பாவ நகர தலைமை
மருத்துவமனை:
அந்த நகரம் நன்றாக விழித்துக் கொண்டது. கீதா அந்த மருத்துவமனையின் ICU-வில் நுழைந்தாள். அங்கே சுரேஷ் படுக்கையில்
கிடந்தான். அவனருகில் சிறிது நேரம் அமர்ந்து விட்டு டாக்டரிடம் சென்றாள்.
“டாக்டர், இன்னும் இரண்டு நாளில் நாங்கள்
செல்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முடிந்து விட்டது”
“நல்லது,
மூணு மாசமா கோமால இருக்கிறதால வெளி நாட்டுக்கு கூட்டிக்கிட்டு போய்
ட்ரீட்மெண்ட் பன்றதுதான் நல்லது.”
“ஓகே டாக்டர்! நான் கிளம்புறேன்” கீதா வெளியே வந்தாள். தன்னுடைய இரு சக்கர
வாகனத்தில் தன் இருப்பிடம் அடைந்தாள். அது ஒரு குடியிருப்பு. இரண்டு மாதங்களுக்கு
முன் அவளும் சுரேஷும் திருமணம் செய்து கொண்டு அங்கு குடியேருவதாக இருந்து.
அதற்குள்...
அவளின் கைபேசி ஒலித்த்து. அமைதியாக அதை
எடுத்த அவள்
“நான் தயார்” என்றாள்
“நிச்சயமாக அந்த உயிர் உனக்கு வேண்டாமா?”
“இல்லை, சுரேஷின் இந்த நிலைமைக்கு ஒருவன்
மட்டும் காரணமல்ல, அவன் அடிபட்டு கிடந்த போது அவனுக்கு முதலுதவி செய்யக்கூட முன்வராத இந்த பாவ நகரமும் தான். இந்த
பாவ நகரம் செஞ்ச தப்ப சரி பண்ண எனக்கு சில லட்சஞ்கள் தேவைப்படுது. அதை இன்னிக்கு
அவங்க கிட்ட இருந்தே எடுத்துக்கப் போறேன் அவ்ளோதான்”
“சரி. நாங்க அங்க
போனதும் உன்னை கூப்பிடுறேன். உன் கனெக்க்ஷன் எல்லாம் சரியா இருக்கானு பாத்துக்க” எதிர் முனை
துண்டிக்கப் பட அவள் தனது மடிக் கணினியை எழுப்பினாள்.
பாவ நகரம் பகுதி நான்கு காவல் நிலையம்:
அந்த காவல்
நிலையத்தின் முன் அந்த டாடா சுமோ வந்து நின்றது. அதிலிருந்து ஆதி இறங்கினான். ஆதி
மீது பல வழக்குகள் உள்ளன. அவன் ஜாமீனில் வெளி வந்திருந்தான். மாதம் தோறும் ஒரு
முறை வந்து அங்கு உள்ளவர்களை கவனித்து விட்டால், மற்ற நாட்களில் காவலர்களே
கையெழுத்திட்டுக் கொள்வார்கள். வெளியே ஒரு ஆளை நிறுத்தி விட்டு, ஐந்து பேருடன் ஆதி
காவல் நிலையத்தின் உள்ளே சென்றான். அவன் வெளியே வருவதற்கு அரை மணி நேரமாவது ஆகும்
என்பதை உணர்ந்த அவன் எதிரே இருந்த டீக்கடைக்குள் நுழைந்தான்.
“ஓரு டீ”
பாவ நகரம் பகுதி இரண்டு தலைமை வங்கி:
அந்த தலைமை
வங்கிதான் பாவ நகரத்தின் ஒரே வங்கி. கிட்டத்தட்ட அனைத்து மக்களும் அந்தவங்கியில்
தான் பணத்தை சேமித்து வைத்தனர். அந்நகரத்தில் திருட்டு போகாத ஒரே இடமும் அதுதான். ஆனால்
அங்கு நிரம்பியிருந்த அனைவருக்கும் அதுதான் அந்த பெருமையின் கடைசி நாள் என
தெரிருந்திருக்க வாய்ப்பில்லை.
அந்த வங்கி
அமைந்துள்ள தெரு முனையில் ஒரு கார் அமைதியாக ஊர்ந்து வந்து நின்றது. அதிலிருந்து நேற்று
இரவு நான்கு காவல் நிலையங்களில் ஒவ்வொரு கறுப்பு பையை விட்டு வந்த நால்வரும்
இறங்கினர். நேராக வங்கியை நோக்கி நடந்த அவர்கள் வழியில் இருந்த இரு சக்கர
வாகனங்களிருந்த தலை கவசத்தை எடுத்து அணிந்து கொண்டு வங்கியின் கதவை அடைந்தனர்.
