபாவிற்கு கடல்வழியாக சென்ற குழுவில் காஸ்ட்ரோவிற்கு
உதவியாக குவேராவும் இணைந்தார். புரட்சியாளர்களின்
மத்தியில் சேவின் முக்கியத்துவம்
உயர்ந்தது. நாளடைவில் படைத் தளபதியாக உயர்த்தப்பட்டார்.
கொரில்லா போர் முறையில் மிகவும் தேர்ச்சிப்பெற்று
முன்மாதிரியாக விளங்கினார்.
குவேராவுடனான நட்பு காஸ்ட்ரோவிற்கு புதுத் தெம்பை ஊட்டியது. படை இரண்டு பெரும் குழுக்களாக பிரிக்கப்பட்டது. ஒன்று காஸ்ட்ரோ தலைமையில், மற்றொன்று சே தலைமையில். 1958 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் நாள் சாண்டா கிளாரா மாகாணத்தை சே குழு கைப்பற்றியது. இந்த செய்தி வெளியானவுடன், மக்களும் போரில் குதித்தார்கள். பாடிஸ்டாவின் ராணுவம், புரட்சி குழுவுடன் இணைந்தது. 1959 ஆம் ஆண்டு ஜனவரி 1ல் பாடிஸ்டா டொமினிகன் குடியரசுக்கு தப்பி ஓடினார். ஜனவரி 2 இல் சே தனது படையுடன் தலைநகர் ஹவானாவுக்குள் நுழைந்தார். ஒரு மாபெரும் மக்கள் புரட்சி வெற்றிபெற்றது. அப்போது காஸ்ட்ரோ சாண்டீகோ நகரை கைப்பற்றி இருந்தார். ஜனவரி 8 இல் காஸ்ட்ரோ சேவுடன் இணைந்தார். காஸ்ட்ரோ கியூபாவின் அதிபரானார். தனது நம்பிக்கைக்குரிய தளபதி சே கியூபாவின் குடிமகனாக பிரகடனப்படுத்தப் பட்டார். கியூபாவின் அரசியலில் பல முக்கிய பதவிகளில் சே அமர்த்தப்பட்டார். ஐ.நாவில் கியூபாவின் சார்பாக உரை நிகழ்த்தினார்.
சே தனது அடுத்த பயணத்திற்கு ஆயத்தமானார்.
லத்தின் அமெரிக்கா முழுவதையும் அமெரிக்காவின் பிடியிலிருந்து
மீட்க பெரும் பாடுபட்டார். 1965 ல் கியூபா வை விட்டு வெளியேறி மற்ற தென் அமெரிக்க நாடுகளின் விடுதலைக்காக போராட தொடங்கினார்.
காங்கோ-கின்ஷாசா வில் முதல் தோல்வி. அதைத் தொடர்ந்து பொலிவியாவிற்கு
சென்றார். ஏராளமான நாட்கள் பொலிவியக் காடுகளில் நீர் ஆகாரமின்றி படையை வழிநடத்தினார்.
முடிவாக CIA வின் உதவியுடன் பொலிவியப் படையினரால் கைது செய்யப்பட்டு பின் சித்ரவதை செய்யப்பட்டார்.
சேகுவேராவை நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்துவதற்கு பொலிவிய அரசு தயங்கியது. உலகம் முழுவதும் அவர் மீது அனுதாபம் ஏற்படும். கண்டன ஆர்ப்பாட்டங்கள் எழும் என்று பொலிவிய அரசு பயந்தது. ஆகவே 8th அக்டோபர் 1967 அன்று சே வை சுட்டுக்கொன்றனர். சேகுவேரா கொல்லப்பட்டது உறுதியானவுடன் அமெரிக்காவின் அட்டூழியத்தை எதிர்த்து உலகம் முழுவதும் மாபெரும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
சேவின் வாழ்க்கை, வரலாற்றின் மேன்மை மிகுந்த பக்கமாகி விட்டது. நாங்கள், எங்கள் குழந்தைகளை சேகுவேராவைப் போல வளர்க்க விரும்புகின்றோம் என்று கியூபா மக்கள் இன்றும் உறுதி எடுக்கின்றனர். "நாங்கள் சே மாதிரி ஆக விரும்புகின்றோம்” கியூபா பள்ளி குழந்தைகளும் இப்படித்தான் உறுதி எடுக்கின்றார்கள்.
வாழ்க்கை முழுவதும் யுத்தங்கள்! போராட்டங்கள்! க்யூபாவின் விடுதலைக்காகப் போராடி க்யூபா விடுவிக்கப்பட்டதும், சேவுக்குப் பல உயர் பதவிகள் அளிக்கப்பட்டன. ஆனால் நாற்காலியில் உட்கார்ந்து ஆவணங்கள் பார்க்கும் விருப்பம் அவருக்கு இல்லை. உதறித் தள்ளிவிட்டு துப்பாக்கி ஏந்தி பொலிவியாவுக்குச் சென்றார். அடர்ந்த காட்டில் உட்கார்ந்து புரட்சிப் படையை உருவாக்கினார். க்யூபாவுக்காகவும், பொலிவியாவுக்காகவும் சே ஏன் போராட வேண்டும்?
