Sunday 24 March 2013

உதிரத்தில் சிவந்தது






தாயினை தவிர்த்து தந்தையை எதிர்த்து

தாரத்தை நினைத்து தருமத்தை தழைத்து

சிவந்தது உந்தன் சிரங்கள் குருதியில் தானோ!!!

உன் சிறுகதை கேட்டேன் சிறுவனான நான்


கலங்கிய நெஞ்சங்கள் கவலையை மறக்க

களைப்பினை மறந்து கலங்கரையாய் நின்றாய்

உண்மையாய் நடித்தவன் முகத்திரை கிழிக்க

உன்னில் பலரை இழந்துதான் உழைத்தாய்


நீ இருப்பதன் நுகர்வினை அறிந்தவன் உண்டோ???

சிங்கத்தை குகையினில் கண்டவன் எவன்???

உயிருடன் திரும்பலாம் கனவினில் அவன்!!!

வலியினை கடந்துதான் வலிமையை கண்டாய்


வீரத்தமிழனின் உணர்வுடன் உயர்ந்து நின்றாய்

உறைவாள் கொண்டவனின் தலையினை கொய்தாய்

உன் இனத்தினுள் நீந்தி உன் நித்திரை மறந்தாய்


சுற்றம் குறையும் சூழ்நிலை ஆக– தொடரும்

இழப்புகள் உன்னை துன்பத்தில் ஆழ்த்த

முன்னேரும் தருவாயை நோக்கி நீ முன்மொழிய

இழப்பினை மறந்து புலிகள் வழிமொழிய!!!


உச்சத்தினை அடைய தருணம் கிட்டுமென

வெற்றியை ருசிக்க நீ வீரமாய் நடந்தாய்

தொடர்ந்தது உன் பின்னால் கூட்டம் – எனினும்
   
இழப்பு இம்முறையும் வெல்ல முற்பட்டதோ??


வீரத்தின் அழகினை உன் முகத்தினில் காணலாம்.

முகம் காட்ட மறுத்த மிருகம்

உன் இருப்பிடம் வந்து உயிரினை கவர...

அறியாமையை முகத்திலும்!!!!!!!!!!

வறுமையை வயிற்றிலும்!!!!!!!!!!!

பசியுடன் இருந்த உன் தலைமுறை பாலகன்

ருசியினை காணும் முன் இறைவனை கண்டான்.


முடிவினை காணாமல் தொடரும் இந்த வெறி

அரசியல் அறிந்தவன் அமைதியாய்

அகலும் காலம் கண்டேன்

                                             
இளைய தலைமுறை கலங்குவான்
       
எதிர்ப்பினை தொடருவான்..

வழியினை அறிவான்

அரியணை ஏறுவான்

இழப்பு இன்று ஈழம் ஆனது.


                                                                                                           

                                                         சாரல் வினோதன்         


    

6 comments:

  1. மாற்றம் நிச்சியம் நிகழும். மாவீரன் வாழ்வான் அணைவர் நெஞ்சத்திலும்...... நல்ல கவிதை நண்பா...

    ReplyDelete
  2. ஆரம்பமே அமர்களமாக இருக்கிறது நண்பா
    உன்னில் கொதிக்கும் உதிரம் என்னுள்ளும் கொதிக்கிறது நண்பா.

    ReplyDelete
  3. Arumai nanba.....enakku tamil ezham patri mulusa theriyathu..... unga padaippu moolama konjam therinjikiiten...

    ReplyDelete