Tuesday 5 March 2013

பாவ நகரம் - V



___________________________________________________________________________________
ஆசிட் வீச்சில் உயிரிழந்த வினோதினியை தொடர்ந்து சென்னையை சேர்ந்த வித்யா என்ற பெண்ணும் உயிரை இழந்துள்ளார்.                           -செய்தி
___________________________________________________________________________________

பாவ நகரம் - V

பாவ நகரத் தலைமை வங்கி:

      தலைவன் ஆழமான யோசனையில் இருந்தான்.  அவனுடன் வந்த மூன்று பேரில் ஒருவனைப் பார்த்து ஏதோ சைகை செய்தான். அவன் வங்கியிலிருந்த ஒரு கணினியில் இணையத்தைப் பயன்படுத்தி பாவ நகரத்தின் செய்தி தொலைக்காட்சி ஒன்றின் இணைய பக்கத்தை திறந்தான். அதில் செய்தி நேரடியாக ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. குண்டு வெடிப்பைப் பற்றி எந்த செய்தியும் இல்லை. இன்னும் சில நேரம் ஆகலாம். 


      அவனது யோசனையை அந்த அழைப்பு கலைத்தது.  கீதா எதிர் முனையில் பேசினாள்.


      இன்னும் எந்த செய்தியும் இல்லை"
     
      ஆம், பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். மத்த போலீஸ் ஸ்டேசன்?"

      இன்னும் விஷயம் போகலை"
     
      பக்கத்துல ஏதாவது போலீஸ்?”

      ஒரு சிக்னல்ல ரெண்டு ட்ராபிக் போலீஸ் இருக்காங்க. அவங்களும், பகுதி 2, 3, 4 போலீஸ் ஸ்டேசன்ல இருக்கறவங்களும் தான் பத்து நிமிஷத்துல உங்கள நெருங்க முடியும். மத்த எங்கிருந்து போலீஸ் வந்தாலும் குறைஞ்சது அரை மணி நேரம் ஆகும்."
     
      பகுதி 2, 3 போலீஸ் ஸ்டேசன் இன்னும் ரெண்டு நிமிசத்துல காணாம போயிடும்"

      அங்க நல்லவங்களும் இருக்காங்களே?”
     
      சுரேஷ் நல்லவந்தானே?”

      கீதா அமைதியானாள்.

      அந்த உயிர்?”

      சில நொடி அமைதிக்குப் பின் கீதா அழுத்தமாக சொன்னாள்.

      அதை நான் மட்டுமே எடுப்பேன்"
     
      சரி அப்போ பகுதி 2, 3  தீபாவளி கொண்டாடிறேன்" தலைவன் இணைப்பை துண்டித்து விட்டு வேறோரு கைபேசியில் இரண்டு எண்களை சில நொடி இடைவேளையில் அழுத்தினான்.


பாவ நகரம் பகுதி நான்கு காவல் நிலையம்:


      ஆதியை சமமாக அமர வைத்து ஆய்வாளர் பேசிக் கொண்டிருந்தார். அடுத்த மாதம் பெண்ணுக்கு திருமணம் வைத்திருப்பதாகவும், செலவு அதிகம் என்றும் சொன்னார். ஆதி அவரிடம் ஒரு பணக் கட்டை எடுத்து நிட்டினான்.

      "நீங்க தான் அந்த பொண்ண ரெண்டு மூணு வாட்டி போய் பாத்து பேசி கேஸ வாபஸ் வாங்க வெச்சதா பசங்க சொண்ணாங்க"

      "இதுல என்னங்க இருக்கு"

      "சரி அப்ப நான் கிளம்பவா?"

      அதற்குள் தலைமை காவலர் ஆய்வாளர் காதில் ஏதோ கிசுகிசுத்தார்.

      "சீக்கிரம் வாங்க வெளிய போகனும்" என ஆதியின் கையை பிடித்து இழுத்துக் கொண்டு வாயிலை நோக்கி ஓடினார் ஆய்வாளர்.

      "என்னாச்சு?"

      "மூணு போலீஸ் ஸ்டேசனல குண்டு வெடிச்சிருக்காம்"

      ஆதி இப்பொது வேகமாக வாயிலை நோக்கி ஒடினான், உடன் அனைத்துக் காவலர்களும்.

      ஆதி வேகமாக வெளி வருவதைப் பார்த்த அவனது ஆள் கையிலிருந்த பத்து ரூபாயை எடுத்து நீட்டினான். அப்பொது அவன் பயங்கர குண்டு வெடிப்பு சத்தத்தைக் கேட்டான். என்னவென்று திரும்பிப் பார்ப்பதற்குள் அவனை ஒரு ராட்சத உந்து சக்தி கீழே தள்ளியது. சில நிமிடங்களில் மயக்கம் தெளிந்தவன் தன்னிடம் ஏதோ குறைவதாய் உணர்ந்தான். அரை மயக்கத்தொடு வலப் பக்கம் திரும்பிப் பார்த்தவன் பயங்கரமாக அலறினான். அங்கே அவனது கை அந்த பத்து ரூபாய் நோட்டுடன் சேர்ந்து கருகியிருந்தது.