ஏகாதிபத்தியம் எந்த வடிவத்தில் வந்தாலும் அதை எதிர்க்க வேண்டும். சேவின் வாழ்வு மட்டுமல்ல, அவரது மரணமும் இந்தச் செய்தியைத்தான் உரக்கச் சொல்கிறது. விடுதலை வேட்கை உள்ள அனைவருக்கும் இந்த நிமிடம் வரை உந்துசக்தியாக விளங்கும் சே குவேராவின் வாழ்க்கை நமக்கான பாடம்.
அவர் இன்று மட்டும் உயிரோடு இருந்திருந்தால் நிச்சயம் தமிழ் ஈழத்திற்காகவும் போராடியிருப்பார் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை.
“It is
better to die standing than to live on your knees.“
“( மண்டியிடுவதைவிட மடிவது மேல் )”
Nearly four decades after his death, the legend of Che
Guevara has grown worldwide.
Che Guevara (farewell letter to Fidel Castro; dated April 1, 1965)
“Hatred as an element of the struggle; a
relentless hatred of the enemy, impelling us over and beyond the natural
limitations that man is heir to and transforming him into an effective,
violent, selective and cold killing machine. Our soldiers must be thus; a
people without hatred cannot vanquish a brutal enemy.”
சே குவேரா - குறிப்புகள்
1928
ஜுன் 14 1928, அர்ஜென்டீனாவின்
ரொசாரியோ பகுதியில் எர்னெஸ்டோ குவேரா லின்ச் மற்றும் செலியா டீ லா செர்னா
தம்பதிகளுக்கு மூத்த மகனாகப் பிறந்தார் எர்னெஸ்டோ சே குவேரா.
1932
9 வயது வரை கடுமையான ஆஸ்துமா
நோயின் தாக்கத்தால் பள்ளிக்கு சரிவர செல்லமுடியாமல் தவித்தார். அவரின்
உடல்நிலையைக் கருத்தில் கொண்டு அவரது குடும்பம் பியூனஸ் ஏர்ஸ் பகுதியிலிருந்து
ஆல்டா குரேசியா பகுதிக்கு இடம் பெயர்ந்தது.
1948
பொறியியல் படிக்கவிருந்த தன்
திட்டத்தை மாற்றி, மருத்துவ படிப்பை தேர்ந்தெடுத்தார் எர்னெஸ்டோ. தனது
உடல்நிலையைக் கருத்தில் கொள்ளாமல் பகுதி நேர வேலைகளை செய்துக் கொண்டே பியூனஸ்
ஏர்ஸ் மருத்துவ பல்கலை கழகத்தில் தன் படிப்பைத் தொடர்ந்தார்.
1951-52
அக்டோபர் 1951, எர்னெஸ்டோவும்
அவரது நண்பர் அல்பெர்ட்டோ கிரானெடோவும் லத்தீன் அமெரிக்கா முழுவதுமாய்
சுற்றிப்பார்க்கத் திட்டமிடுகின்றனர். டிசம்பர் மாதம் இருவரும் தங்கள் பயணத்தை
தொடங்குகின்றனர். இந்த பயணத்திற்காக அவர்கள் தேர்ந்தெடுத்தது ஒரு மோட்டார்
சைக்கிள், அதன் பெயர் வலிமை நிறைந்தவன் ( La Poderosa II – The Mighty One ). இந்த
பயணமே சேவிற்குள் விதைக்கப்பட்ட புரட்சி விதை. இந்த பயணத்தின் குறிப்புகளையும்,
அனுபவங்களையும் சேர்த்து மோட்டார் சைக்கிள் டைரீஸ் ( NOTAS DE VIAJE ) எனும் பெயரில் புத்தகமாக
வெளியிடுகிறார். ( இது பிறகு மோட்டார் சைக்கிள் டைரீஸ் எனும் பெயரில்
திரைப்படமாகவும் எடுக்கப்பட்டது. )
1953
மருத்துவப் படிப்பை முடிக்கும்
எர்னெஸ்டோ உடனடியாக அடுத்த பயணத்திற்கு தயாராகிறார். இம்முறை லத்தீன்
அமெரிக்காவின் பொலிவியா, பெரு, ஈக்வடார், பனாமா, கோஸ்டரீகா மற்றும் கௌதமாலா ஆகிய
பகுதிகளை பயணத்திற்காக தேர்ந்தெடுக்கிறார். எர்னெஸ்டோ பொலிவியாவில் இருக்கும் போது
பொலிவியாவில் புரட்சி ஏற்படுகிறது. இந்த பயணத்தின் மூலமாக ஆண்டனியோ லோபஸ் எனும்
கியூபா புரட்சியாளரை சந்திக்கிறார். இந்த பயணத்தின் குறிப்புகள் ON THE ROAD AGAIN (
Otra Vez ) எனும் பெயரில் புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது.
