மதம் இனம்
சாதி மொழி கடந்து
வரவேண்டியது
நட்பும் காதலும்
மட்டுமில்லை
மனிதநேயமும் தான்…
யுத்தம் நடக்கும் போது
மட்டும் வருந்துவதும்
கோப்புகளை காணும் போது
மட்டும் கலங்குவதும்
பிரேதங்களை தூக்கும் போது
மட்டும் துடிப்பதும்மல்ல
மனிதம்…
அடைக்கலம் கொடுத்து
அகதிகள் என்றுதான்
அழைக்கிறோம்…
மனிதர்கள் என்று
தலைகுனிந்தாவது வாழ விடுங்கள்
மெச்சிகொள்கிறேன் மாண்பை…
ஊருக்கும் பேருக்குமாய்
உரைக்காதீர்கள்-
அவர்கள் நமக்கு உறவென்று…
.
பொருத்திப் பாருங்கள்
உங்கள் உறவுகளை
அவர்களிடத்தில்
அப்போது புரியும்
ரணத்தின் வேதனை
உயிரின் தேறா மதிப்பு
உணர்வின் தீரா வலி…
ஆதரிக்க வேண்டிய வாதிகள்
அரசியலாக்கிவிட்டனர் பாவிகள்…
முற்றும் அறிந்தும்
சற்றும் துணிந்தும்
எழுத மட்டுமே முடியுமென்பதால்
வெட்கப்படுகிறேன்…
இவ் ஊனப் பிறப்பிற்கு
-சித்ரா கா
சாட்டை அடி......... உண்மை.........
ReplyDeleteமுற்றும் அறிந்தும்
சற்றும் துணிந்தும்
எழுத மட்டுமே முடியுமென்பதால்
வெட்கப்படுகிறேன்…
இவ் ஊனப் பிறப்பிற்கு
+1000000000
Deleteபொருத்திப் பாருங்கள்
ReplyDeleteஉங்கள் உறவுகளை
அவர்களிடத்தில்
அப்போது புரியும்
ரணத்தின் வேதனை
வேடிக்கை பார்ப்பவர்கள் மட்டுமே ஊனப்பிறப்பாக கருதப்படுவர், வேதனைப்படுபவர் அல்லர்.
ReplyDeleteகாலம் மாறும் சித்ரா. விதைத்த விதைகள் பெரும் விருட்சமாக எழும்.
முற்றும் அறிந்தும்
ReplyDeleteசற்றும் துணிந்தும்
எழுத மட்டுமே முடியுமென்பதால்
வெட்கப்படுகிறேன்…
இவ் ஊனப் பிறப்பிற்கு........Unmai sudaathu kondre vidum........arumai chitra......