Monday, 25 February 2013

மூக்குத்திப் பெண்னே!



















கொத்திக் கொத்திப் போகின்றாய்
மூக்குத்திப் பெண்ணே - உன்
பிஞ்சுக் குரலில் எனை
திட்டிக் கொண்டே கரம்
பற்றிக் கொண்டே போகின்றாய்

விக்கிக் கொண்டே போகின்றேன்
மூக்குத்திப் பெண்ணேஎன்
தொண்டைக் குழியில் உனை
வைத்துக் கொண்டே தினம்
திக்கிக் கொண்டே போகின்றேன்

பத்திக் கொண்டே போகின்றாய்
மூக்குத்திப் பெண்ணே - உன்
நெத்திப் பொட்டில் எனை
சுத்திக் கொண்டே அதை
தொட்டுக் கொண்டே போகின்றாய்

வத்திக் கொண்டே போகின்றேன்
மூக்குத்திப் பெண்ணே - உன்
எண்ணக் கடலில் தினம்
சிக்கிக் கொண்டே
தரை தட்டிக் கொண்டே போகின்றேன் 

தொத்திக் கொண்டே போகின்றாய்
மூக்குத்திப் பெண்ணே - உன்
அச்சுக் குழலில் எனை
தச்சுக் கொண்டே மனம்
பிச்சுக் கொண்டே போகின்றாய்

மக்கிக் கொண்டே போகின்றேன்
மூக்குத்திப் பெண்ணேஎன்
மிச்ச உயிரில் உனை
மொய்த்துக் கொண்டே தினம்
பொய்த்துக் கொண்டே போகின்றேன்
                             
                                                                       - விஜய் Che

9 comments:

  1. Super ah iruku thala.... mookuthiyai mattum kaati, mugathai maraichutingale....

    ReplyDelete
  2. Nalla irukku Vijai :)

    @chakravarthy : Idhu oru nalla kelvi

    ReplyDelete
  3. நன்றி தோழி

    ReplyDelete
  4. கண்ணம்மா8 March 2013 at 14:38

    மூக்குத்திப் பெண்னே!
    தங்கள் மூக்குத்திப் பெண் அழகோ அழகு..

    ReplyDelete
    Replies
    1. நன்றி தோழி கண்ணம்மா

      Delete
  5. நெத்திப் பொட்டில் எனை
    சுத்திக் கொண்டே அதை
    தொட்டுக் கொண்டே போகின்றாய்....Loved a lot......

    ReplyDelete