பாவ நகரத் தலைமை வங்கி::

      வங்கி வெளியே ஒரு சிறு கூட்டம் சேர்ந்திருந்தது. செய்தியில் குண்டு வெடிப்புப் பற்றி சொல்லிக் கொண்டிருந்தார்கள். அதை அனைவரிடமும் காண்பித்த தலைவன்,

      "இங்கயும் இது மாதிரி ஒரு பாமும், உங்களுக்கு தெரியாம் ஒரு மைக்கும் வெச்சிருக்கோம். நாங்க போன கொஞ்ச நேரத்துல போலீஸ் வருவாங்க. அதுக்குள்ள இங்கிருந்து வெளிய போகவோ, யார்கிட்டயும் பேசவோ கூடாது. எல்லாரும் செலான் எடுத்து நார்மலா பில் பண்ணுங்க. ஏதாவது தப்பு நடந்துச்சு" என ரிமோட் கண்ட்ரோல் போன்ற ஒரு பொருளைக் காண்பித்தான்.

      பின் சிறிது நேரத்திற்கு முன் அவனிடம் அடி வாங்கியவனை அழைத்தான்.


பாவ நகர கமிஷனர் அலுவலகம்:

      கமிஷனருக்கு சுருக்கமாக வங்கியில் சந்தேகத்திற்கு இடமாக ஏதோ நடப்பதைப் பற்றியும், அருகில் உள்ள காவல் நிலையங்களில் குண்டு வெடித்ததைப் பற்றியும் தகவல் அளிக்கப்பட்டது. சில நொடிகள் யோசித்த பின் கமிஷனர் கேட்டார்,

      "தரண் எங்கயா?"

பாவ நகரத் தலைமை வங்கி::

      சிறிது நேரத்திற்கு முன் அவனிடம் அடி வாங்கியவன், காவலாளி உடையில் வெளிய வந்து கூட்டத்தைக் கலைத்தான்.

      "உள் பக்கம் ஏன் பூட்டுனீங்க?"

      "கம்யூட்டர்ல ஏதோ பிரச்சனை"

      "போங்கய்யா" என அதட்டினான் அவன்.

      கூட்டம் மெதுவாக கலைந்து செல்வதை உணர்ந்த தலைவன் மற்ற மூவருக்கும் சிக்னல் செய்தான். சிலர் வங்கியின் உள்ளே எட்டிப் பார்த்தனர். அனைவரும் அவர்கள் வேலையில் மூழ்கியிருந்தனர். எடுத்தப் பணத்தை ஒரு பெட்டியில் போட்டுக் கொண்டு கிளம்பினர் நால்வரும். கதவருகே வந்தவுடன் நால்வரும் மூகமுடியை கழற்றி விட்டு, உள்ளே வரும் போது அணிந்திருந்த தலை கவசத்தை எடுத்து அணிந்து கொண்டு வெளியே வந்தனர். சில தூரம் நடந்து சென்று எடுத்த வண்டியிலேயே வைத்து விட்டு, அவர்களுக்காக வந்த காரில் ஏறி சென்று விட்டனர்.

      அவர்கள் சென்று பத்து நிமிடம் கழித்து ஒரு போலீஸ் ஜீப் அந்த வங்கியின் முன் வந்து நின்றது.

பாவ நகரத் திரையரங்கம்:


      அங்கிருந்த டிக்கெட் கவுண்டர் முன் ஒரு பெரிய வரிசை நின்றிருந்தது. அதில் இரண்டாவதாக ஒரு ஆஜானுபாகுவான உருவம் நின்றிருந்தது. சில நிமிடங்களில் அந்த உருவம் கவுண்டருக்கு வந்தது.
     
      "Zero dark thirty படத்துக்கு ஒரு டிக்கெட் பூக் பண்ணியிருக்கேன்" என ஒரு முன்பதிவு எண்ணை சொன்னது அந்த உருவம்.
     
      "யூவர் குட் நேம் சார்?"

      அந்த உருவம் மெதுவாக அவனருகில் முகத்தைக் கொண்டு சென்று சிரித்துக் கொண்டே சொன்னது, 
     
                               "தரண்!"

                                                -பாவங்கள் தொடரும்.


6 comments:

  1. என்ன தலைவா புது கேரக்டர் உள்ள வருது.... Express
    வேகத்துல போகுது...

    ReplyDelete
    Replies
    1. அவருதாங்க ஹீரோ!

      Delete
  2. Hero nnu pottunu odachutingale

    ReplyDelete
  3. anyway its just a matter of 2 or 3 episodes before everyone knows him

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. விறுவிறுப்பான நடை... வாழ்த்துக்கள் கார்த்திக்..

      Delete