அந்த துப்பாக்கி சத்தம் வெளியே இருந்த அனைவரின் மத்தியிலும் மேலும் பயத்தை அதிகப்படுத்தியது. சில நிமிடங்களில் தலைவனும் மற்றொருவனும் வெளியே வந்தனர். மீண்டும் கீதாவுக்கு அழைப்பு சென்றது.
“ஓரு ஆம்பிளை கூடவா அங்கே இல்லை. இன்னும் போலிஸீக்கு விஷயம் தெரியலை"
என்றாள்.” என்னுடைய பணம் இன்னும் வரலையே"
“ஓரு அஞ்சு நிமிஷம்"
என தொடர்பைத் துண்டித்தான்.
தலைவன் அங்கே இருப்பவர்களைப் பார்த்து கேட்டான்.
“இங்க யாராவது கார் வெச்சிருக்கீங்களா?”
நிசப்தம்.
மீண்டும் தலைவன் சொன்னான், “என்னோட லெட்டர கமஷனர் ஆபிஸ் வரைக்கும் கொண்டு போய் கொடுக்கனும்.”
உடனே ஐந்தாறு தலைகள் எழுந்தன.
அனைவரையும் இருக்கையில் அமர வைத்தனர்.
ஒரு மடிக்கணினி முதல் ஆளிடம் தரப்பட்டது. அதில் இணைய வசதிக்காக ஒரு சிறிய கருவி இணைக்கப்பட்டிருந்தது.
“உன்னோட பேங்க் அக்கவுண்ட்ட ஒப்பன் பண்ணு"
“எதற்கு?”
அவன் கேட்டு முடிப்பதற்குள் அவனது கன்னத்தில் அடி விழுந்து வாயின் ஓரம் ரத்தம் ஒரு கோடாக சென்றது.
அவன் அவனுடைய
வங்கி கணக்கைத் திறந்தான். கொள்ளைக் கும்பலில் ஒருவன் அதை வாங்கி அதிலிருந்தப் பணத்தை மற்றொரு கணக்கிற்கு மாற்றிக் கொண்டான்.
இவ்வாறு அனைவரின் வங்கி கணக்குகளில் இருந்தப் பணத்தை தங்கள் கணக்கிற்கு மாற்றிக் கொண்டனர்.
மீண்டும் கீதா அழைக்கப்பட்டாள்.
“பணம் வந்து விட்டதா?”
“வந்து விட்டது"
“தகவல்"
“இன்னும் எதுவுமில்லை"
“அந்த உயிர்"
கீதா மௌனமானாள்.
தலைவன் மீண்டும் கேட்டான்.
“அந்த உயிர்?"
கீதா பேசுவதற்குள் ஒரு தொலைபேசி அழைப்பு, பகுதி ஒன்று காவல் நிலையத்திற்கு சென்றது.
பாவ நகரம் பகுதி ஒன்று காவல் நிலையம்:
வெங்கடேசன் இரவு பணி முடிந்து சிறிது நேரம் காவல் நிலையத்திலேயே தூங்கி விட்டு வீட்டிற்கு கிளம்பினார்.
நேற்று இரவு யாரோ விட்டுப்போன பையை பத்திரப்படுத்தி எடுத்துக் கொண்டார்.
ஆய்வாளர் அறையில் சென்று அவருக்கு ஒரு வணக்கம் வைத்து விட்டு கிளம்புகையில் ஆய்வாளரின் தொலைபேசி அலறியது.
“எடுங்க வெங்கடேசன்"
“ஹலோ"
“கண்ட்ரோல் ரூமிலிருந்து பேசுகிறோம்"
“சார் கண்ட்ரோல் ரூம்" என்றதும் ஆய்வாளர் தொலைபேசியை வாங்கினார்.
“சென்ட்ரல் பேங்க் உள் பக்கம் பூட்டி இருக்கிறதா அங்கிருந்து ரெண்டு மூணு கால் வந்திடுச்சி.
உங்களுக்கு தான் அது பக்கம்.
போய் பாக்கரிங்களா"
“ஓகே" தொடர்பைத் துண்டித்த ஆய்வாளர்.
“பேங்க் வரைக்கும் போறேன் வாங்க போற வழியிலேயே இறக்கி விட்டுறேன்.”
என்றார்.
பின் "ஆமா! அது என்ன பை" என அந்த கருப்பு பையை
நோக்கினார்.
வெங்கடேசன்
நெளிய ஆரம்பித்தவுடனேயே அவருக்கு புரிந்து விட்டது.
“சரி, சரி வாங்க!” என் அழைத்துக்
கொண்டு கிளம்பினார்.
பாவ நகரம் பகுதி இரண்டு தலைமை
வங்கி:
கீதா பேச்சிலேயே அவசரத்தை தெளித்தாள். “யாரோ சொல்லிட்டாங்க. பேங்க் உள் பக்கம்
பூட்டியிருக்குனு.”
தலைவன் நிதானமாக கேட்டான் “எந்த போலீஸ் ஸ்டேசன்?”
“பகுதி 1”
“நான் பார்த்துக் கொள்கிறேன்”
போனை துண்டித்த அவன் மற்றொரு கைபேசியை எடுத்து ஒரு நம்பரை
அழைத்தான்.
பாவ நகரம் பகுதி ஒன்று காவல் நிலையம்:
வெளியே வரும் போது ஏதோ கைப்பேசி ஒலிப்பது
போன்ற ஓசை கேட்டவே ஆய்வாளரும், வெங்கடேசனும் ஆய்வாளர் கதவருகே நின்றனர்.
“அந்தப் பையில இருந்து தான்யா
வருது” என ஆய்வாளர்
சொன்னதும், பையை ஆராய்ந்தார் வெங்கடேசன். மேலே இருந்த
துணிகளை விலக்கி பார்த்ததும், உள்ளே ஒரு கைப்பேசியும், அதனுடன் வயர் மூலம்
இணைக்கப்பட்ட ஒரு கருப்பு பெட்டியும் இருந்தது.
“சார்...” என்ற வெங்கடேசனின் அலறல் அந்த குண்டு வெடித்த சத்தத்தில்
மறைந்து போனது.
Super Karthi..... Please dont lose the thrill....
ReplyDeleteWill try to give my best
DeleteKaarthi......well...done... keep rocking
ReplyDeleteThanks Vijai
ReplyDelete