Monday, 18 February 2013

வரலாறு முக்கியம் அமைச்சரே - 3


வேத காலம்

சிந்து சமவெளி நாகரிக அழிவின் பிறகு தொடங்கியது ஆரியர்களின் ஆதிக்கம். ஆரியர்கள் 1700 BCE(Before Common Era) முதல் 500 BCE வரை இந்தியாவை வலம் வந்தனர் என்கிறது சரித்திரம். இந்த காலத்தில் தான் வேதங்கள் இயற்றப்பட்டிருக்கக் கூடும் என்றும் ஆரியர்கள் வேதங்களைப் பின்பற்றினார்கள் என்றும் கண்டறியப்பட்டுள்ளதுஎனவே, இந்த கால அளவு, வேதங்களின் காலம்(vedic  period) என்று அழைக்கப்படுகிறது. வேதங்கள் தான் இதுவரைக் கண்டறியப்பட்ட ஹிந்து சமய நூல்களுள் மிகவும் தொன்மையானவை. வேத காலத்தின் 1700 BCE  முதல் 1100 BCE வரையிலான காலம், வேதங்களுள் முதன்மையான ரிக் வேத காலம்(Rig vedic period ) என்று அழைக்கப்படுகிறது. வேத காலத்தின் முடிவு 500 BCE-ஆக இருப்பினும் அதன் "Terminus ante quem "(அதுவரை) என்று 150 BCE-யைக் கூறுவர். ஏன் எனில் அதற்கு முன் தான் அனைத்து வேத சமஸ்கிருத இலக்கியங்களும் (Vedic  sanskrit  literatures)  இயற்றி முடிக்கப்பட்டன.

இந்த வேத காலத்தில் வசித்த ஆரியர்கள் யார், அவர்கள் எப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்தார்கள் என்பதை அறிவதே இந்த பகுதியின் நோக்கம்.

ஆரியர்கள் யார்? எங்கிருந்து வந்தார்கள்?

 ஈரான் என்பது பாரசீகத்தின் பழையப் பெயர். இது "ஆர்ய" என்ற சொல்லிலிருந்து எடுக்கப்பட்டது. எனவே ஈரான் என்னும் ஆர்ய நாட்டில் தங்கியவர்கள் ஆரியர்கள்(இந்திய-ஐரோப்பியர்கள்என்றழைக்கப்பட்டார்கள். அப்படியானால் அவர்களின் பூர்வீகம் ஈரானா என்றால்  இல்லை. ஜொராஸ்ட்ரிய மதத்தைப் பின்பற்றிய இவர்களின் அனைத்து ஜொராஸ்ட்ரிய இலக்கியங்களிலும் இவர்களின் பூர்வீகமான "எர்யானே வேஜாஹி"-யைப் (Airyane Vaejahi)  பற்றி பேசியுள்ளன. இதனை அவர்களின் "seedland" என்று ஆங்கிலத்தில் அழைப்பார்கள்.
ஜொராஸ்ட்ரியர்களின் பழமை வாய்ந்த இலக்கியம் தான் "வேந்திதாத்" (Vendidad ). அதன் முதல் பகுதியில் ஆரியர்களின் பொற்காலத்தைப் பற்றியும் அவர்களின் மண்ணை("எர்யானே வேஜாஹி")ஆண்ட மாமன்னன், "யீமா சேதா" (Yima Kshaeta - வேதங்களில் கூறப்பட்டுள்ள யம ராஜாபற்றியும் கூறப்பட்டுள்ளது. பின் வந்த பனி யுகம் தான் இந்த ஆரியர்களைக் தெற்கு நோக்கி பயணிக்க வைத்திருக்கும் என்று நம்பப்படுகிறது. எனவே இவர்கள் இந்த பூர்வீகத்திலிருந்து ஈரான், வட இந்தியா, ரஷ்யா மற்றும் கிரேக்கம்இத்தாலி, ஜெர்மனி, ஃப்ரான்ஸ், இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, ஐயர்லாந்து மற்றும் ஸ்காண்டினேவியா  ஆகிய ஐரோப்பிய  நாடுகளுக்கு இடம் பெயர்ந்தனர்.

இப்படியாய் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நாடுகளின் மலைகளின் வழியே இண்டஸ் நதிக்குக் கொண்டு செல்லும் கைபர் பாஸ் வழியே ஆரியர்கள் இந்தியா வந்தடைந்தார்கள். முதலில் இண்டஸ் நதியின் வட பகுதியான பஞ்சாப் மற்றும் கங்கைக்கு அருகே உள்ள யமுனையில் மட்டுமே தங்கி இருந்த இந்த ஆரியர்கள் வேகமாக வட இந்தியா மற்றும் டெக்கன் பகுதிகளையும் ஆக்கிரமிக்கத் தொடங்கினார்கள்.

