Friday, 22 February 2013

இனி எல்லாம் நீயல்லவோ??!!





யாவுமிழந்து
உனையே உலகமென
உன் பாதியாய் வந்தவள் இவள்

நீதான் கணவனென
கனவுகளில் வாழ்ந்திருந்தாள்
கன்னியிவள் மணம் வரை

பந்தலிலே மன்னவனாய்
பக்கம் நீ இருந்தும்
பதறிய கரங்களை 
பக்குவமாய் பிடித்திருந்து 
ஆறுதலாய் தோழனென
உடனிருந்தாய்…

மஞ்சள் கொடியின்
மகிமை உணர்த்தி
நெற்றி வகிட்டில்
திலகம் வைத்து
சுட்டு விரலில்
மெட்டியிட்டு அவளைக்
கட்டிக்கொண்டாய் கணவனாய்...

கெஞ்சல் மொழியில்
கொஞ்சல் பழகிட
செல்லச் சண்டையில்
தொல்லை கொடுத்திட
கோதை இவள் கண் முன்னே
கண்ணனை காண வைத்தாய்

இல்லறம் நலமாக
எல்லாமே இனி நீயே
என்றிருந்த அவளிடம்
நீ
சண்டையிட்டு சென்றிருப்பின்
சாகும் வரை....காத்திருந்திருப்பாள்
நீ
சந்தேகம் கொண்டதாலே
சங்கடத்தில்
தீயில் நின்றாள்

-சித்ரா கா

5 comments:

  1. அழகான வரிகள்!!!!!!! வாழ்த்துக்கள் சித்ரா

    ReplyDelete
  2. சாவதற்கென்று பிறக்கவில்லை யாரும், சாதிக்கவே பிறந்தவர். நல்ல வரிகள்....

    ReplyDelete
  3. நீ
    சண்டையிட்டு சென்றிருப்பின்
    சாகும் வரை....காத்திருந்திருப்பாள்
    நீ
    சந்தேகம் கொண்டதாலே
    சங்கடத்தில்
    தீயில் நின்றாள்…...

    சந்தேகம்......இல்லறத்தை பொசுக்கிவிடும்.... நல்ல படைப்பு சித்ரா

    ReplyDelete
  4. கண்ணம்மா8 March 2013 at 14:42

    இல்லறம் நலமாக
    எல்லாமே இனி நீயே
    என்றிருந்த அவளிடம்
    நீ
    சண்டையிட்டு சென்றிருப்பின்
    சாகும் வரை....காத்திருந்திருப்பாள்
    நீ
    சந்தேகம் கொண்டதாலே
    சங்கடத்தில்
    தீயில் நின்றாள்…

    arumayana varigal chitra

    ReplyDelete