அங்கிருந்த
காவலாளி அவர்களை தடுப்பதற்கு முன் அவன் வயிற்றில் துப்பாக்கி வைக்கப்பட்டது. அந்த
காவலாளி சிந்திப்பதற்குள் அவனை உள்ளே தள்ளி அந்தக் கதவை உள்ளிருந்து பூட்டினர். அவர்கள்
கையிலிருந்த துப்பாக்கிக் குண்டுகளுக்கு முதலில் இரையாக்கப் பட்டது அங்கிருந்த
கண்காணிப்பு கேமராக்கள்.
துப்பாக்கி
சத்தம் கேட்ட அனைவரும் அலற ஆரம்பித்தனர். அந்தக் கும்பலில் ஒருவன் அங்கிருந்த மேஜையில்
ஏறினான்.
“எல்லாரும்
அமைதியா இருந்தா உயிர் பொழைக்கலாம்” என அவன் ஆரம்பித்து அந்த கும்பலின் தலைவனைப் பார்த்தான்.
தலைவன் மற்றொருவனைப் பார்க்க அவன் தன் கைபேசியில் ஒரு எண்னை அழுத்தி தொடர்பை
ஏற்படுத்தினான்.
எதிர்
முனையில் பேசிய கீதா “இன்னும்
விஷயம் தெரியலை” என்றாள். அவள்
அந்த வங்கியை சுற்றியுள்ள பகுதி 1, 2, 3, 4 காவல் நிலையங்களின் தொலைபேசி
உரையாடல்களை ஓட்டுக் கேட்டுக் கொண்டிருந்தாள்.
“இங்கு யாராவது போலிஸீக்கு தகவல்
சொன்னா 10 10 பேரா 40 பேர் செத்து போவாங்க” என மிரட்டினான்.
பத்து நிமிடத்தில் அனைவரையும் படுக்க
வைத்தனர். அனைவரது கைப்பேசியும் பிடுங்கப் பட்டது. ஒவ்வொரு காஷியரின் அறையிலிருந்த பணத்தை ஒருவன் எடுத்தான். மற்றவர்களிடமிருந்த
பணத்தை ஒருவன் எடுத்தான். சிறிது நேரத்தில் அப்பணத்தை எண்ணிய ஒருவன் இன்னும் 2
லட்சம் குறையுது என்றான். தலைவன் ஏதோ சைகை செய்ய ஒருவன் அந்த காவலாளியை அழைத்துக்
கொண்டு, மானேஜரிடம் ஒரு சாவியை வாங்கிக் கொண்டு லாக்கர் ரூமில் நுழைந்தான்.
லாக்கர்
ரூமில் இவர்களை பின்தொடர்ந்த தலைவன் அவர்கள் பணத்தை எடுக்கும் வரை அமைதியாக
இருந்தான். பின் ஒரு பணக் கட்டை எடுத்துக் கொண்டு காவலாளியிடம் சென்று
“இதை எடுத்துக் கொள், நாங்கள் திருடியதாகவே
இருக்கட்டும்” என்றான்.
“டேய்! நான் ஒரு ரிட்டையர்டு போலீஸ். உங்களோட அடையாளங்கள பாத்துட்டேன்”
“அதனால...”
“வீணா, போலீஸ் துப்பாக்கிக்கு பலி ஆகிடாதிங்க”
“எப்புடி, ஒரு 5 வருஷம் முன்னாடி 5 பேர கொன்னிங்களே அது
மாதிரியா...”
அந்த காவலாளிக்கு பின் மண்டையில் ஏதோ ஒன்று உதைக்கவும்,
வயிற்றில் பயம் படரவும் சரியாக இருந்தது.
“மறந்துப் போச்சா?” எனக் கேட்டுக் கொண்டே அவன்
துப்பாக்கியை காவலாளியின் நெற்றியில்
வைத்து அழுத்தினான்.
“டேய்! வேணா!” என்று அவன் கதறுவதற்கும்,
வெளியே
இருந்தவர்களுக்கு துப்பாக்கி சுடும் சத்தம் கேட்பதற்கும் சரியாக இருந்தது.
விறுவிறுப்பாக இருக்கிறது நண்பா...
ReplyDeleteநன்றி
Deleteஅடுத்து என்ன தலைவா..... இன்னும் என்ன சஸ்பென்ஸ் இருக்கு?
ReplyDeleteInteresting....
ReplyDelete