1954
கௌதமாலாவில் தங்கியிருக்கும் போது
சேவின் அரசியல் பார்வை விரிவடைகிறது. அங்கு தேர்தலின் மூலம் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜகோபோ அர்பன்ஸ் அரசு அமெரிக்க ராணுவத்தால்
தூக்கியெறியப்பட்டு, அங்கு ஒரு பொம்மை அரசாங்கம் நியமிக்கப்படுகிறது. கியூபப்
புரட்சியாளர்களின் சந்திப்பால் மெக்சிகோவிற்கு செல்கிறார் எர்னெஸ்டோ. அங்கு பெரு
நாட்டை சேர்ந்த ஹில்டா கடீயா என்பவரை மணம் புரிகிறார். அவர்களுக்கு ஹில்டிடா எனும்
மகள் பிறக்கிறாள்.
1955
பிடல் காஸ்ட்ரோவின் சந்திப்பிற்கு
பிறகு, படிஸ்டா அரசிற்கு எதிரான பிடலின் கொரில்லா படையில் இணைகிறார். அங்கு கியூபர்களால்
அவர் சே என்று அழைக்கப்படுகிறார். அதுவே அவரின் அடையாளமாக நிலைக்கிறது.
மெக்சிகோவிலிருந்து பிடலின் கொரில்லா படை கிரான்மா எனும் படகில் கியூபாவிற்கு
செல்கிறது. அதில் மருத்துவர் பணி சேவிற்கு ஒதுக்கப்படுகிறது.
1956-58
சேவின் கடுமையான ராணுவப் பயிற்சியும்,
அவரின் அசாத்திய போர் திறமையும் பிடலின் ராணுவத்தில் பல பதவி உயர்வுகளை
பெற்றுத்தருகிறது. 1957 ஜுலையில் ராணுவ கமாண்டோவாக பதவி உயர்வு அடைகிறார். 1958
டிசம்பரில் இவரின் தலைமையிலான ராணுவம் கியூபாவின் மத்திய பகுதியான சாண்டா கிளாரா
மாகாணத்தை கைப்பற்றுகிறது.
1959
பிப்ரவரியில் கியூபக் குடிமகனாக
அறிவிக்கப்படுகிறார். அலெய்டா மார்ச் என்பவரை மணம் புரிகிறார், அவர்களுக்கு நான்கு
குழந்தைகள் பிறக்கின்றன. அக்டோபர் மாதத்தில் தொழிற்சங்க தலைவராக நியமிக்கப்படுகிறார்
மற்றும் நவம்பரில் கியூப தேசிய வங்கியின் தலைவராக நியமிக்கப்படுகிறார். சே என
கையெழுத்திட்ட நாணயங்கள் வெளிவருகின்றன.
1960
க்யூப அரசின் பிரதிநிதியாக சோவியத்
யூனியனுக்கு பயணம் மேற்க்கொள்கிறார். அங்கு ஜெர்மனி, செக்கோஸ்லோவாகியா, சீனா
மற்றும் வடகொரியா நாடுகளுடன் சில முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுகிறார்.
1961
கியூபாவில் பிடல் காஸ்ட்ரோவின்
தலைமையில் அமைந்த புதிய அரசில் தொழிற்துறை அமைச்சராக பொறுப்பேற்கிறார்.
1962
இரண்டாம் முறையாக சோவியத்திற்கு
பயணம் மேற்க்கொள்கிறார்.
1966
பொலிவியாவிற்கு செல்கிறார் சே
1967
ஏப்ரலில் சேவின் இரண்டு, மூன்று,
நிறைய வியட்னாம் உருவாக வேண்டும் என்ற செய்தியுடன் “MESSAGE TO THE
TRICONTINENTAL” வெளியிடப்படுகிறது. அதே மாதத்தில் பொலிவிய
ராணுவத்தினரால் கைது செய்யப்படுகிறார். அமெரிக்காவின் அறிவுறுத்தலின் படி அடுத்த
நாளே அவரை கொலை செய்கிறது பொலிவிய அரசு. அக்டோபர் 8, சென்ற நூற்றாண்டின்
தன்னிகரற்ற நாயகன் சே குவேராவின் உயிர் பிரிக்கப்படுகிறது.
1997
அவரின் சாம்பல் பொலிவிய
அரசிடமிருந்து பெறப்பட்டு, கியூபாவின் சாண்டா கிளாரா மாகாணத்தில் அவருடைய
நினைவிடத்தில் வைக்கப்படுகிறது.
விஜய் Che
No comments:
Post a Comment