2014 இப்பவே சூடுப்பிடித்துவிட்டது. காங்கிரஸ் பிரதமர்
வேட்பாளாராக ராகுல் காந்தியும், பா.ஜ.கவின் பிரதமர் வேட்பாளாராக நரேந்திர மோடியும்
கிட்டத்தட்ட அறிவிக்கப்பட்டு விட்டார்கள். மன்மோகன் அரசில் எங்கு பார்த்தாலும்
நிறைந்து கிடக்கும் ஊழல் வழக்குகள், சில்லரை வர்த்தக விவகாரம், விலையேற்றம், பெட்ரோல்
டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிறுவகித்துக்கொள்ளும் உரிமை, விவசாயிகள்
தற்கொலை, செயல்படாத அரசு என ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் விரிந்துக்கிடக்க
காங்கிரசின் ஒரே நம்பிக்கை ராகுல் காந்தி. ஊழல் இல்லாத அரசு, வியத்தகு பொருளாதார
வளர்ச்சி, காங்கிரஸ் அரசின் மீதான மக்களின் கோபம் என அசுர பலத்துடன் நரேந்திர மோடி
இருந்தாலும் ஒரு மதவாதியை சிறுபான்மையினரும், மக்களும் எப்படி ஏற்றுக்கொள்வார்கள்
என்பது கேள்விக்குறியே. காங்கிரசின் தேர்தல் பிரச்சாரமும் அதுவாகத்தான் இருக்கும்
என்பது இந்து பயங்கிரவாதிகளை ஆர்.எஸ்.எஸ் உருவாக்குகிறது என்று கூறிப் பிரச்சனையை
கிளப்பியிருக்கும் உள்துறை அமைச்சர் ஷிண்டேயின் அறிக்கையிலிருந்தே தெளிவாகத்
தெரிகிறது.
இம்முறையும் மூன்றாவது அணியமைக்க முயற்சிகள் நடைபெறும்,
ஆனால் அமையுமா என்பது சந்தேகமே. அப்படியே அமைந்தாலும் யார் தலைவர் என்பதில்
ஒருமித்த கருத்து ஏற்படுவது கடினம். தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் தனித்து
போட்டியென 2014 வெடியின் திரியை கொளுத்திப்போட்டதே ஜெயலலிதா தான். அவரது
அடிபொடிகளும் நாளைய பிரதமர் என்றே ஒவ்வொரு மேடையிலும் கூவி வருகிறார்கள். 40
தொகுதிகளை வைத்துக்கொண்டு ஒரு நாட்டை ஆள்வது அத்தகைய எளிதான காரியமும் இல்லை.
கனவுகளில் இருக்கும் முதல்வரை யாராவது தண்ணி தெளித்து எழுப்பிவிட்டால் அவருக்கும்
நல்லது நமக்கும் நல்லது. அவரது நண்பர் நரேந்திர மோடியை எதிர்த்து அவர் நிற்பாரா
என்பதும் கேள்விக்குறியே. எனவே முதல்வரின் முடிவில் மாற்றம் இருக்கலாம்.
தே.மு.தி.கவை வளைத்துபோடும் முயற்சியில் தி.மு.கவும், காங்கிரஸை வளைத்துபோடும்
முயற்சியில் தே.மு.தி.கவும் முனைப்பு காட்டுகின்றன. காங்கிரசுடன் தனது கூட்டணியை
தி.மு.க தொடருமா என்பது கலைஞரின் அறிக்கையை போலவே புரியாத புதிர்தான், வரும் ஆனா
வராது கதைதான். (2014 வரைக்கும் பொருத்திருக்கணுமானு நீங்க பொளம்புறதும் கேக்குது.
என்ன பண்றது மன்மோகன் மாதிரியே அவர் அரசும் மெதுவா நகருது.)
அடுத்து நம்ம ஒரு சின்ன பிரச்சனைய பத்தி பேசலாம். வீதியில
நடந்து போயிட்டு இருக்கிறப்ப நான் பாத்த கண் கொள்ளா காட்சி. ஒரு படிச்ச தகப்பன்
தன் கைக்குழந்தைய தூக்கிட்டு வரான். எப்படி? தன் ஒரு கையில் குழந்தையும் மறு
கையில் சிகரட் துண்டும். ஆகா! அந்த நச்சுப்புகை உனக்கும் கெட்டது தான். ஆனா
உலகத்தை சமீபத்தில பாத்த அந்த குழந்தை, ரொம்ப பாவம்யா. சிறு வயசுலேயே அந்த
குழந்தையோட உடல் நலம் பாதிக்குமா இல்லையா? படிச்ச பட்டதாரியே இப்படி
நடந்துக்கலாமா? மாறுங்க. எதிர்காலத்தில உன் புள்ள நல்ல காத்த சுவாசிக்கனும்,
தெரிஞ்சுக்கோ....
மரணத் தண்டனை வேண்டுமா வேண்டாமா? எனக்கு என்னமோ வேண்டாம்னு
தான் தோனுது. தப்பு செஞ்சா தண்டனை கொடுக்கனும், சரி. ஆனா அந்த தண்டனை அவன
திருத்தனும், அழிக்க கூடாது. அப்படியே அவன தூக்கில போட்டாலும் மத்தவங்க
திருந்துறாங்கலா? எனக்கு என்னமோ இல்லனுபடுது. மரணத் தண்டனை இருந்தும் குற்றம்
இன்னும் குறையலயே. அதிகமா தான் ஆகுது. அதுக்கு பள்ளிக் கூடத்தில இருந்தே அன்பு,
பாசம் எல்லாம் சொல்லி வளக்கனும். எப்ப வாங்குற மதிப்பெண் தான் ஒருத்தன எடைப்போடுதோ
அப்பவே கல்வி சரியில்லாம போச்சு. பல நாட்டுல மரணத் தண்டனைய நீக்கிட்டாங்க.
உலகத்துக்கு அறவழியில போராடுனு சொல்லித் தந்த நம்ம நாட்டுல இன்னும் நீக்கல.
பொறுத்திருந்து பாப்போம்.
இன்னக்கி எத்தன பேரு நல்லா சந்தோசமா சிரிச்சிங்க?
சாயங்காலம் ஆறு மணிக்கு மேல பாத்தா எல்லாரும் ஏதோ மூஞ்சிய தூக்கி வச்சிக்கிட்டு
வீட்டுகார அம்மவோட சண்ட போட்ட மாறியே இருக்காங்க. காரணமேயில்லாம சிரிங்க. பழைய
ஞாபகத்த நெனச்சுப் பாத்து சிரிங்க. எப்படியோ சிரிங்க. மனசு லேசாகும். ஒரு
புத்துணர்ச்சி கிடைக்கும். மூளை தெளிவா சிந்திக்கும். எல்லாத்தயும் விட நீங்க ரொம்ப
அழகா தெரிவீங்க!!! அதுக்குனு யாரும் இல்லாத ரோட்டுல தனியா சிரிச்சு பழகுறேனு
சிரிச்சு தொலையாதீங்க. தன்னத்தான் நீங்க பயமுறுத்துறீங்கனு நாய் கடிச்சு வைக்க
போகுது. வாங்க என்னவேணும்னாலும் பேசலாம்.....
- யோகி & கோழி
Yes! everything needs to changed from school. Only Education has the power to change this society. Anyway well written and composed.
ReplyDelete