ஆரியர்களின் இடப்பெயர்ச்சி





ஆரிய சமூக அமைப்பு
மக்கள் என்றாலே குழுக்கள் கூட்டங்கள் பிரிவுகள் வகுப்புகள் எல்லாம் இன்று சகஜம் தான். ஆனால் இதன் ஆரம்பம் இந்த ஆரியர்களின் காலம் தான். மக்கள் குழுக்களாய் மாற அந்த குறிப்பிட்ட குழுவுக்கு ஏதேனும் ஒரு அடிப்படை ஒற்றுமை இருக்க வேண்டும். உதாரணத்திற்கு ஒரே சமூக வகுப்பை சேர்ந்தவர்கள் ஒரு குழுவாக இருப்பார்கள். இப்படி குழுக்கள் அமைக்க ஆரியர்களுக்கு என்ன அடிப்படை ஒற்றுமை இருந்திருக்க முடியும்? ஆம்! முதலில் அவர்களின் ஒற்றுமை உறவு முறைகளில் மட்டுமே இருந்தது. எனவே உறவு மற்றும் குலத்தின் அடிப்படையில் முதலில் குழுக்களாய் இருந்தனர். இந்த குழுக்கள், "ஜனா"-க்கள்(Janas) என்று அழைக்கப்பட்டனஒவ்வொரு குழுவையும் ஒரு தலைவன் ஆண்டு வந்தான். அவனின் ராஜ்ஜியம் ஜனராஜ்ஜியம்(Janarajyaஎன்றழைக்கப்பட்டது. ஒவ்வொரு தலைவனுக்கும் உதவியாய் அவன் கீழ் குழுக்கள் பல அமைக்கப்பட்டிருந்தன. அதே போல் ஒவ்வொரு ஜனாவுக்கும் ஒரு தலைமை மதகுரு இருந்தார்.

இடங்கள் பெயர்க்கப் பெயர்க்க இவர்களின் குழுக்கள் அமைக்கும் முறையின் அடிப்படைக் காரணமும் மாறத் தொடங்கியது. உறவுகளின் காரணமாக "ஜனா"-க்களாய் இருந்த இவர்கள் இப்போது தங்கும் இடங்களின் காரணமாக "ஜனபதா"-க்களாக(Janapadas) மாறினார்கள். அவர்களின் ஜனரஜ்ஜியம் "ஜனராஜ்ஜியபதா"(Janarajyapada) என மாறியது. ஜனபதா என்பதற்கு தேசம் என்று பொருள்ஜனரஜ்ஜியபதா என்பதற்கு தேசிய ராஜ்ஜியம் என்று பொருள்.


இப்படி இடத்தின் பெயரால் தங்களை வரையறை செய்துக்கொள்ளும் குணம் இன்றும் நம் இந்தியாவில் தென்படுகிறது. இன்றும் நாம் நம்மை நம் பூர்வீக பிரதேசத்தைக் கொண்டே விவரிக்கின்றோம். இன்றைய இந்தியாவின் முக்கிய பிரதேசங்கள் பலவும் மொழிகள் பலவும் இந்த ஜனபதாக்கள் காலத்தில் தான் பிறந்தன.

இதே போன்று இன்று நம்மில் தென்படும் வகுப்பு பிரிவுகளும் இந்த ஜனபதாக்களின் தாக்கம் தான். முதலில் இவர்கள் தங்களை இரண்டு வகுப்புகளாகத் தான் பிரித்துக்கொண்டனர்- பிரபுக்கள்(Nobles ) மற்றும் பொது மக்கள்(commoners ). நாளடைவில் மேலும் ஒரு பிரிவு சேர்க்கப்பட்டது. அவர்கள் அடிமைகள்(slaves ) என்று அழைக்கப்பட்டனர். இறுதியாக அவர்களின் சமூகம் நான்கு வர்ணங்களைக் கொண்டதாக அமைந்தது. இந்த அமைப்பை " chaturvarnas " என்பர். - பிராமணர்கள், க்ஷத்ரியர்கள், வைசியர்கள் மற்றும்  சூத்ரர்கள். இவர்களைத்தவிர  ஐந்தாவதாக ஒரு வகுப்பு இருந்தது. அவர்கள் தீண்டத்தகாதவர்கள்(Untouchables). இவர்கள் பிறப்பது இல்லை; உருவாக்கப்படுகிறார்கள்.  கீழ்க்கண்ட நெறிகளைப் பின்பற்றாதவர்கள்  தீண்டத்தகாதவர்கள் ஆகிறார்கள்.

