வலை மூடியப் புகையாய்
தெளிவாய் தெரிந்திருக்கும்
யாருக்கும் என் நிலை
ஏனோ நீ மட்டும்..
அறியவில்லை
முழுநிலவுக்கு முன்
தெரிந்தும் தெரியாமலும்
தெரியும்
மூன்றாம் பிறையாய் நான்
ஏனோ நீ மட்டும்…
ரசிக்கவில்லை
பார்வையில் படாமல்
உன் குரல் கேட்கையில்
பலமாய்த் துடிக்கும்
என் உள்ளத்தின் ஓசையை
ஏனோ நீ மட்டும்…
கேட்கவில்லை
உன் முகம் பார்க்கும்
ஆவலில் தான் புலருகிறது
என் ஒவ்வொரு பொழுதும்…
உன் சுவாசமும் இக்காற்றோடு
என்ற ஆசையில்தான்
என் சுவாசமும் இங்கு என்னோடு…
தவிர்க்க முடியா
உன் நட்பில் என்
சொல்ல முடியா
ஆசைகளும்
மெல்ல முடியா
வார்த்தைகளும்
புதைந்து கிடக்கிறது...
நீ யாரோவாய் இருந்திருந்தால்
இந்நேரம் கொட்டியிருப்பேன்
என் விருப்பங்களை…
தோழனென்று சொன்னதால்
துரோகம் செய்ய இயலவில்லை...
- சித்ரா கா
”வலை மூடிய புகையாய் தெளிவாய் தெரிந்திருக்கும் யாருக்கும் என் நிலை...” மிகச் சிறப்பான வரிகள்...
ReplyDelete”வலை மூடிய புகையாய் தெளிவாய் தெரிந்திருக்கும் யாருக்கும் என் நிலை” இந்த வரிகள் உங்கள் உச்சம் சித்ரா...
ReplyDeleteஇந்த கவிதை கற்பனையா? நிஜமா?
உன் முகம் பார்க்கும்
ReplyDeleteஆவலில் தான் புலருகிறது
என் ஒவ்வொரு பொழுதும்… Aaka..ennaoru kavithai
தவிர்க்க முடியா
ReplyDeleteஉன் நட்பில் என்
சொல்ல முடியா
ஆசைகளும்
மெல்ல முடியா
வார்த்தைகளும்
புதைந்து கிடக்கிறது...
நீ யாரோவாய் இருந்திருந்தால்
இந்நேரம் கொட்டியிருப்பேன்
என் விருப்பங்களை…
தோழனென்று சொன்னதால்
துரோகம் செய்ய இயலவில்லை...
alagu varigal chitra