தெளிந்த நீரோடையாய்
முகம் இருக்க
நெற்றிச் சுருக்கங்களோ
இவ்விடம் நானில்லை
என்பதை
இன்னலின்றி சொல்லிமுடித்தது ...
இவள் முன்னே அசையும்
நிழல் கண்டு நின்றாள்
இவள் பின்னே இவன் நிஜம்
ஆயிரம் முறை எதிர் கண்டும்
இவன் முகத்தின் வனப்பைவிட -கால்
நகங்களின் ஈர்ப்பு கொண்டே
சொக்கி நின்றாள் இவனிவள்...
யாருமறியா
அரவமில்லா இரவுகளின்
தனிமைகளில்
இவன் பெயர் சொல்லி திரியும்
கிறுக்கியாக என்றுமிவள்….
இவனின் முதலெழுத்தே
தெரியாமல்
இவள் தலையெழுத்தை-இவன்
வசம் சேர்க்கும்
தீரமும் சேர்ந்துவிட்டது…
இப்படியே காத்திருப்பாள்
இவள்
இதழ் இசைத்து
கன்னம் சிவக்க
வெட்கம் முளைக்கும்
சின்னப் பார்வையிலே
இவனுடனான இவளுலகை
இவன் அறியும் வரை....
- சித்ரா கா
ஆழ்ந்து யோசித்தால் மிகவும் நுட்பமான வரிகள் - மிக அருமை
ReplyDeletearumai chitra ..
ReplyDeleteஅழகாய் இருக்கிறது சித்ரா உங்கள் வரிகள்...
ReplyDeleteசிறப்பான வரிகள்...
ReplyDelete