கள்ளிக்குள்ள பால போல
கண்ணுக்குள்ள உன் நினைப்பு
பட்டிக்குள்ள காள போல
நெஞ்சுக்குள்ள என் தவிப்பு
உசுர் உறிஞ்சு குடிக்குதய்யா
ஒத்தையில உன் சிரிப்பு
உறக்கம் வந்து தொலைக்கலயே
சாமத்துக்கு யார் பொறுப்பு
உசுர் தொட்ட சொல்லால
நோவு தீத்து வச்சீக
உசுரோடு உசுர் கலக்க
தேதி குறிச்சு தந்தீக
ஆள் அரவம் புரியாம
அரண்டு போயிறாத மச்சான்
ஆகாசம் தரத்தட்டி நிக்கும்
மூடுபனி காலமிது.
ஆலம் ஒன்னு தனிச்சிருக்கும்
விழுது ரெண்டு தொக்கி நிக்கும்
சந்தேகமே வேணாம் மச்சான்
எந்தேகமும் அங்க நிக்கும்.
அசதி வந்து ஆள அமுக்கும்
கண் அசந்து உறங்கிடாத
கண்ணுக்குள்ள கனவு கொஞ்சும்
மனம் மயங்கி மருகிடாத
சரசரனு சத்தம் கேட்கும்
சாரையோனு அஞ்சிடாத
பக்குவமா படுத்திருக்கும்
பாறையோனு மிஞ்சிடாத
காவக்காரன் காத்து நிப்பான்
கண்ணுல பட்டுடாத
கயவன் கதவொடைப்பான்
அங்கேயே நின்னுடாத
சீக்கிரமா வா மச்சான்
சீமரயில் வந்து நிக்கும்
செத்த நேரம் கழிஞ்சாலும்
சீவன்மேல அது நிக்கும்.
-யோகி
super kaathal ponga......
ReplyDeleteவட்டார வழக்கில் நல்ல காதல் கவிதை....
ReplyDeleteகிராமத்து காதல் காவியம் இது.... நெகிழச் செய்தது......
ReplyDeletenalla kavithai yoki
ReplyDelete