1. வேறு  வகுப்போடு சேர்ந்து அமர்ந்து  உணவு உண்ணக் கூடாது.
2. வேறு வகுப்போடு  திருமணம் அறவே கூடாது.

இவற்றை  மீறியவர்கள் தங்கள் வகுப்பிலிருந்து நீக்கப்பட்டு தீண்டத்தகாதவர்களாக முத்திரை அளித்து ஓரங்கட்டப்பட்டனர்இப்படி தான் வகுப்புகளும் ஏற்றத் தாழ்வுகளும் பிறந்தன. இந்த வர்ணங்களுடன் அவரவர் மதங்களின் தாக்கமும் சேர்ந்து பற்பல துணை வகுப்புகளும் பிறந்தன. இந்த வேத காலத்தின் இறுதியில் இந்த வர்ண முறையானது கழுத்தை இறுக்கி பிடிக்கும் அளவுக்கு கெடுபிடியாக இருந்தது.  

பிராமணியக் காலம்(1000-500BC)

வேத காலத்தின் இறுதி சில நூற்றாண்டுகள் பிராமணியக் காலம்(1000-500BCE) என்று அழைக்கப்படும். இந்த நூற்றாண்டுகளில் ஆரியர்கள் கங்கை-யமுனை தோஅப்(Doab - இரு நதிகளின் இடையே உள்ள நிலப் பகுதி) -க்கு செல்ல முனைந்தனர். அந்த நிலப் பகுதி அடர்ந்தக் காடுகளைக் கொண்டது ஆதலால் அதனைக் கடந்து கங்கைக்கு செல்வது அவர்களுக்கு கடினமாகவே இருந்தது. எனினும் அவர்கள் அந்த காடுகளை எரித்து அந்த இடத்தையும் ஆக்கிரமித்தனர்.

கங்கை-யமுனை தோஅப்


இந்த சில நூற்றாண்டுகள் பிராமணர்களின் வசம் இருந்தன. ஆரியர்கள் அனைவரின் வாழ்விலும் பிராமணர்கள் பெரும் பங்கை வகித்தனர். சடங்குகள் அனைத்தும் அவர்களின் ஆணைப் படியே நடந்தன. இந்த காலத்தில் தான் இந்திய கலாச்சாரத்தின் வீர காவியங்களான ராமாயணமும் மகாபாரதமும் இடம்பெற்றன. இந்த காவியங்கள் இயற்றப்பட்ட காலம் 500 BCE மற்றும் 200 BCE ஆக இருந்தாலும் அவை இந்த பிராமணக் கால நிகழ்வுகள் தான். அப்போது தான் அவைகள் உரைக்கப்பட்டன. இந்த இரு காவியங்களும் பண்டைய ஆரியர்களின் பழக்க வழக்கங்கள் எப்படி இந்திய கலாச்சாரத்திற்கு ஏற்ப மாறின என்பதை தெளிவாக உரைக்கும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளன.

இப்படியாய் இன்று நாம் பின்பற்றும் அனைத்து கலாச்சாரங்களுக்கும் வித்தாய் அமைந்த இந்த வேத காலம் எப்படி மகாபாரத போரால் அழிவுக்கு உள்ளாகியது என்பதை அடுத்த பகுதியில் காண்போம்.

                                                                                                                                       -ஜெய கீதா

4 comments:

  1. சில சந்தேகங்கள் தோழி. ஈரானின் பழைய பெயர் பாரசீகமா...? இல்லை பாரசீகத்தின் பழைய பெயர் ஈரானா...? ஆரியர்கள் ஈரான் பகுதியில் இருந்து இடம்பெயர்ந்தவர்கள் என்றால் அவர்களது பேச்சு மொழியாகவோ அல்லது எழுத்து மொழியாகவோ சமஸ்கிருதம் மட்டும்தான் இருந்ததா..? அல்லது வேறு ஏதேனும் அராபிய மொழிகளும் இருந்தா..?

    ReplyDelete
  2. Jayageetha, Nanbarin santhekathinai theerka vendukindren

    ReplyDelete
  3. தாமதத்திற்கு வருந்துகிறேன். ஈரானின் பழையப் பெயர் தான் பாரசீகம். திருத்தியதில் இது விடுபட்டுவிட்டது. ஆரியர்களுக்கென ஒரே மதமோ அல்லது மொழியோ அமையவில்லை. அவர்களுக்கென உரிமையாய் ஒரே கடுவுள் தான் என்று கூறுதற்கும் சான்று இல்லை. அவ்வர்கள் குடிபெயர்ந்த ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு மொழி மதம் மற்றும் கடவுளைக் கொண்டிருந்தனர். Source : Civil services chronicle - indian history.

    ReplyDelete