அடைமழை பெய்யுது பாரு, அதிசயம் வந்து
பாரு,
சிங்காரம் அதோட அடைமொழி பேரு, சென்னை என்ற ஊரு.
வந்தாரை வாழவைக்கும் சென்னை, வியக்க வைக்கும் உன்னை,
தலைநகரம் ஆச்சு, தறுதலையா போச்சு.
பட்டணம் ஆன பட்டினம், பளபளக்கும் இங்க கட்டிடம்,
என்ன இங்க இல்லை, மனுஷன் தானே தொல்லை.
வித விதமா வாகனம், ஜோரா தானே போகணும்,
போக்குவரத்து நெரிசல் சாகா வரம் ஆச்சு.
பக்குவமா பேசு, பச்சை தமிழன் ஊரு,
பத்து பேர அமுக்கி பயணம் பண்ணும் பாரு.
வள்ளுவர் கோட்டம், அண்ணா சதுக்கம் சிறப்பு,
நாளா பக்கமும் சேறு, வாரி தூத்தும் பாரு.
வசை பாடும் பேருந்து, இசை போல கேட்கும்,
அப்பன் போட்ட ரோடானு தப்பா உன்ன ஏய்க்கும்.
கஷ்டம் இங்க நூறு, ஆனாலும் இஷ்டம் இந்த ஊரு,
நாளும் வாழ நடக்கும் ஒரு போரு, புரிஞ்சிக்கிட்டு ஊரு போய் சேரு.
- சிந்துஜா
கஷ்டம் இங்க நூறு, ஆனாலும் இஷ்டம் இந்த ஊரு, liked it
ReplyDeleteiyalba, arumaiya, eliya nadaiyil arputhamana kavithai....
ReplyDeleteSorgame endraalum athu namoorap polavarma........varuma...
ReplyDelete+1000000
Deleteசிங்கார சென்னை நல்லாயிருக்கு..
ReplyDelete